தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” எ���்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் தொடரில் நடைபெற்ற சம்பவங்கள் துள��யும் மரபைக் காக்கும் வகையில் இல்லை.
மேகதாது என்ற ஜீவாதாரப் பிரச்சினையில் மிக அலட்சியமாக, எந்த விவாதமும் இல்லாமல் ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை இந்த பொய்க்கால் குதிரை அரசு நிறைவேற்றியிருப்பது, அவையின் செயல் விதிகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல்.
மாண்புமிகு அம்மா அவர்களின் முயற்சியால் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டு, மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள��ன் முயற்சியால் அமையப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் அமையப்பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான ஆணையமாக அது செயல்படும் நிலையில், இன்னொரு ஆணையம் என்பது இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியை நீர்த்துப் போகச் செய்து, கர்நாடக அரசின் சதி வலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தள்ளும் செயலாகும்.
விவரம் தெரியாமல், விவசாயிகளின் வலிகள் புரியாமல் இன்றைய அரசு இப்படி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுத் தவறு.
சட்டமன்ற உரைகள் என்பது பதிவில் ஏற்றக் கூடியது, வரலாற்றில் நிற்கக் கூடியது. அங்கே Diplomacy, Decency, Decorum தான் ஓங்கி நிற்க வேண்டும். ஆனால், நேற்றைய எதிர்க்கட்சித் தலைவர் உரை மற்றும் இன்றைய முதல்வரின் பதிலுரையில் Disrespecful Slander தான் முன்னே நின்றது.
“சி எம் சார்… இப்போ நீங்க உங்�� ஆரஞ்சு கலர் வேன்-ல நின்னு பேசுறதா நினைச்சி, மனப்பாடம் பன்ன ஸ்கிரிப்டை ஒப்பிச்சி, Action பண்ணி காமிங்க” என்று உரையை எழுதிக் கொடுத்தவர் சொல்லிவிட்டார் போல… இன்றைய முதல்வரும் அப்படியே செய்துவிட்டார்.
அதிலும்,
எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து என்ன விளக்கம் இருந்தது?
மின்வெட்டு குறித்து என்ன பதில் இருந்தது?
அமோனியா கேஸ் லீக் மரணங்கள் ��ுறித்து என்ன பேசப்பட்டது?
ஒன்றுமே இல்லையே..!!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த ஒரு சிறுமிக்காகவும் இன்றைய முதல்வரின் மனம் பதறியதாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கரூர் மரணங்களையே மிக எளிதாக கடந்து செல்கிறார். அதிலும், கரூர் மரணம் பற்றி பேசும் போது, தன் மீது பழி போடுவது “வேற லெவல்” என்ற வார்த்தையை சொல்கிறார் என்றால், நாம் எப்போதும் சொல்வோமே, “Narcissistic Behaviour” , அது இது தான்!
மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினராக அல்லாத ஒரு முன்னாள் முதல்வர் குறித்து, அவரது கட்சியினர் இல்லாத நேரத்தில் பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சி சபாநாயகர் அனுமதி அளிக்கிறார் என்பதற்காக ஒரு முதல்வர் தன் பொறுப்பின் தன்மை உணராமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சில அமைச்சர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளும் இன��றைய முதல்வர், பனையூர் பங்களாவில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து கம்பு சுற்றும் போது மட்டும் யாரும் குறுக்கிடக் கூடாதா? அப்படி குறுக்கிட்டால், மனப்பாடம் செய்த டயலாக்கை மறந்துவிடுவாரா ?
Point of Order என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சட்டமன்றம் மாட்டிக்கொண்டது தான் வேதனையின் உச்சம்.
இதில் ஒரு சைகை வேறு…
இதற்கு கைதட்ட ஒரு ரசிக வெறிக் கூட்டம்!
இது என்ன சட்டமன்றமா? சர்க்கஸ்ஸா?
அரசியலை ஏதோ Entertainment Platform போல கருதிக் கொண்டிருக்கும் ரீல்ஸ் முதல்வரே….
மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது Content அல்ல… Commitment!
மக்கள் பிரச்சனை பற்றி இனியாவது பேசுங்கள்!
(பி.கு. : அப்பா எங்க, மனைவி எங்க என்பதெல்லாம் மக்கள் பிரச்சனை அல்ல. மக்களுக்கு எது தேவையோ, அந்த அரசியலை மட்டுமே எந்நாளும் பேசுவோம்.)
Ex IPS Resignation letter/talk highlights🚨
/National parties dont speak the language... Emphasis on Regional, Diversity, Roots, Curture, Uniqueness... Obstruction from inside & outside.../
இந்த Dash-லாம் expect பண்ணாம, தெரியாம தான் you signed up with BJP ? @annamalai_k
இன்னும் எத்தனை கட்சி , எத்தனை இயக்கம் வந்தாலும்
அதிமுக தான் என் கட்சி என் கழகம் உயிர் உள்ள வரை அதிமுககாரன் தான் என்று சொல்பவர்கள் RT பன்னுங்க 🌱
தெரிஞ்சுக்கலாம் ✌️
மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, யூடியூபர் திரு. @SavukkuOfficial பல்வேறு தகவல்களைக் கூறி #பொய்க்கால்_குதிரை_அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்போதும் மைக்கைப் பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சி, Transparency என்றால�� நாங்கள் தான் என்ற ரேஞ்சுக்கு பேசும் மின்துறை அமைச்சராக இருக்கும் @CTR_Nirmalkumar, ஏன் தனது துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய திருட்டை பற்றி செய்திகளில் வெளிவருவதற்கு வருவதற்கு முன் கூறவில்லை? எங்கே போனது Transparency?
