2026 சட்டமன்ற தேர்தலில் பிஜேபியையும், அதிமுகவையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்றிட, ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திராவிட மாடல் 2.0 அரசை மீண்டும் அரியணையில் அமர்த்துவோம்.
#OraeThalaivanMKS#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்
எங்கள் கு��லை நசுக்க நினைக்காதே! எங்கள் உரிமைகளை ஒருபோதும் தாரைவார்க்க மாட்டோம்.
'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கு��்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்ற���ச் சென்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
“அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன்.
2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே,
இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு.
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது.
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'!
2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
மக்களின் புன்னகையே நமது வெற்றியின் சாசனம்! பரமக்குடி மற்றும் தூத்துக்குடியில் அலைமோதிய மக்கள் கூட்டம், திராவ���ட மாடல் ஆட்சியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகிறது. சாதனைகள் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள் ஏப்ரல் 23 வாக்களிப்பீர் உதயசூரியன்.
#VoteForDMK
வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல���லூர், ஆலங்குளம், தென்காசி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர்,மற்றும் சிவகாசி எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திர���மதி. @KanimozhiDMK MP அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். மகளிர் உரிமைத் தொகையும், விவசாயிகளின் நலனுமே எங்களின் அடையாளம்; வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
தி.மு.கழக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய 10 இலட்சம் மடிக்கணனிகளை வழங்கி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது!
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்! 🌄
#VoteForDMK
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census.
This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented.
Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation.
It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years.
Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years.
🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பி���் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற��் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.
🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிப���்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு ���ொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
Preparedness cannot be outsourced to the people.
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்���ு மக்களா?
#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
🗓️11/03/2026
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து,
⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்
⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவு���் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்
- எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (https://t.co/iLujriPP2v)
🗓️12/03/2026
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (https://t.co/5yJehl0kYW)
🗓️14/03/2026
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு,
🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்ப���ும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.
🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில��� எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை ��ெய்துகொள்ள அனுமதி.
உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (https://t.co/5H0GZOFAHN)
அப்போதே கேட்டேன்:
மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
அப்போதும் பதில் இல்லை.
🗓️15/03/2026
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அட���த்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், ��மிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!