கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்க�� உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிக���் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச��சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணு��்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்ன���ன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
திராவிட மாடல் அரசு மக்களுக்காக செயல்படுத்திய மகளிர் உரிமைத்தொகை திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட நலத்திட்டங்களை புதிதாக அமையும் அரசு தொடர வேண்டும்.
#DMK
திராவிட மாடலும்..
ஸ்டாலினும்..
கடந்த ஐந்து வருட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி கடல் கடந்து சென்று அயல்நாடுகளின் மக்கள் மன்றங்களில் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது..
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வீறுகொண்டு வெற்றி பெறும்..
#திராவிடமாடல்
வாரிசு அரசியல் பற்றி வாய்கிழிய பிரச்சாரம் செய்த விஜய் அவர்கள் இனி ராகுல் காந்தி அவர்கள் நேருவின் கொள்ளுபேரன்,
இந்திராவின் பேரன்,
ராஜீவ் காந்தியில் மகன் இல்��ை என மறுத்து பேசி பிரச்சாரம் செய்வாரா????
@TVKVijayHQ
வழி நெடுகிலும் அவரின்
சாதனை முழக்கங்கள்!
கொள்கை முழக்கங்கள்!
அவரால் உயர்த்தப்பட்ட கட்டிடங்கள்!
அவரால் வளமான தொகுதி!
அழுபவர்களை பார்த்து அழாதீர்கள் என்கிறார். எப்படி அழாமல் இருப்போம்?
You are a True Leader - You are a fighter - People's CM our @mkstalin
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, ��ோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள��!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன���றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - ��னி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
முதல்வரின் கரம் பற்றி ' நீங்கள் தான் எங்களுக்கு நிரந்தரம் ' என்று சொன்னோம். ஆம் நீங்கள் தான் எங்களுடன் எல்லா நேரத்தில் நின்ற, நிற்க போகும் முதல்வர்!
@mkstalin