Very rarely political leaders in their #PressMeet take questions directly from media persons! In the guise of meeting the 'Press'- its just a monologue for propaganda/publicity! Reactions?
Cpi(M) சன்முகம் நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என அறிவித்துள்ளார். கட்சியின் மாநில குழுவில் விஜய் மற்றும் உதயசந்திரன் ஆகியோரின் நண்பரான எழுத்தாளர் சு.வெங்கடேசன்,முன்னாள் மாநிலசெயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் விஜய் ரசிகர் மன்ற தலைவர்களாக மாறி விட்டனர் அவர்களை சமாளிக்க சண்முகம் திமுகவிற்கெதிராக பேசுகிறாராம் கேரளாவிலும் மே.வங்கத்திலும் தோற்றது ஏன் என தோழர்கள் விளக்குவார்களா
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
-------------------------------
1) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
2) கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து கட்சிக்குள்ளேயே பேசவேண்டிய முரண்களைப் பொதுவெளியில் பேசி, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார் .
3) தேர்தலுக்கு முன்பு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போதும் கருத்து மாறுபாடுகளைக் கடந்து பேணவேண்டிய தோழமைக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும் வகையில், ஊகமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
4) கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முன்னணி பொறுப்பாளர் என்கிற முறையில், அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி, உரிய நேரத்தில்- உரிய வகையில், 'கடிந்தும் -கண்டித்தும்' அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை.
5) வாய்மை, நேர்மை என்னும் பெயரில் உட்கட்சி முரண்களை பொதுவெளியில் பேசுவது, கட்சியின் கட்டுக்கோப்பான வலிமையை அசைத்துப் பார்க்கும் ஆபத்தான முயற்சியாகும். அத்துடன், கட்சியைப் பின்பற்றி அரசியல் சக்தியாய் அணிதிரளும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மிகவும் தீங்கான போக்காகும்.
6) கட்சியை விட, கருத்தியலை விட, களம் காணும் மக்களைவிட, 'தானே முதன்மை' என தன்னை முன்னிறுத்தும் இத்தகையபோக்கு, ஒரு 'தவறான முன்மாதிரியாக' அமைந்து கட்சியிலுள்ள பிறரையும் இவ்வாறு செயல்படத் தூண்டுவதாக அமையும்.
7) இந்நிலையில், கட்சியின் நலன்களைக் கருத்தில்கொண்டு பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள், "கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார்."
8 .இந்த நடவடிக்கை தொடர்பாக இவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கமளிக்கவும் அல்லது கட்சித் தலைமையிடம் மேல்முறையீடு செய்யவும் இவருக்கு உரிமையுண்டு.
9) இடைநீக்க காலத்தில் இவர் கட்சியின் விதிமுறைகளை மதித்து, மேலும் முரண்பாடான செயல்களில் ஈடுபடாமல், கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பதன் மூலமே, இவரது மேல்முறையீடு ஏற்கப்பட்டு, இடைநீக்க நடவடிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
10) ஒழுங்கு நடவடிக்கைக்குரிய காலத்தில் இவர் கட்சியின் நிகழ்வுகளில், போராட்டங்களில், கட்சி சார்ந்த இன்னபிற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டியது இவரது இன்றியமையாத அரசியல் கடமையாகும்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
Hervorragende Stimmung auf dem Landesparteitag der AfD Baden-Württemberg! Herzlichen Glückwunsch an die wiedergewählten Vorsitzenden Markus Frohnmaier & Emil Sänze! Danke an alle! Wir retten Deuschland, weil wir unser Land lieben! ❤️🇩🇪❤️🇩🇪❤️🇩🇪❤️🇩🇪❤️🇩🇪❤️🇩🇪❤️🇩🇪❤️
அத்துமீறல்!
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் மார்க்சிஸ்ட் கட்சியிடம் ஆலோசிக்கவில்லை.
தவெக ஆட்சி அமைக்க எதன் அடிப்படையில் ஆதரவு என்பதை ஏற்கனவே சிபிஐ(எம்) தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் @pravchak
இன் கருத்து கடுமையான அத்துமீறலாகும்.
”வைகோவும், துரை வைகோவும் இப்போ ஏன் சொல்றாங்கனு தெரியல.. எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.. திமுக எங்களுக்காக நன்றாகவே வேலை பார்த்தார்கள்” - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
#MHJawahirullah | #DMK | #DuraiVaiko | #Vaiko | #MDMK
தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர். மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் அவர்களின் நினைவாக, கடந்த 1983ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் அவர்கள், காயிதே மில்லத்தின் வாழ்க்கை குறிப்புகளை 5ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற செய்தார்.
அதே போன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத் அவர்களின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார். மேலும், கடந்த 2003ம் ஆண்டு அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் தமிழக அரசு சார்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில், காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது என்பதையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளதை அனைவரும் மனதில் வைத்து, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போன்று மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் வாழ்ந்திடவும், அனைவரிடமும் அன்பும், சமாதானமும் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும்அனைவரும் உறுதி ஏற்போம்.