குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலா���ர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், ��னிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவ���ர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் ��ுரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தவெக அரசை விமர்சித்து @BJP4TamilNadu பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதோடு, Times Now போன்ற வடஇந்திய ஊடகங்களிலும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது.
அதற்கு எதிர்வினையாக, பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் @TVKHQITWingOffl பக்கத்தில் மோடியையோ, அமித்ஷாவையோ விமர்சித்து இதேபோல ஒரு காணொளி வெளியிடுங்களேன்.. பார்ப்போம்.
அமைச்சர் ராஜ்மோகன் மொழியில் சொல்வதென்றால், ஆண்மை இருந்தால�� முதல்வர் விஜய் செய்யச் சொல்லட்டும்.
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவு���்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின��� ��யிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அ���்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் ம��்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு வி���ாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி ந���லைநாட்டப்பட வேண்டும்.
மேல���ம், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆர்மீனிய அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கதுரை நடராஜனை தாயகம் மீட்டுவர இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கதுரை நடராஜன் அவர்கள் ஆர்மீனிய அரசால் உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆர்மீனிய அரசு மேற்கொண்டுள்ள இக்கைது நடவடிக்கை குறித்து முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டதால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
குடும்ப வறுமை காரணமாக வேலை வாய்ப்பு தேடி செ��்ற தங்கதுரை நடராஜன் ஆர்மீனிய அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறியாது, குறிப்பிட்ட இடத்தை விளையாட்டாக எடுத்த ஒரு புகைப்படத்திற்காக இத்தகைய கடுமையான குற்றம் சுமத்தப்பட்டு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெருங்கொடுமையாகும். தங்கதுரை நடராஜன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன, அதன் மீதான உண்மைத்தன்மை என்ன, அவருக்கு எத்தகைய சட்ட உதவிகள் செய்வது என்பது குற���த்து எவ்வித அக்கறையுமின்றி அலட்சியமாகச் செயல்படும் தவெக அரசு, அவரைத் தாயகம் மீட்டுக் கொண்டுவருவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்துக்குரியது. நாட்டின் குடிமகன் ஒருவர் அயல்நாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பையும், அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் முதன்மைக் கட��ையாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தங்கதுரை நடராஜன் அவர்களை விடுவிக்கத் தேவையான சட்ட மற்றும் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வழக்கு விசாரணை நிலை குறித்த தகவல்களை அவருடைய குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமெனவும் ���ாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
குழந்தைகளின் சின்னஞ்சிறு விழிகளில் ஆயிரம் கனவுகள்!
கள்ளமில்லாச் சிரிப்பில் உலகின் அத்தனை அழகுகள்!
அன்பும் அறிவும் நிறைந்து, அச்சமின்றி விளையாடி, விரும்பியதைக் கற்று, கனவுகளை நோக்கி மகிழ்வுடன் வளரட்டும் நம் குழந்தைகள்!
அவர்களின் கேள்விகளுக்குச் செவிகொடுப்போம்; திறமைகளை ஊக்குவிப்போம்; பாதுகாப்பான, சமத்துவமான உலகை அவர்களுக்காக உருவாக்குவோம்!
குழந்தையின் கையில் புத்தகமும், நெஞ்சில் துணிவும், விழிகளில் கனவும் இருக்க வேண்டும்! பசியும் வறுமையும் அச்சமும் அவர்களின் பிஞ்சுப் பருவத்தைப் பறிக்க ஒருபோதும் அனு��திக்கக்கூடாது!
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சக மனிதரை நேசிக்கவும், தாய்மொழியைப் போற்றவும், இயற்கையைக் காக்கவும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்க��டுப்போம்!
கேள்வி கேட்கும் குழந்தைகளை ஊக்குவிப்போம்! அவர்களின் தனித்திறனை மதிப்போம்! நம் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகளுக்குத் துணை நிற்போம்!
அன்புக் குழந்தைகளே!
தாய்த்தமிழை நேசியுங்கள்! உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள்! அறிவோடும் அறத்தோடும் வளருங்கள்!
நீங்கள் எண்ணித் துணியும் நற்செயல்களிலிருந்தே ஒரு புதிய உலகம் பிறக்கட்டும்!
என் உயிருக்கினிய அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை நிறைவேற்றாமல் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கும் மத்திய அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டுமெ��்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்திய அரசியலமைப்பின் கூறு 348(2) மற்றும் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கு வழிவகை செய்கின்றன. இதன் அடிப்படையில் 1950, 1969, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் முறையே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீ���ார் ஆகிய மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கப்பட்டது.
