விசிக சார்பில் மனு
அச்சு ஊடகத்தொழிலைக் காப்பாற்றக் கோரி பிரதமருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.
-தொல்.திருமாவளவன் எம்.பி
Thol.Thirumavalavan
நலிந்துவரும் அச்சு ஊடகத் தொழிலைக் காப்பாற்றக் கோரி,அவ்வூடக அதிபர்கள் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர்.இன்று இந்து என்.ராம், தினமலர் ஆதி மூலம்,தினகரன் ரமேஷ் ஆகியோர் என்னைச் சந்தித்தனர்.காகிதத்துக்கான சுங்கவரிரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்-தொல்.திருமாவளவன்.
மலிவுவாடகை குடியிருப்பு, 2 மாதங்களுக்கு உணவுப் பொருள், இலவசஉணவு ஆகியவை #புலம்பெயர் தொழிலாளருக்கான நிவாரணமென்று #நிதியமைச்சர்பூரிக்கிறார். ஆனால்,1000கிமீ நடக்கிறவர்களுக்கும், விபத்தில்சிக்கி��ும் வெயிலில்சுருண்டு விழுந்தும் சாகிறவர்களுக்கு தற்போது என்னநீதி?தீர்வு?
- தொல்.திருமா.
ந��தியமைச்சரின் 2ஆம் நாள் விளக்கமும் வழக்கமான #வார்த்தைவித்தகமே.புலம் பெயர்தொழிலாளர்,சிறுவணிகர்,சாலையோரவணிகர், சிறுவிவசாயிகள் பற்றி பேசியிருக்கிறார். ஆறுதல்தான்.ஆனால் அவர்களுக்கு உடனடியாக செய்யும் உதவிகள்தான் என்ன? வங்கிகளைநோக்கி கை நீட்டினால் போதுமா? பிழைத்திருந்தால் பார்ப்போம்.
தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்���ளின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி.
ஆனால்,அந்தவேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிக்கிறது.
அதில் உள்நோக்கமில்லை;என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்