செம்மணி புதைகுழியில் இன்றைய அகழ்வில் இரு இடத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலையில் பின்னிப் பிணைந்தவாறு காணப்படும் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக ஒரு இடத்தில் மட்டும் சிறுவர்கள் உட்பட 6 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது.
#chemmani
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாய் அடையாளப்படுத்தப்பட்ட 13 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது.
#chemmani
குடும்பத்தோடு புதைக்கப்பட்டார்களா?
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வில் ஒரு இடத்தில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
அதில் ஒன்று பெரியவருடையதாகவும், மற்றைய இரண்டும் சிறுவர், குழந்தையினுடையதாக காணப்படுகிறது.
#chemmani
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புகளின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அகழ்வுத்தளம் விஸ்தரிக்கப்பட்ட இடத்தில் நடந்துவரும் அகழ்விலும் அதிகளவான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
#chemmani
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் குழந்தை, சிறுவர் உட்பட 8 எலும்புக்கூடுகள் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தன்படி அப் புதைகுழியில் மொத்தமாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
#chemmani
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது மண்டை ஓட்டுக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த குவியல்களுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட மண்டை ஓடுகள் காணப்படுகின்றன.
அதில் சில மண்டை ஓடுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
#chemmani
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடி கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது.
குறித்த தாயத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பொது அது யாருடைய உடலம் என்பதை கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
#chemmani
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி இன்று நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.
இந்த ஊர்திப் பவணியானது, வட,கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சென்று மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணை சென்றடைய உள்ளது.
#may18#mullivaikal
செம்மணி புதைகுழியில் தொடர்ந்து எலும்புக் குவியல்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. இன்று நடந்த அகழ்வில் தளத்தின் ஒரு இடத்தில் எலும்புக் குவியல்கள் மீட்கப்பட்டிருந்தது.
அந்த எலும்பு குவியல்லளுக்கு கீழே உக்கிய இரும்புகள் காணப்படுகின்றது.
#chemmani
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமான நிலையில் இலங்கை தமிழரசு கட்சியில் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அக் கட்சியின் மானிப்பாய் தொகுதி சார்பில் வலி.தெற்க்கு பிரதேச சபை முன்றலில் இந்த நிகழ்வு நடைபெற்று.
#May18#May18th2026
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வு தளம் விஸ்தீரணம் செய்யப்படவுள்ளது.
அதன்படி விஸ்துரணம் செய்யப்படவுள்ள பகுதிகளை துப்புரவு செய்யும் பணிகள் இன்று பக்கோ இயந்திரத்தின் மூலம் அங்கு முன்னேடுக்கப்பட்டிருந்தது.
#chemmani
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு ஒன்றின் தலைப் பகுதியின் மண்டை ஓடு உடந்த நிலையில் காணப்படுகின்றது.
குறிப்பாக அந்த எலும்புக்கூட்டின் பின்பக்க (பிடரி) மண்டையோடு உடைக்கப்பட்டு தனியாக பிளந்து காணப்படுகின்றது.
#chemmani
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றை அகழ்வில் புதிதாக அடையாளம் காணப்பட்ட எலும்புகளுடன் சேர்த்து அம்மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
#chemmani
யாழில் இன்று பெய்த மழையால் செம்மணி புதைகுழியின் பிரதான அகழ்வு தளத்தில் வெள்ள நீர் தங்கியுள்ளது.
அவ்வாறு தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையின் கலி பைவுசர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
#chemmani
செம்மணி புதைகுழியில் இன்றும் கைக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டதுடன், அகழ்ந்தும் எடுக்கப்படுள்ளன.
அங்கு முன்னெடுக்கப்படும் 3 ஆம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது அதிகளவான சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளப்பட்டு வருகின்றது.