இதுபோன்ற அதிமுக்கியமான வழக்கை உடனடியாக CBCID-யிடம் ஒப்படைக்காமல், ஏதோ சாதாரண திருட்டு வழக்கு போல அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறுவது பொறுப்புள்ள செயலா? இந்த ��ிவகாரத்தை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்தீர்களா?
திரு. சவுக்கு சங்கர் கூறுவது உண்மையெனில், மின்துறை Vigilance இயக்குனர் அறையில் இருந்தே திருட்டு நடக்கிறது என்றால், இந்த ஆட்சி எப்படி Vigil ஆக இருப்பதாக கருத முடியும்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கூறியது போல, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
Data Theft நடந்திருக்கிறது.
எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தூயசக்தி என்கிறார்கள்… ஆனால் செயல்பாடுகளை பார்த்தால் நாம் வைத்த #பேரசக்தி என்ற பெயருக்கான பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது!
தரவுத் திருட்டு குற்றச்சாட்டுகளிலிருந்து, அமெரிக்க நீதிமன்றம் நம்பிக்கைப் பொறுப்பு (Fiduciary Duty) மீறியதாகத் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக முன்னிறுத்துவது- இதுதான் @pravchak அவர்களின் வரலாறு!
தன்னை நம்பி பணிகொடுத்த நிறுவனத்தையே ஏமாற்றி, நீதிமன்றத்தால் ஏமாற்று செயல் நிரூபிக்கப்பட்ட ஒருவரை, தமிழக மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவது என்ன மாதிரியான தூயசக்தி?
இந்திய இறையாண்மையைக் காப்பேன் என்றும், நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றுவேன் என்றும் இவர் உறுதிம���ழி என்பதை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்?
குற்றவாளிகள் என தீர்ப்பு இல்லாத தகுதியான தலைவர்கள் யாரும் உங்கள் கூட்டணியில் இல்லையா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?
Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு ,
உண்மை வெளிவர வேண்டும்!
@CMOTamilnadu@AIADMKOfficial
‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ - அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்
#ADMK | #TVK | #MinisterSrinath | #CMJosephVijay
https://t.co/bFZJsIl5dU
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது ���ன்ன மாதிரியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
புயலடித்தும் அதிமுக மீண்டு வருவதைப் பார்த்து தவெகவினர் Disturb ஆகுறத பார்க்க முடியுது.
காரணம் ரொம்ப சிம்பிள்.
அதிமுக Comeback கொடுத்தா, முதல்ல பயப்படற கட்சி தவெகவா
தான் இருக்கும்.
ஏன்னா முதன்மை எதிர்கட்சியா திமுக இருந்தா, கேள்விகள் வரும்போது, ஈசியா முந���தைய ஆட்சியை சாக்கு காட்டி ஒல��்பிட்டு எஸ்கேப் ஆகிடலாம்.
ஆனா ADMK கேள்வி கேக்க ஆரம்பிச்சு, அது மக்கள் கிட்ட ரீச் ஆச்சுனா, தவெக திணறும். எதையும் உருட்ட முடியாது.
அதனால்தான், கூட்டணியையும், Core Vote Bank யையும் மொத்தமா திமுக இழந்திருந்தாலும், அதை முதன்மை எதிர்கட்சியாக புரமோட் பண்ணுறார் விஜய்.
"‘ஆட்சி நடத்துவது எப்படி’ என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?" - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #Vijay
2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் Force ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?
அவ்வளவு தில் இருந்தா, #மெர்ச��் #மாஸ்டர் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?
இந்த லட்சணத்தி���், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்ப��ற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லா��வர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?
இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்க��ம் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று,
இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அ���ர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு ��ழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற
இதய தெய்வம் அம்மா அவர்களின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம்.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
களப் பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்!
@AIADMKOfficial
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக ��ருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன���னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” ��ன்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
"அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய @CMOTamilNadu, இன்று அதே விவசாயிகளை, தன் கீழ் உள்ள காவலர்களை ஏவி குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறார்!
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை, காங்கிரஸ் கட்சி கோபித்துக் கொண்டால் தனது மைனாரிட்டி ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கைது செய்கிறீர்களா?
விவசாயிகளை விட விளையாட்டு முக்கியம் எனக் கொச்சைப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு பக்கம்; போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யும் முதல்வர் மறுபக்கம். அதிகார மமதையில் ஆடினாள், மக்கள் சக்தியின் முன்னால் ஒருநாள் மண்டியிடத்தான் வேண்டும் என்பதை ஆள்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
#பொய்க்கால்_குதிரை_அரசு