ஆனால், மேற்குறிப்பிட்ட மாநிலங்களைப் போலவே வங்காளம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் முறையே 1997, 2006, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் தங்களது மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரிக்கை வைத்தும், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கோரிக்கைகளை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக��கு அனுப்பாமல் மத்திய அரசு தொடர்ந்து முடக���கி வைத்திருப்பது மொழிச் சமத்துவத்திற்கு எதிரான செயலாகும்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டத்தில், மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவது தொடர்பாக மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால் அதனைப் பரிசீலிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 21.05.1965 அன்று மத்திய அமைச்சரவையிலும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய தீர்மானங்கள் ஏற்றுக்��ொள்ளப்பட்ட பின்னரும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழக சட்டமன்றம் 06.12.2006 மற்றும் 03.09.2026 ஆகிய தேதிகளில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல், தமிழ்நாடு அரசின் கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக மத்திய உள��துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழர்கள் தங்களது தாய்மொழியிலேயே வழக்காடவும், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும், நீதியை எளிதாகப் பெறவும் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது இன்றியமையாததாகும். தாய்மொழியில் நீதி பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமைய���டு தொடர்புடையதாகும்.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது வெறும் மொழி சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல; அது தமிழர்களின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, நீதிக்கான உரிமை ஆகியவற்றை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமையாகும்.
மேலும், தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரி MHAA தாக்கல் செய்துள்ள W.P. No. 43981/2026 பொதுநல வழக்கில், தமிழ்நாட்டின் பெருமை வாய்ந்த வழக்கறிஞர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து தங்களைத் தரப்பினராக இணைத்துக்கொண்டு, தமிழின் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை வலுப்படுத்த முன்வர வேண்டு���் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்?
@CMOTamilnadu@TVKVijayHQ
தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடு��்கிறேன்.
ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும்.
வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விட��முறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழா��வணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது?
தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை ச��ாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வை��்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா?
தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினை���ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதா? அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதிலேயே மிகப்பெரும் மோசடியா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டு��ையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்தேடலுக்கான இடமான நூலகத்திலேயே, தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூ��்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் அக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்த நூல்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தது யார்? அவற்றின் விலையை ஏற்றுக்கொண்டது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியது யார்? நானூறு வெண்பாக்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு கவிஞராகச் சித்தரிப்பதும், மதுரைக்காஞ்சியை எழுதிய மா��்குடி மருதனாருக்குப் பதிலாக இல்லாத பெயர்களையும், வரலாற்றையும் முன்வைப்பதும் எத்தகைய அபத்தம்? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே தவறாக எழுதி வைத்துள்ள நூல்களை மாணவர்களும், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களும் படித்தால் என்ன ஆகும்? அறியாமையை அகற்ற வேண்டிய நூலகத்தில், அறியாமையையே அச்சடித்து அடுக்கி வைப்பதுதான் அரசின் சாதனையா? நூல்களின் பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் ���ோலியானவை என்றும், ஆசிரியர்களின் அடையாளங்கள் மற்றும் பதிப்பக முகவரி குறித்துச் சந்தேகங்கள் இருப்பதாகவும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு உடனடியாக விளக்கமளிக்க முன்வர வேண்டும். தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற இம்மாபெரும் முறைகேடு ஆட்சியின் அவல நிலைக்கான சான்றாகும்.
ஒருபக்கம், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது தவெக அரசு. மற்றொரு பக்கம், அறிவுக்கண்ணைத் திறக்க வேண்டிய நூலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது. மக்களைப் பொழுதுபோக்கில் மூழ்கடித்துவிட்டு, அவர்களின் அறிவுத்தேடலையும் மோசடிபேர்வழிகளிடம் ஒப்படைக்க முனைவது பெரும் ��வலம் இல்லையா? திரையரங்கத்தில் திரைப்படக்காட்சிகளை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது நூலகங்களின் தரத்தை உறுதிசெய்வதில் காட்டியிருக்க வேண்டாமா? மக்கள் எத்தனை காட்சிகள் திரைப்படம் பார்க்க வேண்டும் எனச் சிந்திக்கும் அரசு, அவர்கள் எத்தகைய நூல்களைப் படிக்கிறார்கள் என்று சிந்திக்காதது ஏன்?
நூலகத்தின் பெருமை என்பது அதன் உயரமானக் கட்டிடத்திலும், பளபளப்பான அலமா���ிகளிலும் இல்லை; அதற்குள் இருக்கும் நூல்களின் தரத்தில்தான் இருக்கிறது. தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும் மாபெரும் முறைகேடாகும். முந்தைய திமுகவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடையப் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அதேபோல, திட்டத்தை உருவாக்கிய பெ���ுமையை உரிமைகோரும் முந்தைய திமுகவின் ஆட்சியாளர்களும், கொள்முதல் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். எந்தக் காலக்கட்டத்தில், யாருடைய ஒப்புதலுடன் முறைகேடுகள் நடந்திருந்தாலும், அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டியது பேரவசியமாகும்.
ஆகவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான தேர்வுக்குழு விவரங்கள், பரிந்துரைகள், வழங்க��் ஆணைகள், நூல்களின் பட்டியல், விலை மற்றும் பணப்பட்டுவாடா விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், எழுத்தாளுமைகளைக் கொண்ட குழுவின் மூலம் நூல்களின் தரத்தை ஆய்வுசெய்து, தவறான தகவல்கள் கொண்ட போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணையும், சிறப்புத் தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகா���ிகள், விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு வெறும் 7 இலட்சம் நிவாரணமா? 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும��� வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கின்றன. கடலை நம்பி உழைக்கச் சென்ற உறவுகள், கரைக்குச் சடலங்களாகத் திரும்பும் கொடுந்துயரத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவ மக்கள் சுமப்பது? உயிரிழந்த மீனவச் சொந்தங்களுக��கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்தி, அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து, இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
முரசு புயலால் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக படகுக்குள் தண்ணீர் புகுந்து, நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்ததால், ஆபத்தில் சிக்கிய மீனவர்கள் உதவி கோரிய நிலையில், தக்க நேரத்தில் அரசின் உதவிகள் கிட��க்கப்பெறாததால் மீனவர்கள் உயிரிழந்துள்ளது மிகுந்த மனவலியை தருகிறது. மீனவர்களின் உயிர���ப்பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மீனவர்கள் எப்போது உதவி கோரினர்? அவர்களின் அபயக்குரல் எப்போது அரசின் செவியை எட்டியது? அதன்பேரில், அரசு என்னென்ன மீட்பு நடவடிக்கைகள் எடுத்தது? அவர்களை உயிருடன் கரைசேர்ப்பதில் எங்கு தவறு நேர்ந்தது? என்பவற்றை தவெக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். புயல் எச்சரிக்கையை அறிவித்துவிட்டால��� மட்டும் அரசின் கடமை முடிந்துவிட்டதா? ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்துவிட்டதை அரசு உறுதிசெய்ய வேண்டாமா? மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு தவெக அரசு அரசின் பதிலென்ன?
மீனவர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதிலும் காட்டுங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே! மீனவர்கள் வாழும் கடற்கரை நிலம் அரசின் கண்களுக்குத் தெரிகிறது; அந்தக் கடலில் அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் கடின வாழ்க்கை தெரியவில்லையா? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முந்தைய அரசு 10 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது. கரூரில் உங்களை பார்க்க வந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 20 இலட்ச ரூபாயும், அரசு வேலையும் கொடுத்த முதல்வர் விஜய் அவர்கள், தங்களின் சொந்த குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்ற பொறுப்போடு உழைக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு துயர்துடைப்பு நிதியாக வெறும் ஏழு இலட்ச ரூபாய் மட்டும் தருவது நியாயம்தானா? கள்ளச்ச��ராயம் குடித்து இறந்தவர்களைவிட, கரூரில் உங்களை பார்க்க வந்து உயிரிழந்தவர்களைவிட, நடுக்கடலில் உழைக்க சென்று உயிரிழந்தவர்களின் உயிர் ஒன்றும் மலினமாகபோய்விடவில்லையே? எப்படி பார்த்தாலும் உழைக்க சென்று, அரசின் உதவி உரிய நேரத்தில் கிடைக்காததால் உயிரை இழந்தவர்கள் உயர்ந்தவர்களே! அவர்கள் வீட்டிலும் படிக்கும் பிள்ளைகள், திருமணமாக வேண்டிய பெண்கள், வயதான பெற்றோர் இருப்பார்கள்தானே? அவர்களுக்கு உரிய துயர் துடைபு உதவியை செய்வது அரசின் கடமையல்லவா? அதை முழுமையாக செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்? மேட்டூர் அணையைத் திறக்கவே 6 கோடி செலவு செய்யும் நீங்கள், மீனவச்சொந்தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதை எது தடுக்கிறது?
