போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இ���்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
Every film is made with the passion, blood and sweat of hundreds of people - please avoid piracy. Kindly wait for the theatrical release and watch it in theatres.
Whoever is responsible for this must face strict action.
Respect the talents.
Respect the hard work.
Respect the industry.
#JanaNayagan
Their chemistry on the big screen will leave a big smile on your face ❤️
#Vazhiyiraen 🫶
#Madharaasi grand release worldwide on September 5th.
Book your tickets now!
🎟️ https://t.co/DiYIeLe7q1
#MadharaasiFromSep5
சிறந்த நகைச்சுவை நடிகர் - பாலசரவணன் (லப்பர் பந்து, இங்க நான்தான் கிங்கு)
‘ரகளையான நண்பன்' என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தாளில் உருவம் வரைய, அதற்குத் திரையில் உயிர்கொடுத்தார் பாலசரவணன். ‘உங்க குடும்பத்த��க்குள்ள நீங்க எப்பவும் அசிங்கமா திட்டிக்கிறதுதானே' என அன்பின் பக்கமே சேம் சைட் கோல் போடுவதாகட்டும், ‘பேட்டுக்குப் பதிலா வி��க்கமாறைக் கொடுத்தா பிட்ச்சையாவது கூட்டிட்டு இருப்பாருல பாவம்' என கெத்துக்கு லந்தைக் கொடுப்பதாகட்டும், பாலசரவணன் தோன்றும் காட்சிகளிலெல்லாம் அதிர்ந்தன திரையரங்குகள். முட்டாள் மச்சானாக, ‘இங்க நான் தான் கிங்கு' படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் அமைத்த கூட்டணி, திரையரங்கில் சிரிப்பு ராஜாங்கம் நடத்தியது. சமூக அவலத்தை எடுத்துரைக்க தமிழ் சினிமா, நாடக காலம் தொட்டே ‘பகடி' எனும் இனிப்���ு மருந்தைக் கைக்கொண்டு வந்திருக்கிறது. அம்மருந்தை சமீப காலத்தில் கச்சிதமாய்க் கையாண்ட கலைஞன் இவர். ‘அவன் உனக்குத் தம்பி. நாங்க தம்பி மாதிரி' என ஓர் இனத்தின் பல நூற்றாண்டுக் காலப் பரிதவிப்பை ஒற்றை வசனத்தில் அவர் கடத்த, அதுவரை சிரித்துப் புரையேறிய மனங்களில் வலியும் குற்றவுணர்ச்சியும் எட்டிப் பார்த்தன. நகைப்பையும் நன்னெறியையும் ஒரு��ேரக் கதைத்த பாலசரவணனின் நடிப்பு, ரெண்டு பனை மர உயரம்!
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
சிறந்த குணச்சித்திர நடிகை - ஸ்வாஸ்விகா (லப்பர் பந்து)
காதல் ஒரு பொதுவுடமை என்ற உண்மையை எளிய மக்களின் மொழியில் பேசினார் அசோ��ை. தமிழ் சினிமா பெரிதும் பேச��் தயங்கும் நடுத்தர வயதினரின் வாழ்வியலை தமிழரசன் பச்சமுத்து முனைப்பாய் முன்னெடுக்க, அதற்குத் தலைவனும் தலைவியுமாய் ஆனார்கள் கெத்தும் அசோதையும். பித்தளை டப்பாவில் மணக்க மணக்கச் சமைத்து அசோதை அனுப்பிய கறி விடு தூதில் நெகிழ்ந்து போயின தமிழ்க் குடும்பங்கள். தன் பேச்சை மீறி கெத்து ஆடப்போகும்போதான ஊடலாகட்டும், பின் வீடுதிரும்பி அணுக்கம் தேடும்போதான கூடலாகட்டும்... இன்பத்துப்பால��� வழிந்தோடியது திரையில். ஆளுக்கொரு திசையில் பறந்த கதைமாந்தர்களுக்கு இடையிலான வெளியை இவர் அன்பு கொண்டு நிரப்ப, பரிபூரணமானது படம். மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களையே காட்டும் வழக்கமுடைய சினிமா எப்போதாவது நம் வீட்டில் இருப்பவர்களுக்கும் அரிதாரம் பூசும். அப்படி நாம் அன்றாடம் உறவாடும் நம் அம்மாவை, அக்காவை ‘லப்பர் பந்’தில் உலவவிட்ட ஸ்வாஸ்விகா, எளிமையின் விலாசம்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
