Last good movie from mani thatha🫡
Romba palaya gangster setup than adhula family feud add panni maja va kindi kuduthuruparu
Ippo kuda konja naal munnadi colors tamil la pathen oru scene kuda bore adikala
Aravindsamy than prakashraj accident pannuvan,arun vijay vanthu simbu oda gf kolluvan kadaisi simbu va sethupathy potu thalluvan ipdi ella twist-um nalla irukum❤️🔥
🎥 8 Years of chekka chivantha vaanam
ஆதரவற்ற முதியோர்/ கைம்பெண்கள் / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களின் விவரங்களைச் சரிபார்க்க தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை பிர்க்கா வாரியாக சிறப்பு முகாம்களை நடத்திட வேண்டும்
தமிழ்நாடு அரசிற்கு விசிக வேண்டுகோள்
—————————
தமிழ்நாடு அரசின் முதியோர்/ ஆதரவற்றோர்/ கைம்பெண் உதவித்தொகை பெற்று வந்த பலருக்கு கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அத்தொகை வழங்கப்படவில்லை.
உதவித்தொகை பெறுபவர்களின் அடையாள விவரங்கள் சரிவர இல்லை என்பதால் நிறுத்தப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை கள அலுவலர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
தற்போது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியா்கள் ஒரு அல��வலகச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் உதவித்தொகை நிறுத்தப்பெற்றவர்கள் விவரங்களைப் பெற்று சரிபார்த்து பதிவு செய்ய அஞ்சலகத்துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்களை வட்டாட்சியர் அலுவலங்களில் நடத்தவும், இந்த முகாம்கள் நடப்பதை அவர்களுக்கு வருவாய் கிராம ஆய்வாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முகாம் தொடர்பாக வெள��ப்படையாக அறிவிக்கப்படவில்லை என்பதோடு, பாதிக்கப்பட்டவர்கள் அவர்களாக வருவாய் அலுவலர்களைத் தொடர்பு கொ��்டாலொழிய இதைப் பற்றிய தகவலை அவர்கள் அறிய வாய்ப்பு இல்லை.
வாழ்வின் விளிம்புநிலையிலும், மிகவும் வறிய நிலையிலும், பெரும்பாலும் வயது முதிர்ந்து உடல்நலிவுற்றவர்களும் தான் இத்திட்டங்களின்கீழ் உதவித்தொகை பெறுகின்றனர்.
இந்த உதவித்தொகையைப் பெற வசிப்பிடத்தில் இருந்து தொலைவிலுள்ள வட்டாட்சியர் அலுவலம் சென்று விவரங்களை அளிக்க, தேவையான போக்குவரத்து, பொருளாதார வலிமையற்று, உடல் நல��வுற்று கையறு நிலையில் இருக்கின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
உதவித்தொகையை முழுவதுமாக நம்பியுள்ள இவர்கள் அதனை பெறுவதற்கு உரிய தகுதி இருந்தும் முகாம் சென்று அதனைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளதை அரசு உள்வாங்க வேண்டும்.
அரசின் நிதிச்சுமையைக் குறைக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்விதத்திலும் பயன் அளிக்காத இந்தச் சிறப்பு முகாமை நடத்தி பயனாளிகளை நீக்கிடும் அரச��� அலுவலர்களின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
ஏழை எளிய மக்களுக்கான இத்திட்டங்கள் அவர்களுக்கு முழுமையா��ப் பயனளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை உதவித்தொகை பெறுபவர்களின் முகவரி விவரங்களைச்
சரி பார்க்கும் முகாம்களை வருவாய் பிர்க்காவாரியாக நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக அறிவுறுத்த வேண்டும்; அனைத்து எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்
குடியரசுத் தலைவருக்கு விசிக சார்பில் இன்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தேன்!
சமூக நீதிச்சமூகங்கள் எழுச்சித்தமிழரை @thirumaofficial ஆசான் இவரென கொண்டாடுவதை கண்டு மனம் பொறுக்காத அற்பர்கள் …
விடுதலைச்சிறுத்தைகள��� கட்சி
அமைச்சரவையில் இடம் பெற்றதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள்….
காழ்ப்புணர்வு காரணமாக கத்திக்கொண்டிருக்கிறார்கள் !
இப்போது ஆர் எஸ் எஸ் கழித்து வைத்த மாட்டிறைச்சி அரசியலை கிண்டிப்பார்க்கிறார்கள்.
மாட்டிறைச்சி என்பது சர்வதேச உணவு.
அதை அறியாமல் இருப்பது கிணற்றுத்தவளைகளின் மடமை.
விரும்புவோர் கோரிக்கையை பரிசீலிப்பது பரிவுள்ள அரசின் கடமை.
அடிக்கிற காற்றில் உயரே பறக்��ும் காகிதமென வயிறெரிந்தாலும் ,
உங்களால் தொடமுடியாத உயரத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதை ஏற்றமைக்கு பாராட்டுக்கள் !
தோழர்களே
அடர்காட்டில் நரிகள்
ஊளையிடுவது செய்தி அல்ல !
சிங்கங்களின்
எதிர்வினைதான் செய்தி!
சகோதர சமூகத்தை சீண்டுவதும்
சீண்டலின் எதிர்வினையை காரணங்காட்டி தம் சமூகத்தை தூண்டுவதும்
சாதிய சனாதன கும்பலின் அரசியல் யுக்தி.
சீண்டுவதும் தூண்டுவதுமாய்..
ஆர் எஸ் எஸ் கொண்டையை மறைக்க தெரியாத கோமாளிகளை கடந்து செல்வோம்.
மீண்டும் சொல்வோம் …
சிறுத்தைகளின் கொடி!
காற்றில் அசையும் கொடியல்ல
காற்றையே அசைக்கும் கொடி…!
செங்கல்பட்டு ம��வட்டம் தாம்பரம் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் விடுதலை முன்னணி (LLF - VCK) தொழிற்சங்க பேரவையின் சார்பில் தமிழர் எழுச்சி நாள்,தொழிற்சங்க பேரவை 20ஆம் ஆண்டு துவக்க விழா, தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு தீர்மான விளக்க கூட்டத்தில் பங்கேற்றேன்!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரட்டை வெள்ளி வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஜப்பான், ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் நாளிலேயே இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்துள்ளார் தமிழ்நாட்டைச் சார்ந்த இளவேனில் வாலறிவன்.
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவிலும���, தனிநபர் பிரிவிலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இளவேனில் வாலறிவன் மேலும் பல சர்வதேச வெற்றிகளை குவித்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.