என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின��னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
திரு. ஸ்டாலின் தலைமையிலான சமூக அநீதி அரசுக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, தமிழக வெற்றி கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்! குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் D.இளங்கோ @EJillu& கழக தோழர்கள் பங்கேற்பு!
@TVKVijayHQ | @BussyAnand#TNdemandjustice#DMKsocialinjusticeGovt
குடியாத்தம் பேர்ணாம்புட்டு தாலுகா அருகே விபத்து.
அவசரநிலைக்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை இல்லை
TVK பேரணாம்பட்டு குழுவினர் முதலுதவி அளித்து பாதிக்கப்பட்டவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறந்த கிராமப்புற மருத்துவ உதவிக்காக @Subramanian_ma@tnhealthdept 😡
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு கல்வி விருது விழாவில் மக்களின் இளைய காமராஜர் தளபதி விஜய் தலைமையில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன! குடியாத்தம் தொகுதி சார்பாக, பொதுச் செயலாளர் N.ஆனந்த் & வேலூர் மேற்கு செயலாளர் R.வேல்முருகன் அவர்களுக்கு நன்றி! #TVKEducationAwards
மே 18 முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு தினம்! வேலூர் மேற்கு தம��ழக வெற்றிக் கழகம் @TVKVijayHQ மாவட்டச் செயலாளர் R. வேல்முருகன் @vijayvelmurug11 @Vlr_Srinivasan தலைமையில் இழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தியது மாமக்கள் போற்றுதும் மாவீரம் போற்றுதும்
@EJillu | @tvk_naveen18
குடியாத்தம் ஸ்ரீ கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு, 31வது வார்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது.
தொகுதி பொறுப்பாளர் D.இளங்கோ @EJillu கலந்துகொண்டு சிறப்பித���தனர் !!!
புதிய கருத்துக்கணிப்புகள் படி நம் த.வெ.க தான் அதிக வாக்குப் பெற��ற கட்சி! 2026 தவெக தான் ��ட்சியை பிடிக்கும் தலைவர்தான்
@TVKVijayHQமுதல்வர்!!🔥 #தமிழகவெற்றிக்கழகம
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉
வேலூர் மேற்கு மாவட்ட கழக இணை செயலாளர்
அண்ணன் M. சீனிவாசன் @Vlr_Srinivasan அவர்களுக்கு!
தளபதி அவர்களின் ஆசீர்வாதத்துடன்,
N. ஆனந்த் & R. வேல்முருகன் ஆகியோரின்
வாழ்த்துக்களுடன்...
அன்புடன்,
D. இளங்கோ @EJillu
(குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்)
அம்பேத்கர் 135வது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் நகர தமிழகம் வெற்றி கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கல், அன்னதானம் நடப்பட்டது.
#BRAmbedkar#Gudiyatham#ThalapathyPath
📢 நாளை திருவான்மியூரில் முக்கிய பொதுக்குழு கூட்டம்!
🔹 நாளைய முதல்வர் தளபதி விஜய் தலைமையில்
🔹 பொதுச்செயலாளர் N. ஆனந்த் முன்னிலையில்
💪 கழகத் தோழர்களே, வருக!
🏆 2026 வெற்றி நிச்சயம்!
#ThalapathyVijay#2026Victory@EJillu@Tvkgudiyatham
@VijaySrinevasan