கடலில் மீனவர்களின் இருப்பிடத்தைத் தொடர்ந்து கண்டறியும் வசதி, ஆழ்கடலிலும் செயல்படும் தகவல்தொடர்புக் கருவிகள், அவசர அபாய அறிவிப்புக் கருவிகள், தரமான உயிர்காக்கும் மிதவை ஆடைகள் உள்ளிட்டவ��்றை அனைத்து மீனவர் பெருமக்களுக்கும் வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். படகுகளின் பாதுகாப்புக் கருவிகளை முறையாகப் பரிசோதிப்பதுடன், இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களை தொடங்க வேண்டும். அண்டை மாநிலங்கள் மற்றும் கடலோரக் காவல்படையுடன் இணைந்த ஒருங்கிணைந்த மீட்புத் திட்டத்தை தொடங்கி, இனியும் மீனவர்கள் உயிரிழக்கும் இத்தகைய கொடுந்துயரங்கள் தொடராதவாறு தமிழ்நாடு அரசு தடுத்திட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு தன்னுடைய அலட்சியத்திற்குப் பொறுப்பேற்று புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணன் சிவா மற்றும் ஐயா தனஞ்செயன் அவர்களுக்கு,
@tfapatn@TSivaAmma@Dhananjayang
வணக்கம்!
புதிய திரைப்படங்கள��க்கு முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.
வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியாகும்போது, அவற்றைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். திரைப்பட உருவாக்கத்தின் பின்னாலுள்ள உழைப்பையும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் திரைத்துறையைச் சேர்ந்தவனாக நானும் அறிவேன். தமிழ்த் திரையுலகம் நலிவடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை; அது வளர வேண்டும் என்பதே எனது விருப்பமும். நாங்கள் அரசமைத்தால், ‘திரைக்கலை மேம்பாடு’ என்பதன் கீழ் தமிழ்த் திரையுலகம் மேம்படப் பல திட்டங்களையும் ஒழு��்குமுறைகளையும் கொண்டுவர விரும்பி தமிழில், தமிழ் மொழி, பண்பாடு மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் திரைப்படங்களுக்கு அரசு பொருளாதார உதவி வழங்குவதோடு, சிறந்த திரைப்படங்களை அரசே வாங்கி வெளியிடுவது; திரைப்படங்களை இணையத்தில் அத்துமீறி வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது; திரையரங்குக் கட்டணம், ஊர்தி நிறுத்தக் கட்டணம், உணவுப்பொருட்களின் விலையை முறைப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை எங்களது ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் முன்வைத்திருக்கிறோம்.
சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் கொண்டுள்ள ஆழமான பற்றுதலும் அக்கறையுமே எனது எதிர்ப்பிற்குக் காரணம் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படம் மகிழ்ச்சியையும் சிந்தனையையும் தரும் ஓர் உயர்ந்த கலை. அந்தக் கலையின் மீது எனக்கிருக்கும் நேசத்திற்கு இணையாக, அதைக் காணும் மக்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது.
பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பத�� தேவையா என்ற கேள்வியைத்தான் முன்வைத்தேன்.
வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளந்தலைமுறைப் பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது. இதுபோன்ற மிதமிஞ்சிய கேளி��்கைகளில் ஈடுபட மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது எத்தகைய சமூகச் சூழலை உருவாக்கும் என்பதே என் பெருங்கவலை.
அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே எனது அறிக்கையில் கேள்வி எழுப்பினேன். ஆகவே, தங்கள் கோரிக்கையின் நோக்கத்தை அறியாமல் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கருத வேண்டாம். திரைத்துறையின் தேவையை மட்டும் தாங்கள் முன்வைப்பதுபோல, ஒட்டுமொத்தச் சம���கத்தின் நலனை முன்னிறுத்தி எனது கருத்தை முன்வைத்தேன்.
காலை 6 மணிக் காட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் கூறியுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து மேலும் ஏதும் கருத்து��் சொல்லாமல் மௌனமாகிறேன்.
தமிழ்த் திரையுலகமும், அதனை வாழவைக்கும் தமிழ் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக!
@CMOTamilnadu@TVKVijayHQ
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவர்களிடம் முறையாகக் கருத்துகளைக் கேட்டறியாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் அழைத்துக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் முயன்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் வாழ்வுரிமை தொடர்பான விவகாரத்தில்கூட வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படும் தவெக அரசின் அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியது.
பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே அப்பகுதி மீனவ ���க்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதா என்று கேள்வி எழுப்பிக் கருப்புக்கொடி ஏந்திப் போராடியிருக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும், அங்கேயே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியே தீருவோம் எனத் தவெக அரசு பிடிவாதம் காட்டுவது மீனவ மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள 12 மீனவ கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அந்தக் கிராமங்களுக்கும், தொடர்ந்து போராடிவரும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவதுதானே முறையான அணுகுமுறை?
அதைவிடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒர���வரை��் தொலைபேசியில் அழைத்து, “கிராமத்திற்கு ஒருவர் வந்தால் போதும்” என்று கூறியதாக மீனவர் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு கடுமையானது! ஒரு கிராமத்தின் சார்பாக யார் பேச வேண்டும் என்பதை அந்தக் கிராம மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர, அதிகாரிகள் எப்படி முடிவுசெய்யலாம்? போராடும் சங்கப் பிரதிநிதிகளை அழைக்காமல் நடத்தப்படும் கூட்டத்தில் யாருடைய கருத்தைக் கேட்கப் போகிறீர்க��்?
அரசுக்குச் சாதகமானவர்களை மட்டும் அழைத்துக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழும் அளவிற்கு நடந்துகொண்டது ஏன்? மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான கூட்டமா இது? அல்லது மக்கள் ஏற்றுக்கொண்டதாகக் கணக்குக் காட்டுவதற்கான ஏற்பாடா?
12 கிராமங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுக்க வேண்டுமென்று மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு��் கடிதம் கொடுத்த பின்னரே கூட்டம் நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி தெரிவிக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கும் அழைப்புக் கடிதம் வரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான முறையான அழைப்பைக்கூட மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா? இதுதான் மக்களை மதிக்கும் ஆட்சியின் இலட்சணமா?
“கருத்துக்கேட்புக் கூட்டத்தை��் புறக்கணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; எங்கள் கருத்துகளை வலுவாக எடுத்துவைப்போம்; அந்த இடம் மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்பதை ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்று மீனவப் பிரதிநிதிகள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். இவ்வளவு பொறுப்புடன் பேசும் மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
கடலை நம்���ி வாழும் மக்களுக்குக் குடியிருப்பும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் வாழ்விடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவது கொடுமையானது. புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், போக்குவரத்து நெரிசல், கடலுக்குச் சென்று திரும்புவதிலான இடையூறுகள் குறித்த அச்சங்களுக்கு என்ன பதில்? தங்கள் சொந்த மண்ணிலேயே உரிமைகளை ���ழந்துவிடுவோமோ என்று மக்கள் அஞ்சும் நிலையை ஏன் உருவாக்குகிறீர்கள்?
தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வேறு இடமே இல்லையா? மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்று மக்கள் ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில், அந்த இடத்தில்தான் கட்டுவோம் என்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதம்? வாக்குக் கேட்கும்போது தேவைப்பட்ட மீனவ மக்களின் குரல், ஆட்சிக்கு வந்த பி���கு கேட்கவில்லையா?
எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தையும் அதற்கான தொடர் நடவடிக்க��களையும் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். 12 மீனவ கிராமங்களுக்கும், அக்கிராம மக்கள் தேர்வுசெய்யும் பிரதிநிதிகளுக்கும், போராடிவரும் மீனவர் சங்கங்களுக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு விடுத்து, வெளிப்படையாகக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். மக்கள் முன்வைக்கும் கருத்துகளையும் ஆவணங்களையும் முழுமையாகப் பதிவுசெய்து, அவற்றிற்கு அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்ற அவர்களின் கோரிக்கையையும் ஆதாரங்களையும் உரிய முறையில் பரிசீலித்து, அம்மக்களின் குடியிருப்பு உரிமையையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது.
திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், ப��ருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நின��ப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா?
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் ��ாலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையர��்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந���தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?
��திகாலை எழுந்து படியுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள்! அறிவை விரிவாக்குங்கள்! உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்! உழைத்து உயருங்கள்! என்று இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சி��ுறையா? 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன த���ட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆ��்வம் காட்டுவது ஏன்?
மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின�� வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆகவே, புதி�� திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் அரசியல் எதிரிகளும், எம்மை வெறுப்பவர்களும் தமிழ் தேசியத் தத்துவப் பேராசான் நமது ஐயா பெ மணியரசன் அவர்களின் ஒரு பதிவை தீவிரமாகப் பரப்பிக்கொண்டு, “இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குச் சொல்ல வேண்டிய பதில் ஒன்றுதான்.
ஐயா பெ மணியரசன் அவர்கள், தேர்தல் அரசியலில் வாக்களிப்பதையே புறக்கணித்து வந்த ஒரு அரசியல் அமைப்பின் கொள்கைப் பின்னணியைக் கொண்டவர். அத்தகையவர், ஒரு சிறப்புத் தீர்மானத்தை இயற்றி, நாம் தமிழர் கட்சிக்காக வாக்குகளைச் சேகரித்து, நமது கட்சிக்கு வாக்களி��்தவர்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியிலும், நமது அரசியல் முன்னேற்றத்திலும், அண்ணன் சீமான் அவர்களின் நலனிலும் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே ஐயா அவர்கள் வாழ்ந்து வருகிறார்.
எங்களது துன்பகரமான காலகட்டங்களில் எங்களோடு தோள்நின்று வழிகாட்டி துணைநின்றவர் ஐயா பெ மணியரசன் அவர்கள்.
எனவே, அவர் எங்களை விமர்சிப்பது என்பது ஒரு தந்தை தனது மகனை விமர்சிப்பதைப் போன்றது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னால் உள்ள அக்கறையையும், அறிவார்ந்த நோக்கத்தையும் நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம்.
அவர் முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்வோம். அவற்றை எங்களுக்குள் ஆய்வு செய்து, எங்களது அரசியல் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம்.
ஆனால், அவரை எதிர்த்து விமர்சிப்பதோ, இழிவுபடுத்துவதோ நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எவரும் செய்ய வேண்டிய செயலல்ல. அப்படி நாம் தமிழர் கட்சியின் முகமூடி மாட்டிக் கொண்டு புரிதலற்ற எதிர்வினைகள் செய்வோர் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் அல்லர்.
எங்கள் ஐயா பெ.ம எங்களுக்கு வெறும் அரசியல் விமர்சகர் அல்ல; எங்களது பெருந்தகப்பன். எங்களது அறிவுலக வழிகாட்டி.
ஐயா மணிரசன் அவர்களை நாங்கள் உளப்பூர்வமாக நேசிக்கிறோம்.அவரது கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறோம். அவரது விமர்சனங்களை மதிக்கிறோம்.
எப்போதும் எங்களது பெருந்தகப்பனாகவும், தமிழ் தேசியத் தத்துவப் பேராசானாகவும், எங்களது உள்ளத்திலும், அரசியல் களத்திலும் ஐயா மணியரசன் அவர்கள் உயர்ந்து வீற்றிருப்பார்.
அவரது ஒரு பதிவைக் காரணம் காட்டி எங்களை இழிவுபடுத்தலாம் என்றும், எங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடலாம் என்றும் எண்ணுகின்ற அரசியல் எதிரிகளுக்கும், எங்களை வெறுப்பவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்:
ஐயா பெ மணியரசன் அவர்களுக்கும் எங்களுக்குமான உறவு தமிழ் தேசிய தத்துவார்��்த கோட்பாடு வழியாக எழுந்த தந்தை மகன் உறவு. அதை தற்குறிகளாலும், தற்குறிகளுக்கு விலை போன ஊடக வியாபாரிகளாலும் புரிந்துக் கொள்ள முடியாது.
எங்கள் மீது கொண்டிருக்கின்ற அக்கறையை எங்களைப் பிரித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்!
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எங்களது உறவும், நன்றியுணர்வும், கொள்கைப் பற்றும் உங்கள் அவதூறுகளால் சிதைக்கப்பட முடியாதவ���!
நாம் தமிழர்!
❤️
மணி செந்தில்.
@Tamizhdesiyam
சோதனைப்பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி ��ெங்கடேசன் போதைக் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu @TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தளவாய் கிராமத்தில் நள்ளிரவில் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை போதைக்குற்றவாளிகள் தலையில் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டில் பொதும��்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய பாதுகாவல் படையினருக்கே பாதுகாப்பில்லாத கொடு��்சூழல் உருவாகியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனின் குழந்தைகளான தமிழ்ச்செல்வன், அர்ச்சனா இருவரும் ஏற்கனவே தாயை இழந்துவிட்ட நிலையில் தற்போது தந்தையையும் இழந்து தவித்து நிற்பது மிகுந்த மனத்துயரை அளிக்கிறது. தவெக அரசின் அலட்சியத்தால் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை, ஒரு குடும்பத்தையே முற்று முழுதாகச் சிதைத்துவிட்டதுதான் பெருங்கொடுமை. போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த தவறி, இன்னும் எத்தனை குடும்பங்களைச் சிதைக்கத் தவெக அரசு நினைக்கிறது?
ஊர்க்காவல்படை காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருப்பது, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கான கேள்வியை எழுப்புகிறது. இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் காவலர்களைத் தாக்கும் அளவிற்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்தது எப்படி? அந்த அளவிற்கு தவெக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதே இப்படுகொலை நிகழ முதன்மைக் காரணமாகும். போதைப்பொருள் பயன்பாட்டையும், போதை ஆசாமிகளின் அட்டூழியங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? காவலர்களுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசு, பொதுமக்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்? பொதுமக்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பில் தவெக அரசு அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது.