சிறந்த சண்டைப்பயிற்சி - அன்பறிவ், ஸ்டெஃபன் ரிக்டர் (அமரன்)
தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் பிரிக்கமுடியாதது எது என்கிற கேள்விக்கு அன்பறிவ்வும் உலகத்தர சண்டைக்காட்சிகளும் என்பதே பதிலாய் இருக்கும். முகுந்தனின் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்ல நிறைய நேரமெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை அன்பறிவ், ஸ்டெஃபன் ரிக்டர் ஆகிய மூவரும். எல்லையில் எப்போதும் நிலவும் பதற்ற நிலையை படத்தின் நான்காவது நிமிடத்திலேயே நமக்குள்ளும் பரப்பி நடுங்கச் செய்தார்கள். ஒருவகையில் பின்னால் வரவிருந்த 15 நிமிட இடைவேளைக் காட்சிக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் முன்னோட்டம் அது. இருள் கவிழ்ந்த காஷ்மீர்த் தெருக்களில் இருபுற���ிருந்தும் சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இதயத்துடிப்பை எகிற வைக்க, அல்தாஃப் பாபாவைப் பிடித்த பின்னரே ஆசுவாசமானது திரையரங்கம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் நமக்குத் தெரிந்த முடிவுதான். ஆனாலும் இறுதி விநாடி வரை இருக்கை நுனியில் நம்மைத் தவிக்கவிட்ட சண்டை வடிவமைப்பே அமரனின் பெரும்பலம். இந்திய சினிமாவையே தங்களின் ஆக்ஷன் காட்சிகளால் திரும்பிப் பார்க்க வைத்த இந்த மூவர் கூட்டணிக்குத் தகுதியாய் இருக்கும், தங்க மெடல்!
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜி.வி. பிரகாஷ் குமார் (கேப்டன் மில்லர், தங்கலான், அமரன்)
ரெளத்திரத்திற்குப் பெயர்போன ஈசனும் அவன் தோழர்களும் அதிரடிக்கும் உடுக்கையொலியோடு அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே தெளிவிற்கும் போதைக்கும் இடையிலான அரைமயக்க நிலைக்கு ஆளானார்கள் கொட்டகையில் இருந்தவர்கள். கடற்கரையின் சுடுமணல் முழுக்க வியாபித்திருந்த ரத்தம் தோய்ந்த உடல்களுக்கு இ��ை வழி ஜி.வி செலுத்திய அஞ்சலி நம் உயிரை உருவியெடுத்து வெளியே போட்டது. கோயில் வாசலில் செங்கோலனும் மில்லரும் ரஃபியும் ஒன்றிணைந்தபோது பின்னணியில் ஓங்கி ஒலித்தது அதிகாரத்திற்கெதிரான அறைகூவல். ‘கேப்டன் மில்ல’ரின் அடிநாதம் ஆலய மணியென்றால், ‘தங்கலா’னில் தகித்தது ஆதி இசையின் தணல். கிழக்குத் தொடர்ச்சி மலையின் வாசம் சுமந்து எளியகுடிகளின் குலவையாக ஒலித்தது குழலிசை. ‘பற்றே துன்பத்தி���்கான காரணம்' என தம்மம் உரைத்து, பொன்னைக் காக்கும் ஆரத்தி எழுப்பிய ஓலம் மயிர்க்கூச்செறிய வைத்த மரண சா��னம். ‘வர்ணம் அது உடையும்' என பிற்காலப் போராட்டங்களுக்கான முன்னோட்டமாய் தொல்குடிகள் அடித்த போர்ப்பறை எக்காலத்திற்குமான எதிர்க்குரல். மறுபக்கம் இறுக்கமான பாறையில் படரும் பனியாய், காதலின் ஐந்திணைகளைச் சுட்டும் இசையை ‘அமரன்' முழுக்க இவர் தூவிச் செல்ல, கொள்ளை போயின ஆயிரமாயிரம் இதயங்கள். உணர்வுகளை உருக்கி ஊற்றி இசைவழி படைப்புகளை மின்னச் செய்யும் ஜி.வி.பிரகாஷ் குமார், தமிழ் சினிமாவின் ‘தங்கலான்.'
