நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையைக் கண்டித்து, சென்னை-எழும்பூர் பகுதியில் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்திருக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுபவர்களை அனுமதிப்பது கூட ஒன்றிய பாஜக அரசை பகைத்துக் கொள்வதாகிவிடும் என்ற அச்சத்தில் தான், இன்று இந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதா தவெக அரசு?
தவெக அரசால் அராஜகமாக கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்.
தி.மு.கழகத்தினர் மீது அடக்குமுறையை கையாளும் தவெக அரசின் கொடுங்கோன்மை வீழும்!
தமிழ்நாட்டின் கலையுலக அடையாளமாகவும் நட்பின் இலக்கணமாகவும் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன்.
தலைவர் கலைஞரின் பராசக்தி நாயகனின் புகழ் என்றென்றும் தமிழ்நிலத்தில் நிலைத்திருக்கும்!
Yesterday, I attended the National Consultation on the FCRA (Amendment) Bill, 2026, in New Delhi, organised by the Joint Action Forum on Minorities.
The consultation brought together political leaders, religious leaders, legal experts, and members of civil society to deliberate on the proposed amendments and discuss the way forward to safeguard constitutional rights, democratic values, and the freedom of association.
Today in Parliament, we protested against the Karnataka Government's proposal to construct the Mekedatu Dam across the Cauvery River, which threatens Tamil Nadu's rightful share of Cauvery water.
#DMKinParliament
I strongly condemn the lathi-charge on students and young protesters participating in the CJP-organised march to Parliament.
Instead of answering serious questions about alleged irregularities in our education system, the Union BJP Government has chosen using brute force over dialogue.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.
உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
Deeply saddened to learn of the passing away of Thirumigu. Chennamma, wife of former Prime Minister Thiru. @H_D_Devegowda .
My heartfelt condolences to H.D. Deve Gowda, his family, and all those grieving this loss.
I condemn the manner in which Delhi Police handled Mr. Sonam Wangchuk, dragging him and forcefully admitting him to a hospital.
The Union Government should engage with him in a meaningful dialogue. Mr. Wangchuk has consistently raised important concerns about the integrity of our education system, and those concerns deserve a sincere and constructive response.
He must be treated with dignity and respect. Above all, his life and well-being must remain the highest priority.
எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது.
நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது, நம் தமிழ்நாடு!
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம்.
“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!
திருவண்ணாமலை பாப்பம்பட்டி கலைமாமணி திரு. முனுசாமி அவர்களின் மகனும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த பெரியமேளக் கலைஞரும், சென்னை சங்கமம் கலைவிழாவின் தொடக்கக் காலத்தில் பங்கேற்றவருமான திரு. முருகன் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருந்தமளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், சக நாட்டுப்புற கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழனிக் கோவிலுக்கு சொந்தமான நிலம் கொள்ளைப் போவதை தடுக்கத் தவறிய தவெக அரசை விமர்சித்தும், அறநிலையத்துறையில் நடந்திருக்கும் மோசடிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காரணத்திற்காக அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த திரு. வினோத் சூர்யகுமார் அவர்களின் குடும்பத்தினரை நேற்றைய தினம் சந்தித்தேன்.
சமூக நலன் சார்ந்து, கழகத்தின் கொள்கை வழி செயல்பட்டதற்காக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கும் அந்த இளைஞருக்கு உறுதுணையாக கழகம் இருக்கும்.
கோவை - தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு, இந்த தவெக அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவுள்ளது.
பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
நாகர்கோவில் கிளை சிறையில் காவல்துறையினரின் வன்முறையால் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இந்த காவல் மரணம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்த பின்னும், முதலமைச்சர் அவர்களிடமிருந்து எந்தவொரு விளக்கமோ அறிக்கையோ இன்னும் வரவில்லை. எந்தவொரு அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டிருக்கும் அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கூட இந்த அரசு முன்வரவில்லை. மொத்தத்தில், எப்போதும் போல இப்பிரச்சனையிலும் பொறுப்பேற்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
அண்மையில் மறைந்த கரிசல் இலக்கிய முன்னோடி - நவீன தமிழிலக்கிய ஆளுமை திரு. பூமணி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் - புளியங்குளம் ஊராட்சிக்குட்பட்ட எம். அரசன்குளம் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-26 கீழ், ரூ. 53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்தேன்.
முன்னாள் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk , சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam , தூத்துக்குடி மாநகர மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் நிகழ்வில் உடன் பங்கேற்றனர்.
இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - வேப்பலோடையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
முன்னாள் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk , சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam , தூத்துக்குடி மாநகர மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் நிகழ்வில் உடன் பங்கேற்றனர்.
தமிழ் மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
அனைவரும் கல்வி கற்க விதையிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அவரது பிறந்தநாளில், அவராற்றிய அரும்பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.