ஆகவே, ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை படுகொலை செய்த போதை குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, போதைப்பொருள் புழக்கத்தையும், போதையால் நிகழும் குற்றங்களையும் தடுக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற��கொள்ள வேண்டும்.
உயிரிழந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசன் குடும்பத்திற்கு வெறும் 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தவெக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல; தாயையும் இழந்து, அரசின் அலட்சியத்தால் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியா���ர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது, அரசுப்பணிக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுஞ்செயல்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர் நிலை வரையிலான பணிகளுக்கு தற்காலிக பணியாளர்க���ை தேர்வு செய்ய வெளிநாட்டு மனிதவளக் கழகத்தை (Overseas Manpower Corporation Limited) முகமையாக நியமித்து, அரசுப் பணியாளர்களை இனி தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அரசுப் பணி கனவுடன் பல ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, தங்களது இளமையையும் உழைப்பையும் செலவிட்டு காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, ��ருக்கின்ற அரசுப் பணியிடங்களையும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்? இதுதான் தவெக அரசு ஏற்படுத்திய மாற்றமா? இதற்கு பெயர்தான் தூயசக்தியா? அரசுப் பணிகளையே வெளிமுகமை வழியாக நிரப்ப முற்படுவது, அரசுப்பணிக்காக இரவுபகல் பாராமல் படித்து, அயராது முயலும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தினை இருளாக்கும் கொடுஞ்செயல் இல்லையா? தமிழக இளைஞர்கள் பட்டப்படிப்புகளை படிப்பது எதற்காக? தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எதற்காக? இரவு பகல் பாராது அரசுப் பணிக்காக உழைப்பது எதற்காக? நிரந்தர வேலை வாய்ப்புக்காகதானே? அதைக்கூட தவெக அரசால் தரமுடியாமல், இருக்கும் வாய்ப்பையும் தடுத்து கெடுப்பது என்ன நியாயம்? தவெக அரசு ஆட்சிக்கு வந்தது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கா? அல்லது இருக்கின்ற வேலைவாய்ப்புகளைக்கூட நிரந்தரமற்றதாக மாற்றுவதற்கா?
அரசுப்பணிகள் அனைத்தையும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தாரை வார்த்துவிட்டு, அரசு போட்டித்தேர்வு வயது வரம்பை உயர்த்துவதால் யாருக்கு என்ன பயன்? அரசுப் பணிகளை வெளிமுகமை மூலம் நியமித்தால் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று எதற்கு? கலைத்துவிடலாமே? எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அரசு எதற்கு? ஆட்சி நிர்வாகம்தான் எதற்கு? அரசுப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற��கு அரசுக்கு என்ன தடை? தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசுக்கு என்ன தயக்கம்? அரசுப் பணிகளை வெளிமுகமைகளிடம் ஒப்படைப்பதால் ��யன்பெறப்போவது வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களா? அல்லது பணியாளர் வழங்கும் நிறுவனங்களா? தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்குரிய ஊதியம், பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுமே? தற்காலிக ஒப்பந்த பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு பறிபோகுமே? அதற்கெல்லாம் தவெக அரசு என்ன பதில் கூறப்போகிறது? இதற்குப் பெய���்தான் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியா? வெட்கக்கேடு!
அரசின் அடிப்படைக் கடமையான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலிருந்து விலகி, நிரந்தரப் பணியிடங்களை ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்து, தமிழக இளைஞர்களின் அரசுப்பணி வாய்ப்பை சிதைக்கும் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஆ��வே, அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த முறையில் நியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிடுவதோடு, காலியாக உள்ள பணியிடங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து, பல இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப்பணி வாய்ப்பையும், சமூகநீதி இட ஒதுக்கீட்டையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழிய��� தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்று��் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் தி��ழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்க���்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம் தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமா���ப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.
தமிழ்நாடு என்ற சொல்லாடல் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதை பழந்த���ிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
என்று சிலப்பதிகார காட்சிக் காதையில் பாடும் இளங்கோவடிகள்
“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
என்று வாழ்த்துக் காதையில் பாடுகிறார்.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
���ின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.” என்று பாடுகிறது பரிபாடல்
தொல்காப்பியத்திற்கு பதினொராம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர் தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு தெளிவாக வரையறுக்கிறார்.
“மண்குலவு தம��ழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்” என்றும்
“பூமியர் தமிழ்நாட் ட���ள்ள பொருவில்” என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! என்று தமிழ்நாடு தமிழ்நாடு என்று கொண்டாடுகிறார் பெரும்பாவலர் பாரதியார்.
