ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதும���்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக��கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயி���ாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் கண்ட விடியல்கள்...
1. வேங்கைவயல் சம்பவம்
2. ஆம்ஸ்ட்ராங் படு*கொலை
3. ‘ஓசி பஸ்’ என்று விமர்சித்த பொன்முடி
4. நீட் தேர்வு ரத்து என கூறி ஏமாற்றியது
5. கல்வி கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
6. விவசாய கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
7. பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு
8. விசிகவினரே கட்சி கொடி ஏற்ற முடியாத நிலை
9. திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் விற்பனை
10. மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு
11. அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன்
12. கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம்
13. காவிரியில் மேகதாது அணை கட்டும் காங்கிரஸ்
14. அம்மா உணவகம் பராமரிப்பு
15. சென்னை வெள்ளம் – 4000 கோடி பேக்கேஜ்
16. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் ஊழல்
17. அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி
18. மாற்றுத்திறனாளி உலகக் கோப்பை வென்றதாக ஏமாறிய உளவுத்துறை
19. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படு*கொலை
20. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் – மேயர் மாற்றம்
21. விழுப்புரம் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக மூடுவிழா
22. மரக்காணம் மீன்பிடி துறைமுக திட்டம் ரத்து
23. கோவை கார் குண்டு வெடிப்பு
24. ரெட் ஜெயின்ட் மூவி படங்கள் மட்டுமே வெளியாகும்
25. திருத்தணியில் வட���ாநிலத்தவரை வெட்டிய சிறுவர்கள்
26. 12 மணி நேர வேலை செய்ய வேண்டும் மசோதா பின்பு ரத்து
27. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்
28. Stalin பல வெளிநாடு சுற்றுப்பயணம்
29. எண்ணற்ற பாலியல் குற்றங்கள்
30. இருபதுக்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள்
31. சென்னை ஏர் ஷோவில் 5 பேர் மரணம்
32. கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் மரணம்
33. L G BQ ஆதரவு நிலைப்பாடு
34. சென்னையில் ஃபார்மு��ா கார் பந்தயம்
35. கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம்
36. டெல்டா பகுதியில் நெல்களை வீணாக விட்டது
37. காலை வாக்கிங் செல்லும் போது மூவி ரிவ்யூ
38. திமுக இளைஞரணி மாநாட்டில் உணவுப் பொருட்கள் சூறையாடல்
39. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் சீண்டல்
40. கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது
41. ஊடக சுதந்திரத்தை பறித்தது
42. 500க்கும் மேற்பட்ட FL2 லைசன்ஸ் வழங்கியது
43. தூத்துக்கு��ி வெள்ள பாதிப்பு
44. புதிய தலைமுறை பத்திரிகையாளர் மழைநீர் பள்ளத்தில் விழுந்து மரணம்
45. திமுக கொடி பொருத்திய காரில் ECR அராஜகம்
46. திமுக கூட்டத்தில் உணவு மற்றும் பீர் வழங்கியது – கள்ளக்குறிச்சி
47. செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறை
48. பள்ளிக்குள் மாணவிகள் மது அருந்தியது
49. கே.என்.நேரு – 2000 கோடி ரூபாய் ஊழல்
50. TRB ராஜா – வெள்ளை அறிக்கை கேட்ட வெள்ளை பேப்பர்
51. சட்டப்பேரவையில் நேர��ையை துண்டித்து ஓடுவது
52. சேகர்பாபு பக்தரிடம் வம்பு செய்தது
53. 1000 ரூபாய் பேனருக்கு 7000 ரூபாய் செலவு
54. மரக்காணத்தில் 20 பேர் கள்ளசாராய மரணம்
55. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதா
56. திமுக நிர்வாகி தெய்வச்செயல் – மனைவியை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி
57. பல்லாவரம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை
58. திமுக நிர்வாகி & கவுன்சிலர் கணவர் செல்வம் வெட்டி படுகொலை
59. கஞ்சா விற்பனைக்கு எதிர்த்த அதிமுக பகுதி செயலாளர் கொலை
60. புல்லட் வண்டியில் சென்றதால் சாதி வெறியர்கள் மாணவனின் கை வெட்டு
61. கனிம வளங்கள் கொள்ளையை தட்டி கேட்ட VAO கொலை
62. ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை
63. 100 நாள் வேலை திட்டத்தில் 60 நாள் மட்டுமே
64. TASMAC பாட்டிலுக்கு ₹10 வசூல்
65. பெண் கால்பந்து வீரருக்கு தவறான சிகிச்சை – உயிரிழப்பு
66. பேருந்து வரவில்லை என மாணவர்கள் போராட்டம்
67. 4 ஆண்டுகளாக மடிக்கணினி இல்லை
68. G-Square ���ிறுவனத்தின் அதீத வளர்ச்சி
69. 250க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்
70. சென்னையில் கழிப்பறை கட்டுவதில் ஊழல்
71. அரசு பேருந்துகள் அடிக்கடி பழுது
72. 30,000 கோடி ரூபாய் கொள்ளை – PTR தகவல்
73. மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட wood பாலம் 2 மாதத்தில் சேதம்
74. போராடிய மாற்றுத்திறனாளிகளை 70 கிமீ தள்ளி இறக்கியது
75. சவுக்கு சங்கர் கைது
76. ஆசிரியர்கள் போராட்டம்
77. செவிலியர்கள் போராட்டம்
78. VAO போராட்டம்
79. அரசு ஊழியர்கள் போராட்டம்
80. அரசு மருத்துவ���்கள் பற்றாக்குறை போராட்டம்
81. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
82. தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் - கூலி படம் பார்த்த ஸ்டாலின்
83. கே.என்.நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீடு சூறை
84. டங்ஸ்டன் எடுக்கும் திட்டம்
85. NLC – விவசாயிகள் நிலத்தில் JCB
86. கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் சூறை
87. வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
88. திருப்பரங்குன்றம் பிரச்சினை கையாள தவறியது
89. போக்சோ வழக்குகள் அ��ிகரிப்பு
90. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரமாக. திறந்தது
91. 10, 12 பொதுத் தேர்வில் பலர் வரவில்லை
92. meme போட்ட அதிமுக ��ிர்வாகிகள் கைது
93. 5 ஆண்டில் 6 லட்சம் கோடி கடன்
94. ஆலந்தூரில் காவலர் விஜயன் படுகொலை
95. திமுக MLA கிட்னி திருட்டு/முறைகேடு
96. ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்
97. சேலம் மாடர்ன் தியேட்டர் ஆட்டைய முயற்சி
98. “அப்பா” என்று அழையுங்கள் – ஸ்டாலின்
99. பல பாராட்டு விழாக்கள் – கோடி கணக்கில் விளம்பரம்
100 “ஸ்டாலின் தான் வராரு – விடியல் தரப்போறாரு”
எதாவது விட்டு போய் இருந்தா சொல்லுங்க....
அஸ்தினாபுரம் சசி அவர்களின் FB பதிவு....
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் போலிருக்கிறது! பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்று அடித்துக் கூற முடியும் என உண்மைநிலைக்கு மாறாக கனவுலகத்தில் இருந்து பேசியுள்ளார் முதல்வர்.
தமிழ்நாட்டின் தற்போதைய அச்சமான சூழ்நிலையில் மக்கள் பயத்துடன் நெஞ்சில் அடித்துக் கொள்வது அவருக்குக் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களைத் திறந்தாலே பாலியல் வன்கொடுமை செய்திகளும், பிஞ்சு குழந்த��களின் மரண ஓலங்களும் தான் கேட்கின்றன. இதுதான் பாதுகாப்பான மாநிலமா?
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.குறிப்பாக, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் 4000 ஐ தாண்டுகிறது. முறையான கட்டமைப்புடன்கூடிய போக்சோ நீதிமன்றங்கள் இல்லாதது. ���ாவல் நிலையங்களில் போக்சோ வழக்குகளுக்கென சட்ட உதவித் தன்னார்வலர்கள் உதவ முடியாத சூழல் போன்றவை குற்றவாளிகளின் தண்டனையை தாமதப்படுத்துகின்றன. திமுக அரசின் இந்த மெத்தனப் போக்கு குற்றவாளிகளுக்குத் தைரியத்தைக் கொடுப்பதுடன், குற்றங்கள் அதிகரிக்கவும் காரணமாகின்றன.
இதையெல்லாம் கண்காணித்து சரி செய்யாமல் மேடைக்கு மேடை விளம்பரம் மட்டுமே செய்வதை திமுக அரசு வாடிக்கையாக செய்து வர��கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இனியாவது தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து உண்மையான தமிழ்நாட்டைச் சந்தியுங்கள்.
@TvkCafeHQ Bro nama side la (TVK)ku ithana crore voters irukanga soldrangaa adhu ellamey perfect ah vandhurum namaku therium but important is Thoguthi la win pandradhu dhan namaku important la adhula nama eppadi constrate pandradhu Thoguthi wise nama 115 mela win pannadhan nama anna CM la