நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்டு சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை தேவை!
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கியவர்களில் 57 பேர் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் ஆவர். அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியவர்களையும் அவர்களில் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
@PMOIndia@CMOTamilnadu
மிலாதுநபி வாழ்த்துகள்.
இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.
போதனையும், பின்பற்றலும் இணைந்து செல்வது மிகவும் அரிது. ஆனால், தாம் கடைபிடித்ததை மட்டுமே போதனையாக வழங்கினார் நபிகள் நாயகம். இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற வழியில் பயணித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே போற்றத்தக்க பாடம் ஆகும்.
நபிகள் நாயகம் கற்பித்த உண்மையையும், ஒழுக்கத்தையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். உலகில் அமைதி, வளம், மனநிறைவு, மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம், கொடை ஆகியவையும் நிறைய வேண்டும் என்று கூறி, மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#miladunnabi | #milad | #islam | #muslim
ஓணம் வாழ்த்துகள்.
ஆளப்பட்ட மக்கள் மீது எல்லையில்லா அன்பு காட்டிய மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும் மலையாள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் வள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதேபோல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை மகாபலி காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மண்ணுக்குள் மறைந்தாலும் தமது மக்களின் மீது கொண்ட அன்பை மறைக்காத மகாபலியை போன்ற ஆட்சியாளர்கள் கிடைத்தால் அது மக்களின் வரம். அந்த வரம் வாய்க்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் சில ஆண்டுகளில் நிறைவேறும் என்பது உறுதி. ஓணம் திருநாளைக் கொண்டாடும் மக்கள், எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, வளம், சகோதரத்துவம், சமத்துவம், சமூகநீதி, மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#onam | #onamcelebration | #kerala | #mahabali | #PMK
மாற்றத்திற்கான ரியல் Definition✅
விமான நிலையம் வந்தால் விவசாய நிலம் பாதிக்கும்…
So கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மாற்று தொழில் தொடங்க பயன்படுத்துவோம்..
அப்போ விவசாயம் பாதிக்காதா?
Reels அமைச்சர் @Keerthana4VNR 🤦♀️
விமான நிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றலாம் என்பது தவறான தகவல்
Section 99 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (RFCTLARR) Act, 2013 அப்படி செய்ய முடியாது என்கிறது
பழைய சட்டத்தை அமைச்சர் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன்
2013 ஆம் ஆண்டு அந்த சட்டம் திருத்தி புதிய விதிகள் வந்து விட்டது.
விமான நிலையத்துக்கு கையகப்படுத்திய நிலம் வேறு விஷயத்துக்கு பயன்படுத்த முடியாது என்பது இப்போது உள்ள சட்டம்.
நம்ம மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. அப்படி இருக்கும்போது நமக்கு NLC தேவையே இல்லை..! CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க.. சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
To prevent the impact of rising sugar prices, 2 kg of
additional sugar should be provided through ration shops:
Increase the sugarcane procurement price to ₹5,000!
The price of sugar has increased by ₹20 to ₹25 per kilogram in Tamil Nadu, an unprecedented rise in recent times, and has reached ₹75 to ₹80 per kilogram. Traders have said that the price could rise further in the coming months and may reach a peak of ₹100 during the Deepavali festival season. On the one hand, sugarcane farmers are not receiving an adequate procurement price, while on the other, the rising price of sugar is burdening consumers. This is a matter of concern.
It is being said that the Central Government’s encouragement of higher ethanol blending in vehicle fuel, with the objective of reducing fuel imports, has led sugar mills to give greater priority to producing molasses rather than white sugar, thereby contributing to the rise in sugar prices. There is some truth to this argument.
However, the primary reason, not only in Tamil Nadu but across India, is the rapid decline in the area under sugarcane cultivation in recent years. At the national level, the area under sugarcane cultivation fell from 5.885 million hectares in 2022 to 5.449 million hectares in 2024.
In Tamil Nadu, the area under sugarcane cultivation, which was 1.5 million acres before 2020, has fallen to just 500,000 acres in 2025. Similarly, sugar production in Tamil Nadu, which stood at 2.8 crore tonnes in 2018, declined to 1.59 crore tonnes in 2024. This is because the cost of sugarcane production has increased, while the procurement price of sugarcane has not been raised accordingly. Only by reversing this trend and increasing the area under cultivation can sugar production be increased and prices brought down.
While sugar mills earn more than ₹21,000 in revenue from a tonne of sugarcane through sugar, molasses, bagasse and other by-products, it is unjust for sugar mills to refuse to pay even ₹5,000 per tonne as the procurement price for sugarcane, and for those in power to support such a position.
On average, one tonne of sugarcane can produce one quintal (100 kg) of sugar. If the wholesale price of one quintal of sugar has now risen to ₹7,000, then a similar price should be provided as the procurement price for one tonne of sugarcane. The revenue earned by mills from the by-products of sugar production would constitute their profit. However, the Central Government has announced a procurement price of only ₹3,383 per tonne, which is less than half of what should reasonably be paid. This should be increased to at least ₹5,000. Only then will the area under sugarcane cultivation and sugar production increase.
Meanwhile, to reduce the impact on the people caused by the rise in sugar prices, I urge the Tamil Nadu Government to come forward and provide an additional 2 kg of sugar per family card through fair-price ration shops for six months, starting this month and continuing until the Pongal festival.
@CMOTamilnadu
வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க
ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்:
கரும்பு கொள்முதல் விலையை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்!
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80 என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 என்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.
எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில், வாகன எரிபொருளில் அதிக அளவில் எத்தனால் கலப்பதை மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும், அதற்காக சர்க்கரை ஆலைகள் வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட மொலாசஸ் எனப்படும் கரும்பு வெல்லப்பாகு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில் 58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.
தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற்பத்திச் செலவு அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில் கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தப்படாததும் தான். இந்த நிலை மாற்றப்பட்டு சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.
ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.
ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383 தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம் ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.
இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை குறைப்பதற்காக பொங்கல் திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி 6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவரும், எஸ்.ஆர்.எம் குழுமத்தின் (SRM Group) நிறுவனருமான திரு.டி.ஆர்.பச்சமுத்து (Ex MP) அவர்களின் 88-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.!
சேலம் தெற்கு மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதி, வெள்ளையம்பாளையத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி அவர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றி உரையாற்றிய போது.!
#PMK | #Salem
சேலம் தெற்கு மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதி, வெள்ளையம்பாளையத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி அவர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய போது.!
#PMK | #Salem
சேலம் தெற்கு மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதி, வெள்ளையம்பாளையத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி அவர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றி உரையாற்றிய போது.!
#PMK | #Salem
சேலம் தெற்கு மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதி, வெள்ளையம்பாளையத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி அவர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றி உரையாற்றிய போது.!
#PMK | #Salem