Top Tweets for #stronglyrecommend
மர்ம தேசம் - விடாது கருப்பு
மொத்தம் 79 எபிசோட்கள். ஒவ்வொன்றும் முன், பின் டைட்டில் க்ரெடிட்ஸ் தவிர்த்து தலா 18 நிமிடங்கள் ஓடுகிறது. ஆக மொத்தம் 24 மணி நேரம். இன்றைய வெப்சீரிஸ்களோடு ஒ��்பிடுகையில் இது மிக நீளம் தான். ஒரு நல்ல இயக்குநரும் எடிட்டரும் இன்று சேர்ந்தால் இதைப் பாதியாகக் குறைத்து இன்றைய பார்வையாளனுக்குத் தோதாக ஆக்கலாம். (மலையாளப் படம் போல் ஒருவர் நடந்து வருவதை 30 வினாடிகள் காட்டுகிறார்கள்.)
இந்திரா சௌந்தர்ராஜன் மீது இதுவரை எனக்குப் பெரிதாய் ஒரு மதிப்பு இருந்ததில்லை. இதில் அவர் தான் கதை, திரைக்கதை, வசனம். நிஜமாகவே பிரம்மிப்பான வேலை. கதையும் அன்றைய த���திக்குப் புதுமை தான் என்றாலும் இது அடிப்படையில் ஒரு ராபின்ஹூட் கதை.
திரைக்கதையில் முதல் 69 எபிஸோட்களிலும் அன்று - இன்று என்று பிரித்து கதையை நகர்த்திய உத்தி பிரமாதம். ஓர் எழுத்தாளனாய் அதன் சிரமங்களை உணர்கிறேன். ஃப்ளாஷ்பேக்கில் நடக்கும் சம்பவத்துடன் நடப்புச் சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்த வேண்டும். நாவல் என்றால் இந்த அன்று - இன்று அத்தியாங்களின் நீளம் பிரச்சனை இல்லை. ஆனால் சீரியலில் குறிப்பிட்ட நேரம் மட்டும் தான். இழுக்கக் கூடாது, ரொம்பவும் ச���ருக்க முடியாது, சுவாரஸ்யம் பேணவும் வேண்டும். பெரும்பாலான எபிஸோட்களில் இந்தத் திரைக்கதை வித்தையை அழகாகச் செய்திருக்கிறார் இ. சௌந்தர்ராஜன். அதுவும் சில இடங்கள் தவிர்த்து மிகுந்த தர்க்கப்பூர்வமாகக் கதை நகர்கிறது. 90களின் குக்கிராம வாழ்க்கை முறையை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பையும் இது அளிக்கிறது.
வசனங்களில் கூட பெரும்பாலான இடங்களில் கூர்மையான மற்றும் பொருத்தமான துல்லியம். ("நீங்க என்னைப் புரிஞ்சுக்கலைனாக்கூடப் பரவால்ல. ஆனா தப்பாப் புரிஞ்சுக்காத��ங்க.") சரியான சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். (நான் படித்த அவரது மிகச் சில நாவல்களில் இதை உணர்ந்ததே இல்லை.) எல்லாம் தாண்டி கொஞ்சம் உளவியலையும் தொடுகிறது; கடவுள் நம்பிக்கை தொடர்பான சில மேலோட்டத் தத்துவ விசாரங்களுக்கும் இட்டுச் சொல்கிறது. கள்ளர் எனச் சொல்லும் ஓரிரு இடங்களில் பெருமிதத் தொனி தெரிந்தாலும் ஆண்டசாதித் திமிரை எதிர்க்கும் வசனங்களும் உண்டு.
இதன் ஆக்கமும் ஆச்சரியகரமானதாக இருக்கிறது. 1997-98 வாக்கில் சன் டிவியில் இது வெளியாகி இருக்கிறது. முதல் விஷயம் இதன் ஷூட்டிங் பாதிக்குப் பாதி அவுட்டோர். அடுத்து ஒளிப்பதிவுத் தரம் மற்றும் அர்த்தப்பூர்வக் கோணங்கள் (உதாரணமாய் ஃப்ளாஷ்பேக் முழுக்க சிறுவன் ராசுவின் பார்வையில் என்பது அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.)
அப்புறம் ஒலிப்பதிவு. நிறைய சூழல் ஒலிகள் (உதா: கடிகாரத் துடிப்பு, பறவைகள் கீச்சொலி, நீரின் சலசலப்பு, காற்றின் சப்தம், பாத்திரங்களின் ஒலி, மனிதர்களின் நடமாட்டம் மற்றும் பேச்சு, சினிமாப் பாடல்களின் பின்னணி) பொருத்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட லைவ் ரெக்கார்டிங் போல். (சினிமாவிலேயே லைவ் ரெக்கார்டிங் அதன் பிறகு அலைபாயுதே, விருமாண்டி காலத்தில் தான் வந்தது.) 23 ஆண்டுகள் கழித்து இன்றைய சீரியல்களில் கூட இத்தகு ஒலித் துல்லியத்தைக் காண முடிவதில்லை என்றே தோன்றுகிறது.
2000களில் தொலைக்காட்சி நட்���த்திரங்களாய் ஆன பல நடிகர்கள் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். பொன்வண்ணன், மாஸ்டர் லோகேஷ் (சிறுவன் ராசு பாத்திரம்), பூசாரியாக நடித்தவர், தேவதர்ஷினி, பூவிலங்கு மோகன், மோகன் ராம், விஜயசாரதி எனப் பலரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இதுவரை நான் பார்த்த சினிமா மற்றும் சீரியல்களில் ஆகக் கொடூரமான் வில்லன் பாத்திரம் என்றால் இதில் வரும் பேச்சிப் கிழவியைத்தான் சொல்வேன். அவ்வளவு நுட்பமாய்ச் செதுக்கல். சிடி ராஜகாந்தம் சிறப்பாக அப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
சீரியலின் நாயகி ரீனா பாத்திரம் (தேவதர்ஷினி) என்றாலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் கவர்ந்த பாத்திரம் சிவகாமியுடையது (அக்கால நட்சத்திரமான சிவகவிதா நடித்திருக்கிறார்). ரத்னாவாக நடித்திருக்கும் மீனாகுமாரியின் முகமும் குரலும் அத்தனை இனிமை!
கிட்டத்தட்ட பாதி அளவிலான எபிஸோட்கள் கடந்திருந்த போதே யார் கருப்பு என்பதை ஊகித்து விட்டேன். ஆனாலும் அது எவ்வகையிலும் தொடர்ந்து ஆர்வமாகப் பார்க்கத் தடையாக இருக்கவில்லை. ஏனெனில் கதையில் நமக்குத் தெரிய வேண்டிய விடை அது மட்டுமல்ல. சுமார் கால் நூற்றாண்டுக்கு முன் இந்த சீரியலுக்காக வாராவாரம் காத்திருந்தோரை எண்ணினால் பொறாமையாக இருக்கிறது. குதிரை, கருப்பு என அது ஒரு தனி அனுபவமாக இருந்திருக்கும்.
#MarmaDesam #VidaathuKaruppu
#StronglyRecommended

Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
118.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.6M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers
