20 நாட்களுக்குள் பணம் வங்கி கணக்கு செலுத்துகிறார்கள். 20 நாட்கள் நிலுவையில் வைத்துக்கொள்கிறார்கள்.மேலும் எத்தனை நாட்களுக்குள் பணம் வருகிறது என்பதற்கான பில் எங்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. முதல்வர் எங்களுக்கு உயர்த்தியுள்ள லிட்டருக்கு 3 ரூபாய் பணம் எங்கே என்று தெரியவில்லை.
ஆவின் பலகம் விவசாயிகளை ஏமாற்றுவதாக நாங்கள் உணர்கிறோம். ஆகவே விவசாயிகளுக்கு வாரம்தோறும் எங்களது உழைப்புக்கான ஊதியம் சரியாக கிடைக்க செய்யும் வரும் முதல்வர் திரு ஸ்டாலின் அய்யாவிடம் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறோம்.
ஐயா நான் எங்களது ஊரில் உள்ள தென்றல் நகர் ஆவின் பால் சேகரிப்பு நிலையத்தில் தினசரி 55 லிட்டர் பால் செலுத்தி வருகிறேன் ஆனால் எனக்கு பால் பணமானது சரியாக கிடைக்கப்பெறவில்லை. எப்போதும் பத்து நாட்கள் பால் ஆவின் பால் நிறுவனத்தில் வைத்துக்கொள்கிறார்கள். மேலும் 40 நாட்கள் ஒரு முறை 1/2