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
சிறந்த தயாரிப்பு - கொட்டுக்காளி (சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்)
நாம் பார்த்துப் பழகிய பாணியிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டதொரு புதுமையான கதை சொல்��ல். கருவிகள் கொண்டமைக்கும் பின்னணி இசையைத் தவிர்த்து, சுவர்க்கோழிகளின் ரீங்காரம், சேவலின் கொக்கரிப்பு என இயற்கையின் வசம் இசையை ஒப்படைத்த திரைமொழி, படத்தின் முடிவை பார்ப்பவர்களிடமே விட்டுவிடும் துணிச்சலான ஆக்கம்... இப்படி தமிழ்சினிமா வரைந்து வைத்திருக்கும் எல்லா எல்லைகளையும் உடைத்து புதுப்பாய்ச்சல் நிகழ்த்தியது ‘கொட்டுக்காளி.' ‘பெரும்பொருட்செலவும், உயர்தர தொழில்நுட்பப் பயன்பாடும் இல்லாத உலக சினிமா. மண்ணின், மக்களின் கதையை அவர்களின் மொழியில் பேசுவதே உலக சினிமா' என ஆணித்தரமாய் நிறுவிய படைப்பு. உலக அரங்கில் ‘கொட்டுக்காளி' கரகோஷங்களைக் குவிக்க உதவிய ஒரு கை இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜினுடையது என்றால், மற்றொரு கை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுடையது. பரீட்சார்த்த முயற்சிகளைப் புறந்தள்ளி வர்த்தகக் கணக்குகளுக்குள் முடங்கிவிடும் வழக்கமான தயாரிப்ப��ளராக இல்லாமல், கதையை, அதுபேச நினைக்கும் அரசியலை தமிழகத்தின் மூலைமுடுக்கு மட்டுமல்லாமல் சர���வதேசத் திரைப்பட விழாக்கள் வரை கொண்டு சென்ற சிவகார்த்திகேயனின் மெனக்கெடல் பாராட்டுக்குரியது. தன் பிம்பம் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் எதிர்மறைக் கதாபாத்திரத்தை ஏற்ற சூரி, தமிழில் தன் முதல் படம் இதுபோன்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் எனக் காத்திருந்து நடித்த அன்னா பென், இப்படி ‘கொட்டுக்காளி’ இன்று அடைந்திருக்கும் உயரத்தை எட்ட இந்தப் படைப்பில் நம்பிக்கை கொண்டு பங்கேற்ற ���வ்வொருவருமே காரணம். கொட்டுக்காளி - தமிழ் சினிமாவின் புதிய விடியல்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
சிறந்த படம் - கொட்டுக்காளி
வானம் மொத்தமும் தனக்கானதாய்ப் பறந்து திரிந்து, மாலையில் கூடடையும் பருந்துக்கூட்டத்தை, நாளை துண்டாடப்பட இருக்கும் வீட்ட���க்கோழி ஏக்கமாய்ப் பார்ப்பதன் பொருளே ‘கொட்டுக்காளி.’ சாதி எனும் கட்டுமானம் இவ்வளவு ஸ்திரமாய் இருக்க குடும்ப அமைப்பில் நிலவும் படிநிலைதான் முக்கியக் காரணம் என்பதை வெறித்த பார்வையின் மூலம் அழுந்தச் சொன்னாள் அந்தப் பிடிவாதக்காரி. பிடித்தபடி வாழ நினைப்பதுதான் பேய்க்குணமென்றால் அப்படியே ஆகட்டும் என எதற்கும் மருளாத மீனா, அவளை வன்முறையின் மூலம் வெல்ல நினைக்கும் ஆண்மகன்கள், இல��லாத குல, குடும்பப் பெருமைகளை எல்லாம் தங்கள் மடியில் ஊர் தேடுவது தெரிந்தும் வேறு வழியில்லாமல் அதற்கு உடன்படும் பெண்கள், வீரமென்பது அடக்கியாள்வது என ஜம்பம் பேசும் ஆண் அகந்தையை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போகும் காளையைக் கொஞ்சும் சிறுமி, இந்த நகைமுரண்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் உறைக்க, செய்தவதறியாது மரத்தடி ‘கடவுளாய்’ மெளனித்து நிற்கும் பாண்டி... இப்படி கொட்டுக்காளியில் தென்ப��்டவர்கள் நாம் அனைவரும்தான். கதையின் கடைசிப்பக்கத்தை ��யக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் வெற்றுக்காகிதமாக விட, குமையும் கேள்விகளோடு அதை நிரப்பத் தொடங்கியது நம் மனசாட்சி. ‘வழக்கமான’ திரைமொழியிலிருந்து பல மைல்கள் விலகியிருக்கும் மீனாவின் கதையை சமரசங்கள் ஏதுமின்றி வெள்ளித்திரையில் படரவிட்ட தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் போற்றத்தகுந்த படைப்பாளி! மாற்று சினிமா மட்டுமல்ல இது, மக்களுக்கான ��ினிமாவும்தான் என ஓங்கி முழங்கும் இந்தக் கொட்டுக்காளி, தமிழ்த் திரையுலகிற்குக் காட்டியிருப்பது புது மார்க்கம்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)
நீர் ஒருநாள் சாரல், ஒருநாள் மழை, ஒருநாள் வெள்ளம். போலவே அமரனின் சாய் பல்லவி. காதலின் சாரலாய், தவிப்பின் மழையாய், துயரத்தின் பெருவெள்ளமாய் அவர் பிரவாகித்துக்கொண்டே இருந்ததில் முகுந்தனின் கதை அமர காவியமானது. கசவுச் சேலையில் மின்னலாய் அவர் நடந்துவந்தபோது உருகிப் போனார்கள் இளைஞர்கள். ‘முகுந்ந்ந்த்தே' என அவர் செல்லம் கொஞ்சிய இடத்தில் தங்களைப் பொருத்திக்கொண்டார்கள் யுவதிகள். கண் காணாத தூரத்தில் வாழ்க்கைத் துணை இருக்க, பதில் வாரா கடிதங்கள் தரும் வாதையை இந்து ரெபேக்காவின் வழியே உணர்ந்தார்கள் இணையர்கள். ‘கண்டதெல்லாம் கனவு' என முகுந்தனுக்காகக் காத்து நின்று, உயிரற்ற உடல் வாசலைத் தொடுகையில் அவர் தளர்ந்தபோது அதைத் தங்கள் வீட்டு இழப்பாகவே வரித்துக்கொண்டு கலங்கின தமிழ்க் குடும்பங்கள். பிரியமானவர்களின் மரணத்தைவிட பெருஞ்சோகம் என்ன இருந்துவிடமுடியும் என இறுதியாய் ஒருமுறை முகுந்தனின் முகத்தைக் கண்களில் முழுக்க நிரப்பிக்கொள்ள அவர் செய்த எத்தனிப்பு, இனி வரும் கலைஞர்களுக்குப் பாடத்திட்டமாய் மாறக்கூடும். ஏற்றுக்கொள்ளும் வேடங்களை தன் தனித்தன்மையால் செம்மைப்படுத்தும் சாய் பல்லவி, தமிழ் சினிமாவின் செம்புலப் பெயல் நீர்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards