அதை ஒன்றிய அரசு தான் எடுக்க முடியும். அந்த அதிகாரம் மாநில அரசிற்கும் வேண்டும் என்று தான் திமுக போராடுது. அதில் அதிமுக வின் நிலைப்பாடு என்ன?! அதை சொல்லுங்க முதலில். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
@withkaran இதுலாம் வேளச்சேரி இரட்டை பிள்ளையார் கோயில் தெருவுல ஆகாத போட்டோவா தெருவுல வைச்சுட்டு போயிருக்கானுங்க இன்னைக்கு அது உடைஞ்சு கண்ணாடியா கிடக்கு இப்படி பொறுப்பில்லாத மக்களை வைச்சுகிட்டு 4000 கோடி இல்ல எவ்வளவு செலவு பண்ணாலும் வேஸ்ட்
மாமாவோட வயித்தெரிச்சல் பதில் ஒரு பக்கம் கிடக்கட்டும்! இந்த அரசு நூலக ஆர்டர்ல்லாம் கேன்சல் பண்ணுன வெமாசூசொ நடவடிக்கையெல்லாம் எப்போ நடந்துச்சுன்னுதான் வியப்பா இருக்கு. 😳
Tamil Nadu is ranked as a 'Top Performer' (Category A) in the 5th edition of the States' Startup Ecosystem Ranking (2026).
Globally, Chennai holds the 88th position and is the 18th strongest in the Asia regional rankings.
Tharkuris please 🙏
மாசம் ஆயிரம் ரூபாய் நாங்க கேட்டோமா?
ஓசிப்பஸ் எங்களுக்கு வேண்டாம்..
காலைல பள்ளிக்கூடத்துல போடுற சாப்பாடு ஒன்னும் நல்லா இல்ல..
இது மாதிரி அரசு என்ன நலத்திட்டங்கள் பண்ணாலும் எதிர்க்கிற முட்டா தற்குறி கூட்டங்களே
உங்களுக்கு வேண்டாம்னு தோணுச்சுனா நீங்க பயன்படுத்தாதிங்க..
ஆனா ஒரு கடைநிலை குடும்பத்துக்கு அது எவ்வளவு முக்கியமானதுனு அந்த குடும்பத்துக்கு தெரியும், அந்த திட்டத்தை கொண்டு வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியும்
எல்லாருக்காகவும் செயல்படுறது தான் இந்த அரசு, நெல்லுக்கு இறைக்கும் நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயும் அது மாதிரி தான் இந்த திட்டங்கள் மூலமா நல்லா இருக்குற சிலரும் பயனடையலாம்
அதுக்காக இந்த திட்டங்களையே நிறுத்த முடியாது புல்லுக்கு பாயுதுன்னு நெல்லுக்கும் நீர் இறைக்காமல் காயவிட முடியாது புரியுதா?
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK
“தவெக ஆட்சியில் சாதனை! இனி நாம் நமது புகார்களை அதிகாரப்பூர்வ உதவி எண் மூலம் முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்” எனக் கூறி பரப்பப்படும் செய்திகள் தவறானவை.
இது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதே தொடங்கப்பட்ட நடைமுறை தான். பின்னர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் போதும் இது தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
குறிப்பாக கடந்த திமுக ஆட்சியின் போது, “முதலமைச்சரின் முகவரி” என்றழைக்கப்படும் ஒரு புதிய ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் துறையும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, “முதலமைச்சர் உதவி மையம்”, “முதலமைச்சர் சிறப்புப் பிரிவு”, “ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு அமைப்பு” மற்றும் “உங்கள் தொகுதியில் முதல்வர்” ஆகிய நான்கு துறைகளையும் ஒன்றிணைப்பதன் மூலம், ஏற்கனவே இருந்த பல புகார் கையாளும் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது.
Proof:
https://t.co/vK28jloFsS
https://t.co/Mi9RQhNOay
மிகப்பெரிய வெற்றி!
சமூக ஊடகங்களில் தற்போது பலரும் 'Fact Check' செய்ய தொடங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்று அது அனைவரின் பொறுப்பாகவும் மாறி வருகிறது.
யூடர்ன் ஆரம்பித்ததன் கனவே இதுதான்! பல ஆண்டுகளாக நாங்கள் எதிர்பார்த்த மாற்றமும் இது தான்!
பொய் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும் அனைவருக்கும் யூடர்னின் மனமார்ந்த நன்றி! ❤️
5 நாள்ல 25 கொலைகள் நடந்திருக்கு,
இது எதுவுமே பேசுபொருள் ஆகல பொதுமக்கள்கிட்ட,
அடுத்த 25 கொலைகள் ஒருவாரத்துல நடக்கும் அதுல எவனாச்சும் ஒருத்தன் திமுககாரனா இருப்பான் அது எப்படி தமிழ்நாட்ல பேசுபொருள் ஆகுதுன்னு பாருங்க..?
அப்போ யாரு அதை அவ்ளோ ரீச் ஆக்குறான்னு பார்த்து கத்துக்குங்க
“தவெக ஆட்சியில் தான் முதல் தலித் கல்வித்துறை அமைச்சர்” எனப் பரவும் வதந்தி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், பெஞ்சமின் தமிழ்நாட்டின் முதல் தலித் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், செப்டம்பர் 2024-ல், கோவி செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரே முதல் தலித் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில் தவெக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தற்போது பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகன் தான் முதல் தலித் கல்வித்துறை அமைச்சர் என்று கூறி பலரும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/10oA2Tu1ko
https://t.co/IpLMHkt7jY
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!