தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகு��்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குடியிருப்புகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், புகழ்பெற்ற திருக்கோயில்களுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு அருகே அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, தஞ்சாவூர் மாநகரின் மையப்பகுதியி��ிருந்து நிலம், நீரோடு, காற்றையும் மாசுபடுத்தும் இக்குப்பைக் கிடங்கை உடனடியாக இடமாற்றம் செய்வதோடு, தமிழகம் முழுவதும் பொ��ுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்குகளை அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்றும் வகையில் செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இடைவிடாது ஒலித்து அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமத்துவம், மனிதநேயம் மற்றும் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூகநீதி போராட்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் புதிய சிந்த��ைகளை விதைத்த தீண்டாமை ஒழிப்பு போராளி இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
கூட்டுறவு வங்கிகளி���் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்கள் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்��ுகின்றன.
ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திற்குள் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் வராத நிலையில், அரைகுறை அறிவு ஜீவிகள் வழங்கிய ஆலோசனையின் படி அவசரகதியில் தவெக அரசு எடுத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய தவறான முடிவால் இன்று விவசாயி ஒருவரின் உயிர் பறிபோய் அவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆளுநர் உரைக்கு பின் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் உரையில், விவசாயிகளுக்காக இந்த அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சிலரின் தூண்டுதலால் தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்ற கருத்தை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் ஏற்ற இறக்கத்துடன் பதிவு செய்தார். ஆன��ல், தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, அதை "மற்றவர்களின் தூண்டுதல்" என்ற போர்வைக்குள் அடக்கிப் பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உடனடியாக அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் ��ெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளை வெட்டி, ஒட்டி ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசு, எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாகப் பார்க்காமல் அவர்கள் முன்வைக்கும் கருத்துகளையும், சுட்டிக்காட்டும் பிரச்சினைகளையும் சரியான பார்வையில் அணுகி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க இனியாவது முன்வர வேண்டும்.
எனவே, மக்களை ஏமாற்றியே ஆட்சியை நடத்திவிடலாம் என்ற தங்களின் அதிமேதாவித் தனத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதோடு, உயிரிழந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டை உடனடியாக வழங்கவும், தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியதாக தமிழக விவசாயிகள் புகார் – சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வ��க்கு தொடர வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராகச் செயல்படுவதோடு, தமிழ���த்திற்கு தரவேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தர தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமானப் பணிகளின் மூலம் மேகதாது அணையைக் கட்டும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத���தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் காட்டும் தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதே வே��ையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் இனியாவது உணர வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
திருச்சி மாவட்டம் உறைய��