South Indian Icon
கீர்த்தி சுரேஷ்
அந்தி நேரத்து ஆரஞ்சு வானம், புகை போலப் படியும் அதிரப்பள்ளி அருவி இவற்றின் வரிசையில் மாறவே மாறாத ஆச்சர்யம் கீர்த்தி சுரேஷ். 'கீதாஞ்சலி'யின் கீதா, அஞ்சலி தொடங்கி சமீபத்திய ரீட்டாவரை திறமைக்கென அகராதியில் இருக்கும் அத்தனை வார்த்தைகளும் சொன்னது இவர் பெயரைத்தான்! நம் கல்லூரிக் காதலியை நினைவுபடுத்தும் `மாயா'வாக தமிழ்த் திரையுலகில் களமிறங்க `உன் மேல ஒரு கண்ணு...' என பட்டி தொட்டி எங்கும் பறக்கவிடப்பட்டன ஹார்ட்டின்கள்! காவ்யாவாக இவர் திரையில் தோன்றி நிற்க, `வாடி என் தமிழ்ச்செல்வி' என நேப்பியர் பிரிட்ஜ் சாலை வானவில்லாகி வாசல் விரித்தது. துறுதுறு நடிப்பு, நடனம், வாஞ்சையான மொழி என இவர் வசீகரப்படுத்த, நம் வீட்டு `மலர்விழி’ எனத் தென்னிந்தியத் திரையுலகமே ஆமோதித்து, ஆரத்தி எடுத்தது. கலைமீதான தேடல் நிறைந்த கண்களோடு, காதல், ஏமாற்றம், துயரம் என ‘சாவித்திரி’யாகத் திரையில் இவர் ஆடிய அபிநய சந்நதம் அத்தனை கலைஞர்களுக்குமான கனவுப் பாத்திரம். அதைக் கண்டு ‘சிறந்த நடிகை நீ' என உச்சி முகர்ந்தது இந்தியத் திரையுலகம்! ‘தசரா’, ‘சாணிக்காயிதம்’, ‘வாஷி’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’... எனத் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும், வெவ்வேறு ஜானர்களில் சிக்ஸர் அடிக்க, இவருக்கெனவே கதைகள் எழுதப்பட்டது இவர் வெற்றிக்கான ஒப்புதல் வாக்குமூலம். தென்னிந்திய மொழிகள் கடந்து இந்தியிலும் கால்பதித்த நம் மனம் கவர்ந்த இந்த மகா நடிகை, திரையுலகின் தவிர்க்க முடியாத தாரகை!
#KeerthySuresh | #VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #SouthIndianIcon
Our Queen @Samanthaprabhu2's #MaaIntiBangaaram isn’t slowing down at the box-office. The film has already collected ₹83 cr gross worldwide. Sensational run! 💥💥
Expected to join ₹100 cr club by the end of this week! 🔥
BLOCKBUSTER 𝐒𝐀𝐌BHAVAM in Cinemas Now ⚡️
#Samantha #SamanthaRuthPrabhu
சிறந்த நகைச்சுவை நடிகர் - ஹர்ஷத் கான் (டிராகன், ஆரோமலே)
வாய் முழுக்கச் சவடால் பேச்சும், உடல் முழுக்க அதிகப்பிரசங்கித்தனமுமாய் உதார்விட்டுத் திரியும் நம் கல்லூரிக்கால ஜூனியரை அப்படியே நகலெடுத்து கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார் ‘குட்டி டிராகன்’ ஹர்ஷத் கான்.
தன் மலர் டீச்சருக்காக ஓயாமல் ஹார்ட்டின் பலூன்களைப் பறக்கவிட்டு மொக்கை வாங்குவதாகட்டும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் வாய்விட்டு சீனியர்களிடம் மொத்து வாங்குவதாகட்டும்… கேம்பஸில் இவர் அடித்த அத்தனை லூட்டிகளும் அரியரே இல்லாமல் ஆல் பாஸ் ஆகின.
'டிராக’னில் ஹீரோ முதுகில் தொங்கியபடி தொணதொணக்கும் வேடிக்கையான வேதாளம் என்றால் ‘ஆரோமலே’வில் கூடவே இருந்து நம் வாழ்க்கையில் கும்மியடிக்கும் ரகளையான நண்பன்.
ஆர்ப்பாட்டமான உடல்மொழியில் மட்டுமல்ல, சீனிப்பட்டாசாக வெடிக்கும் ஒன்லைனர்களாலும் இவரால் குலுங்கிச் சிரிக்கவைக்க முடியும் என்பதை எடுத்துச் சொன்னது ‘ஆரோமலே.’
டிஜிட்டல் இளைஞர்களுக்கு, கலையின் தீவிரத்தன்மை புரிவதில்லை எனும் கருத்தை மறுதலித்து காமெடிக்கு சீரியஸாகத் தன் உழைப்பைக் கொடுக்கும் ஹர்ஷத் கான், நம்பிக்கையூட்டும் நட்சத்திரம்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #HarshathKhan | #Dragon | #Aaromaley | #BestComedian
@Vijaybalaj5004 அவன் பொழைக்க திரிஞ்ச புள்ள எங்க போனா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கணும் தெரிஞ்சுகிட்டேன் அதனால்தான் வந்துட்டான் ஆனா நீ குடுத்த காசுக்கு எக்ஸ்ட்ராவா நடிக்கிற நோ உதய் அண்ணா தம்பினா 😂🤣😂🤣😂🤣😂