அப்பெருமை மிக்க வரலாற்றுப் பெயரை மீண்டும் சென்னை மாகாணத்திற்கு இடக்கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 79 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்கா�� மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம்.
‘தமிழ்நாடு’ என்று பெருமிதத்தோடு அழைத்தாலும் தமிழர் நிலத்தில், தமிழர்களுக்கான முதன்மைத்துவம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதன் ப��ருங்கொடுமை. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கன்னடர் ஒருவரை நியமித்துள்ள அநீதி தவெக அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உச்ச பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழர் அல்லாத பிறமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தவெக அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்கள் அனைவரும் பிற மாநிலத்தவர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் ஏதுமற்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லைதான். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள ��ணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது.
ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலையுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் எங்கும் விரவிக் கிடக்��ிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் சட்டசபையிலயே வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் அவலத்தையும், அமைச்சர் பெருமக்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தப்பும் தவறுமாக தமிழைப் பேசும் அவலத்தையும் தமிழ்நாடு காண்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டு தாய்மொழிக் கல்வி முற்றாக சிதைந்துள்ளது.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதி��ாசன் அவர்கள், மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பிறகும், அதைவிட மோசமானநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். அத்தகு பிறமொழி கலக்கும் அவலநிலை நீங்கி தாய்த் தமிழ்மொழி ஆட்சி அதிகார மொழியாக உண்மையான மாட்சிமை பெற்றிட தமிழ்நாடு நாளில் உளமாற உறுதியேற்போம்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தெய்வத்திருமகன் தாத்தா பசும்பொன் முத்துராம���ிங்கத் தேவர் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2026 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்வணக்கம் செலுத்தினேன்.
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
( நவம்பர் 01, 2026 | ஐப்பசி 15 )
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித��த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழி��ாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம்தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு, தமிழகம், தமிழர் தேயம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந��தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்���ட்ட நம் தாய்நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். நாம் தமிழர் கட்சியும், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவித்திட வேண்டுமென தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 15 (01.11.2019) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட��ம் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வந்த திமுக அரசு தமிழ்நாடாய் மீண்டும் உருவெடுத்த நாளை விடுத்து, தமிழ்நாடு என மீண்டும் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என நம்முடைய கடுமையான எதிர்ப்பினையும் மீறி வலிந்து திணித்தது. அதையே தற்போதையே தவெக அரசும் அப்படியே தொடர்வதுதான் பெருங்கொடுமை.
தமிழ்த்தேசிய அரசியல் புத்தெழுச்சிப் ப���ற்று, புரட்சிகர அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் ஏற்படும் நாளில் தமிழ்நாடு நாள் குழப்பநிலை துடைத்து எறியப்படும். உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சி, ஐப்பசி 15 (01.11.2026) ஆம் நாளையே தமிழ்நாடு நாள��க தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியாகக் கொண்டாடவிருக்கின்றது.
ஆகவே, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழ��்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்!
அதோடு, நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், “மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை”என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளைக் கடந்தும், அதைவிட மோசமான அவலநிலை இன்றும் ��ீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய்க்கு நிகழ்ந்துவரும் அப்பேரவலத்தை, பெருந்துயரைத் துடைத்து, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற நிலையை உருவாக்கிட தமிழ்நாடு நாள் அன்று, என்னுடைய உயிருக்கினிய உறவுகள், அன்புத்தம்பி தங்கைகள், அருகில் உள்ள சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தாய்த்தமிழில் பெயர்பலகை வைக்க அன்புடன் கோரிக்கை வைப்போம்.
தமிழ்ந��டு முழுவதிலும் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை, அறிவிப்பு பலகை வைப்பதற்கான கோரிக்கையை துண்டறிக்கையில் அச்சடித்து அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்குவோம். அதனை நாம் பிறந்த பெருமைமிக்க தமிழ்ப்பேரினத்திற்கான இனமான கடமையாக எண்ணி தமிழ்நாடு நாளில் செயல்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு,
உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ���த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடு���ாரா?
ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள்; சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை!
ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தா��் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா?
தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கி���ார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா?
ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு?
சோப்பு, ஷாம்பு கலந்த வீட்டுக் கழிவுநீர்தான் காரணம் என்றாலும், அதுவும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பது அரசின் நிர்வாகத் தோல்விதானே? அந்த விளக்கத்தைச் சொல்வதன் மூலம் தமது துறையின் தோல்வியை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா?
மக்கள் கேட்பது, “எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?” என்ற விளம்பர விளக்கமல்ல; “எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்பதற்கான பதில்!
தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம்!
ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள்; சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள்; விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள்! மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது!
இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, ���ாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தபோது,