பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?
அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமா���்ற?
முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!
ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் ப��றாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.
மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!
#Pattinapakkam #Secretariat #FishermenProtest
CEC Gyanesh Kumar Must Go: He Has No Right to Continue in Office!
The Dravida Munnetra Kazhagam, along with other Opposition parties, has consistently opposed the move to delete crores of voters from the electoral rolls in the name of the Special Intensive Revision (#SIR). Rushed through just months ahead of elections in State after State, the exercise was riddled with irregularities and sparked widespread unrest, particularly in West Bengal.
The explosive findings published by The @IndianExpress today, backed by evidence, have now cast serious doubts over the results of every Assembly election held after the SIR exercise. The investigation reveals that Chief Election Commissioner Thiru. #GyaneshKumar had been acting unilaterally and in secrecy, without the concurrence of the other two Election Commissioners. Even more alarming is the revelation that Thiru. Sukhbir Singh Sandhu and Thiru. Vivek Joshi were kept in the dark about crucial decisions being taken within the very institution they jointly oversee. Their objections to decisions being taken without their knowledge were brushed aside on as many as 14 occasions in just ten months. These revelations have severely eroded the credibility of the Election Commission.
The Election Commission is a three-member body whose business must, as far as possible, be transacted unanimously. Where the Commissioners differ in opinion on any matter, the decision must be based on the majority view. If two of its three members were themselves kept unaware of what was being done in the Commission���s name, this cannot be dismissed as a mere internal or procedural matter. It constitutes a grave assault on Indian democracy. The credibility of an apex institution that is expected to function independently, transparently and without political interference has been seriously compromised.
The revelations concerning the electoral rolls are equally disturbing. Appeals were filed against the inclusion of voters even after courts had ordered that their names be added to the electoral rolls. Who authorised these appeals? Who filed them? The two Election Commissioners themselves say they were kept in the dark.
The law empowers Electoral Registration Officers (EROs) to scrutinise and revise electoral rolls. Yet, they were unable to add even those who had been duly found eligible to vote. ERONet, the digital platform through which these changes had to be made, was entirely under the control of one person. When such concerns are being raised by two serving Election Commissioners, the extent of political interference that may have taken place within the Election Commission is plain to see.
As early as March this year, the DMK, along with other Opposition parties, moved an impeachment motion against Chief Election Commissioner Gyanesh Kumar. He has no right to continue in office any longer. Thiru. #GyaneshKumarMustGo immediately. The SIR exercise must be halted. The DMK demands a fair and thorough investigation into everything that has transpired within the Election Commission and that those responsible be held accountable.
@RitikaChopra__
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது: உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்!
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களம் ஆயின.
இந்நிலையில், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களில் திரு. சுக்பிர் சிங் சந்து மற்றும் திரு. விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.
தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணைய விதி. ஆனால், மூவரில் இருவருக்குத் தாங்கள் பொறுப்பு வகிக்கும் அ��ைப்பில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் இருந்திருக்கிறதென்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இ��ு. சுதந்திரமாகவும் - வெளிப்படைத்தன்மையோடும் - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது.
“நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை.
சட்டப்படி வாக்��ாளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை.
அதைச் செய்வதற்கான ERONet வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.” என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால���, தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண��டும். SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.
மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா விதைத்து - தலைவர் கலைஞர் வளர்த்து - நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி - சுயமரியாதை -
தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!
#DMK78
“எதைப் பற்றி���ும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளி��்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அத��ை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டா��ு.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
▶️ ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு
▶️ இராமநாதபுரம் இரட்டைக் கொலை,
▶️ சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை,
▶️ அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்
என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல�� இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்கா��ு என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண���டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட ��ேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத��� தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எ��்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்��ுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது ��ுடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயன��கப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்
தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநா���ினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு #DravidianModel ஆட்சியில் மேற்கொண்டோம்.
நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்கள�� முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!
🔴⚫️🔴⚫️
திராவிட மாதம் - சிறப்புக் களம்
🔴⚫️🔴⚫️
இன்றைய தலைப்பு:
🗣️ “கலைஞர் ஊழல்வாதியா?”
வரலாற்றைப் பேச, வாருங்கள் களத்திற்கு!
🗓️ நா��்: செப்டம்பர் - 10
⏰ நேரம்: இரவு 8:30 மணி
🎙️ இடம்: @media_tbs (X Space)
அனைவரும் வருக!
#DravidianMonth #XSpace #TBS_MEDIA