இன்று எனது பிறந்தநாளை ம���ன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்ற��ன்.!
@TVKVijayHQ
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
பிரபல திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜய் @actorvijay அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
திரைப்படத் துறையில் சாதித்ததைப் போல அரசியலில், மக்கள் சேவைப் பணிகளில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஏ.வ.வேலு இந்த Roadல வரார், அதனால இங்க Banner வைக்க கூடாது என கூறி #தவெக கழக தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.😞
இதற்கெல்லாம் 2026 இல் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் 👊
தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
@TVKVijayHQ@actorvijay
தமிழ்நாட்டின் அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தையும், தமிழ் நிலத்தின் அடையாளமான இயற்கை வளங்களையும் ஒருசேர அழிவுக்குள்ளாக்கும் செயலே, திமுக அரசு முனைப்புடன் முன்னெடுத்து வரும் பரந்தூர் விமான நிலையத் திட்டம். ஆட்சிக்கு வரும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நாடகமாடியவர்கள், இன்று தம் அதிகார வலிமையில், போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் போடவும் தயங்கவில்லை. பரந்தூர் விவசாயிகள் மீது இந்த விளம்பர மாடல் அரசின் வன்முறைக்கு, அந்த மக்களின் ஜனநாயக போராட்டங்கள் விரைவில் பதில் சொல்லும்.
விவசாயிகளின் உயிர்நாடியான நிலத்தை அழிக்கத் துணிந்துவிட்டது இந்த அரசு. காலங்காலமாக அவர்களின் அடையாளமாக இருக்கும் பூர்வீக நிலங்களைப் பறித்துவிட்டு, அதற்குப் பதிலாக மாற்று இடத்தை தருவதாகச் சொல்கிறார்கள். மண்ணை நாசமாக்கும் செயல் திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த அரசு. அவர்கள் தருவதாகச் சொல்லும் மாற்று இடமோ, விவசாயம் உட்பட எந்தவித வாழ்வாதாரத்திற்கும் உதவாத வெற்று இடமாக இருந்தால் நம் விவசாயிகளின் ந��லை என்னாவது?
விமான நிலையம் என்ற பெயரில் மட்டுமே 20 கிராமங்களுக்கு ��ட்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. பின், அதைச் சுற்றித் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என கட்டிடங்கள் கட்டப்படும். அதற்காக, சுற்றி உள்ள மேலும் 20 கிராமங்கள் அழிக்கப்படும்' என்ற அச்சம் அந்த மக்களிடம் இருக்கிறதே!.. அதற்கு உங்கள் பதில் என்ன?
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் இன்னும் முடியாத நிலையில், அவசர அவசரமாக நிலங்களைக் கையகப்படுத்தவேண்டிய அவசியமென்ன? ஏதேனு��் ஒரு துறையில் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தாலும் விமான நிலையம் அமைவது சந்தேகம் எனும்போது, எந்த நம்பிக்கையில் மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்த அரசாணை வெளியிடுகிறது?
கையகப்படுத்தப்போகும் நிலங்களில் 26.54 சதவீத நிலம் wetlands எனப்படும் நீர் தேங்கும் பகுதிகளாகும். இந்த நீர் வழித்தடங்கள் அழிக்கப்பட்டால், சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பது அரசுக்குத�� தெரியுமா?
கம்பன் கால்வாய், ஏகனாபுரம் ஓடை, நெல்வாய் ஏரி என ஏராளமான நீர்நிலைகள் உள்ள நிலப்பகுதி இது. இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அரசின் சிந்தனைக்கு ஏன் வரவில்லை?
பரந்தூர் விமான நிலையப் பகுதிகளின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையைத் தமிழக அரசு பொதுவெளியில் வெளியிட மறுப்பது ஏன்? அது இத்திட்டத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது.
பண்ணையார் மனநிலையோடு செயல்படும் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக, விவசாய மக்களின் பூர்வீக நிலங்களைக் காக்கும் பணியில், விவசாயிகள் மற்றும் பரந்தூர் மக்களோடு நமது வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கரம் கோர்த்து களம் காண்கிறார்.
இந்நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் கண்ணீரையும் பொருட்படுத்தாது, வளர்ச்சி என்ற வார்த்தைய��ப் பயன்படுத்தி வஞ்சகம் செய்வது அபத்தமல்லவா?
எளிய மக்களின் குரலுக்குக் கூட இரக்கம் காட்டாத இந்த அரசை ‘எல்லோருக்குமான அரசு’என்று விளம்பரப்படுத்துவது வெற்று பெருமையைத் தவிர வேறு என்ன?
அரசுத் திட்டங்கள் என்ற போர்வையில், அதிகார வலிமையில், இந்த எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறீர்கள். அந்த எளிய மக்களே உங்கள் அதிகாரத்தை இல்லாமல் ஆக்கும் காலம் விரைவில் வர உள்ளது. மண்ணைக் காக்கும் இந்த மகத்தான போராட்டத்தில் அந்த மக்களின் முன்பு உங்கள் ஆதிக்கம் ஒருநாள் மண்டியிடும். இதை அதிகார வர்க்கத்திற்கு உரக்கச் சொல்கிறோம்.