Inspiration level....👆👆 All the positive vibes for me is from @hiphoptamizha thanks na to be as my inspirator all the vibes is from you only na😍❤️❤️ @Jeevabeatz #adhiannatamibi.
.@hiphoptamizha
@Jeevabeatz
Life la oru vaati avathu ungala meet pannanum nu asai ya iruku na
அன்பான தம்பி 'ஹிப் ஹாப்' ஆதி, @hiphoptamizha ஆவணப்பட இயக்குநர்கள் @IamelangoS இளங்கோ, பிரதீப் குமார் மற்றும் 'தமிழன்டா இயக்கம்' @tamizhandamvmt சார்ந்த இளைஞர்கள் அனைவருக்கும்,
என் அன்பான வணக்கங்கள்.
துருக்கி��ில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Foca International Archaeology & Cultural Heritage Film Festival),நீங்கள் உருவாக்கிய 'பொருநை' #porunai ஆவணப்படம் திரையிடத் தேர்வாகியுள்ளது என்ற செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்றாலும், நீங்கள் முன்னெடுத்துள்ள இந்த அறப்பணியைப் பார்க்கும் போது நெஞ்சம் நிறைந்து உங்களை வாழ்த்தத் தோன்றுகிறது. லாப நோக்கமில்லாமல், இந்தச் சிறிய வயதில் தம்பி ஆதியும், மற்ற இளைஞர்களும் இணைந்து செய்துள்ள இந்த வேலை மிகவும் மகத்தானது. உங்கள் உழைப்பும், வரலாற்றுத் தேடலும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
உலகிற்கே நாகரிகத்தையும், பல வாழ்விய��் நெறிகளையும் கற்றுக்கொடுத்த மூத்த குடி தமிழ்க்குடி. ஆனால், நாம் செய்த மாபெரும் தவறு, நமது அரிய வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தத் தவறியதுதான். அந்த வரலாற்றுப் பிழையைத் திருத்தும் விதமாக, தொல்லியல் தரவுகளோடு ஒரு பிரமாண்டமான ஆவணப்படத்தை நீங்கள் எடுத்திருப்பது சாதாரண விஷயமல்ல; இது காலங்காலமாக வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் ஒரு மாபெரும் சாதனை.
"கல் தோன்றி மண் தோன���றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி" என்று நம் புலவர்கள் பாடியதை, ஒரு காலத்தில் உலகம் வெறும் கவிதை நயம் என்று சுருக்கிப் பார்த்தது. ஆனால், இன்று அகழாய்வுகள் அதை அறிவியல் பூர்வமாக, அகிலத்தின் முகத்தில் அறைந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
பொன், பொருளைத் தேடி உலகம் அலைந்தபோது, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியில் இருந்த ‘நெ��்மணிகளை’ அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிகல் ஆய்வகத்திற்கு (Beta Analytic) #betaanalytics கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி, தமிழனின் நாகரிகம் 3,200 ஆண்டுகள் (கி.மு. 1155) பழமையானது என்பதை அறிவியல் தரவுகளோடு நிரூபித்துக் காட்டியது நமது தொல்லியல் துறை. உலகப் புகழ்பெற்ற சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு தொடர்புடைய குறியீடுகளைக் கொண்ட பானையோடுகள் நெல்லை மண்ணில் கிடைத்திருப்பது, இந்தியாவின் வரலாறே தெற்கிலிருந்துதான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆதிச்சநல்லூரில் உலகமே வியக்கும் வண்ணம் கண்டுபிடிக்கப்பட்ட இரும்புக் கருவிகளும், தங்க நெற்றிப் பட்டயங்களும், வெண்கலப் பொருட்களும் நம் மூதாதையர்கள் எத்தகைய தொழில்நுட்ப அறிவோடு சிறந்த கைவினைஞர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அழிக்க முடியாத சான்றுகள். இயற்கையோடு இயைந்து, வாழ்வியலை அறத்தோடு கட்டமைத்த சமூகம் நம்முடையது.
கொற்கைத் துறைமுகத்தைப் பற்றி நீங்கள் ஆவணப்படுத்தியிருப்பது மிகவும் முக்கியமானது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும், எகிப்தியர்களோடும் நடுக்கடலில் நங்கூரமிட்டு வணிகம் செய்தவன் தமிழன். கொற்கையின் முத்துக்கு உலகச் சந்தையில் இருந்த மதிப்பும், யவனர்கள் (ரோமானியர்கள்) தங்கக் காசுகளைக் கொடுத்து நம்மிடம் மிளகையும், முத்தையும் வாங்கிச் சென்ற வரலாறும் 'பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரியன் சீ' (Periplus of the Erythraean Sea) போன்ற அயல்நாட்டுப் பயணக் குறிப்புகளில் இருப்பதையே நீங்கள் ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
கீழடியிலும், #keeladi பொருநையிலும் கிடைத்த அகழாய்வு முடிவுகள் சொல்லும் மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. அங்கு ஆயுதங்களை விட, தாயக்கட்டைகளும், சுடுமண் பொம்மைகளும், நீர் மேலாண்மைக்கான #watermanagement சுடுமண் குழாய்களு��்தான் அதிகம் கிடைத்துள்ளன. இதன் மூலம், த��ிழன் என்பவன் போரை மட்டும் நேசித்தவன் அல்ல; அவன் கல்வியிலும், கலையிலும், நெசவிலும் சிறந்து விளங்கியவன், அனைவரையும் சமமாகப் பாவித்த ஓர் உன்னத நகர நாகரிகத்தை (Urban Civilization) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து காட்டியவன் என்பது நிரூபணமாகிறது.
நான் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவன் என்பதால், என் மண்ணின் வரலாறும், என் தாய்க்கிழவியாம் பொருநை நதியின் பெருமையும் சர்வ���ேச அரங்கிற்குச் செல்வதைப் பார்க்கையில் எனக்குள் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கிற்கு அளவே இல்லை. தாமிரபரணி எனக்கு வெறும் நதியல்ல; அது என் நரம்புகளில் ஓடும் ரத்தம். அதன் கரையில் புதைந்து கிடக்கும் என் பாட்டனின் பெருமையை நீங்கள் உலகறியச் செய்வது எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் பெருமிதத்தைத் தருகிறது.
Inspiration level....👆👆 All the positive vibes for me is from @hiphoptamizha thanks na to be as my inspirator all the vibes is from you only na😍❤️❤️ @Jeevabeatz #adhiannatamibi.
.@hiphoptamizha
@Jeevabeatz
Life la oru vaati avathu ungala meet pannanum nu asai ya iruku na
From watching your movies to being a part of your movie na , I’m always amazed by what you do! 🎬✨ You’ve always guided me as a brother and mentor, teaching me what to do and what not to. I’ve learned so much from this journey so far.
Forever ❤️ @hiphoptamizha