மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்றங்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழில���ளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும் போற்றத்தக்கவை.
நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்!
நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி!
#HBDCMJosephVijay
@TVKVijayHQ
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறே��்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi
@TVKVijayHQ
Thank you, Thiru Vijay, for your warm wishes.
We remain united in our commitment to the Constitution and to strengthening our democracy - and together, we will keep working for the welfare, dignity, and aspirations of the people of Tamil Nadu.
🔥 A Thalapathy Birthday Celebration Like Never Before! 🔥
Two iconic Thalapathy blockbusters. One unforgettable weekend. 💥
Celebrate the birthday of the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay avl., on the big screen with the mass entertainers Jilla and Mersal at Rohini Silver Screens! 🎬✨
🎟️ Tickets at just ₹100
📍 Rohini Silver Screens
📅 This Weekend Only
Gather your friends, family, and fellow fans for a true Thalapathy festival at #FansFortRohini! ❤️🔥
@actorvijay
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் ���ழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்கள��ம் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந���தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ��சையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்ப��ர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்ம���.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள��கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது!
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்