எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத்தாலும் அப்படியே வாந்தி எடுப்பார்.
ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே!
#TVKFails
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு உடனடியாக தலைவர் அவர்கள் 36 பேர்கள் கொண்ட 18 குழுக்களை அமைத்து தமிழ்நாடு முழுவதும் சென்று கள ஆய்வை மேற்கொண்டு அறிக்கையாக அளிக்கும் படி உத்தரவிட்டார்.
“ஒரு கோடிக்கும் அதிகமான பேர்கள் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு இயக்கத்தில் 36 பேர்களில் ஒருவராக நம்மையும் நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்து அனுப்புகிறாரே” என்று மகிழ்வோடு அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு கிளம்பினாலும் நினைத்தது போல அத்தனை எளிதாகவோ மகிழ்வாகவோ இல்லை அந்தப் பணி!
ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணி அளவில் துவங்கும் அந்தப் பணி முடிவடையும் போது பின்னிரவு ஆகிவிடும்!
கடந்த 20 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளில் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் உள் வாங்கி அதை சமநிலை மாறாது அறிக்கையாக தலைவரிடம் அளிக்கும் பணியை இன்று நிறைவு செய்தோம்.
இத்தனை பேர்கள் இருக்கும் இந்த இயக்கத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்த மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கும் , இளந் தலைவர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
வெற்றிகள் வரும்..போகும்! கொள்கையும் கழகமும் நிரந்தரம்!!
நன்றியுடன்,
எம் எம் அப்துல்லா
ரேகா பிரியதர்ஷினி
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD.
Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country.
Wishing you good health and happiness.
@yadavtejashwi
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் ��வர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழி��ாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. ப��ரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் வ��ருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
Birthday wishes to Thiru. @laluprasadrjd.
His commitment to secularism and social justice continues to inspire democratic and progressive forces across the country. His leadership and dedication to democratic values remain instrumental in uniting democratic forces and safeguarding the nation from divisive influences.
Wishing him good health and many more years of public service.
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்முறை விவகாரத்தை மூடிமுறைக்க முயற்சிக்கும் அந்த மேலிடம் யார்?
தவெகவை சார்ந்த பெண்ணுக்கே நீதி வழங்க மறுக்கும் நீங���கள் எப்படி ஒட்டுமொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க போறீங்க CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காத விஜய்க்கு, சிங்கப் பெண் பாதுகாப்புப் படையைத் தொடங்க அருகதை உண்டா?
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு தனிமனித ஒழுக்கம் குறித்து பாடம் எ���ுக்கலாமா?
#முரசொலி
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், ��ாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்ந���டகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்���ாது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
புத்தெழுச்சி-10
துறைமுகம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள், செல்வி. மு.ரோஜா ஆகியோர் பங்கேற்று 700 வட இந்தியர்களுக்கு நலத்திட்ட ���தவிகளாக அரிசி, மளிகைப் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் நிதியுதவியை வழங்கி சிறப்புரையாற்றினர்