Vijay Makkal Iyakkam (VMI) was started in 2009 and expanded across all districts, with more than 10 lakh active members becoming part of the movement. Later, in 2024, VMI was converted into a political party as Tamilaga Vettri Kazhagam (TVK). (1)
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.