தொகுதி பக்கமே வராமல் சென்னை CIT காலனி வீட்டிலேயே இருக்கும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் கண்ணில் படும் வரை பகிரவும்.
இவரும் திருச்செந்தூர் பக்கம் வருவதில்லை . @KanimozhiDMK
திருச்செந்தூர் தொகுதி திமுக MLA பாத்திரக்கடை அனிதா ராதாகிருஷ்ணனும் தொகுதி பக்கமே வருவதே இல்லை. @ARROffice
இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் #கந்தசஷ்டிவிரதம் காலத்தில் படும் அவல நிலையை பாருங்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கேக் வழங்கி, குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.!
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளிடையே உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.A. விஜய் அன்பன் கல்லாணை அவர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி, மகளிர் அணியினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியிலுள்ள இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் அவர்கள் (Dr.Jasper Wieck) சந்தித்துப் பேசினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr.Jasper Wieck, German Ambassador to India, New Delhi, at the Secretariat today (12.11.2026).
#CMJosephVijay
2018ம் ஆண்டு ஆட்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தளபதி விஜய், அன்று கொடுத்த வாக்குறுதியை இன்று முதலமைச்சராக நிறைவேற்றியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு உயிரிழந்த ஸ்னோலின் அவர்களின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on law and order in the State and the functioning of the Prison Department, at the Secretariat today (12.11.2026).
#CMJosephVijay