தீய எண்ணங்கள் அதிகம் வருகிறதா?
ஆக்கபூர்வமான ச���யல்கள் தடைபடுகிறதா?
எவ்வளவு முயன்றாலும் தீய,
காம எண்ணங்களிலிருந்து
விடுபட முடியவில்லையா ?
அடுத்தடுத்து அந்த எண்ணங்களே அலைகழிக்கிறதா ?
எல்லாமே கருமையத்தில் (Genetic centre) ஏற்கனவே பதிந்திருக்கும் பதிவுகளின் வெளிப்பாடுகள்.
கருமையம், சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் குறித்து விளக்கம் கொடுத்தால், தியான மார்க்கத்தில் இல்லாதவர்களுக்கு புரிவது கடினம்.
எனவே அந்த episode தவிர்த்துள்ளேன்.
தீய எண்ணங்கள் எப்படி வருகிறது?
நமது சுற்றுப்புற குழ்நிலைகளால், தேவையற்ற நண்பர்களால்,கட்டுபாடு இல்லாத வாழ்க்கையால், நாமாக வலிய சென்று மாட்டி கொள்ளும் வீடியோக்களால் சொல்லி கொண்டே போகலாம்.இத்தனை தீய செயல்களின் பதிவுகள் கருமையத்தில் ஆழமாக பதிந்திருக்கும்.
எப்படி மீண்டு வருவது?
இங்கு நீங்களே மருத்துவர்
நீங்களே நோயாளி.
இது போன்ற தீய எண்ணங்கள் வரும் போதே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இந்த தீய எண்ணம், இன்னின்ன விளைவுகள் ஏற்படுத்தி நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் என்று ஆழமாக யோசித்தால், அதுவும் கருமையத்தில் பதிந்து விடும்.
அடுத்த முறை தீய எண்ணம் வரும் போது, உங்கள் தற்சோதனை சிந்தனையையும் சேர்த்து தூக்கி கொண்டு வரும். இதுதான் practical solution.
அந்த நிலைக்கு என்னால் யோசிக்க முடியவில்லை என்றால் இன்னொரு
short Cut ம் உண்டு.
தீய எண்ணம் தோன்றிய உடனேயே உங்களுக்கு பிடித்த தெய்வத்தை
நினைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஆத்மார்த்தமாக யாரை குர���வாக ஏற்றுக் கொண்டீர்களோ அவரை நினையுங்கள்.
உங்கள் வாழ்க்கையில், நீங்கள் முன்னேற வேண்டும் என்று உண்மையாக நினைக்கும் குடும்பம்,உறவுகள், நட்புகளை நினையுங்கள்.
நாம் வாழ்வில் சாதிக்க நினைக்கும் சாதனைகளை நினையுங்கள்.
உங்களை கவர்ந்த இயற்கை காடசிகளை நினையுங்கள்.
உங்களை வாழ்வில் மேம்படுத்திய சாதனைகளை நினையுங்கள்.
இப்படி உங்கள் எண்ண ஓட்டத்தை, சரியான வழி தடத்தில், திருப்பினால், ��ீய எண்ணம் மெல்ல மெல்ல வலுவிழக்கும்.
தீய எண்ணங்களுக்கு தீனி போட்டு,
நடனம் ஆடாதீர்கள்.
ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
Dont invite problems and
serve tea at your desk.
எல்லாமே நம் கையில்தான்.
முடியும் என்றால் முடியும்.
சாதிப்போம்.
சிகரம் தொடுவோம். 👍
Flood situation reported in several areas; motorists urged to exercise caution
Flooding has been reported in several parts of the country following continued heavy rainfall, with authorities urging motorists to exercise extreme caution while travelling.
போராட்டம் பொய்யின் பக்கம் சாய்வதில்லை,
அது காலத்தின் கரங்களில் கனிந்து நிற்கும் சத்தியம்.
இடர்கள் அதன் பாதையை மறைக்கலாம்,
இன்னல்கள் அதன் நடையை மந்தமாக்கலாம்,
ஆயினும் அதன் பயன் ஒருபோதும் வீணாகாது.
காலம் கனியும் வேளையில்,
அந்தப் போராட்டமே வெற்றியின் மணிமுடி சூடி,
பெருமையின் பேரொளியாக உன் வாழ்வில் மீண்டும் உதிக்கும்.
முயற்சியில் நிலைத்த மனங்களுக்கு,
வெற்றி என்பது மறுக்கப்படும் பரிசல்ல,
சற்று தாமதித்து வந்து சேரும் அருள்வரம்.