திட்டங்களிலிருந்த��� அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டி��ுக்கிறது!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகள���ல் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்��ளில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ���Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மி��் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்த���்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறு���ளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அ��ிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்த���க்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக���களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து ��க்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்ப���ியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
TN fought. TN won.
#Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance.
Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism.
The south stood united and made its voice heard. Democracy prevailed.
We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain.
This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering.
My sincere thanks to all opposition parties who stood united.
#TNWillFightTNWillWin #SayNoToNDA
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!
இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன��றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகிய��ற்றுக்காகவே நின்றுள்ளது.
தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!
நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நி��்பதுதான் நமது உறுதி!
இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளை���ும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விரு��்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலா��� வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலி��ீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
கர்நாடகா பாஜககாரன் கர்நாடகாவுக்காக பேசுரான்.
கேரளா பாஜககாரன் கேரளாவுக்காக பேசுரான்.
ஆந்திரா தெலங்கானா பாஜககாரன் அந்த மாநிலங்களுக்காக பேசுரான்.
North India பாஜககாரன் அந்ததந்த மாநிலங்களுக்காக பேசுரான்.
தமிழ்நாடு பாஜககாரன் மட்டும் தமிழ்நாடு நாசமாக போகனும்னு பேசுரான் ஏன் ?
மொழி ஆதிக்கத் திமிர்!
பங்கெடுப்பது ஆங்கில செய்தி சேனல் விவாதத்துல. ஆங்கிலம் பேச தெரியுமாம்... ஆனா இந்தியிலதான் பேசுவாங்களாம்! இந்த ஆதிக்கத் திமிருக்குத்தான் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
#StopHindiImposition#GetOutModi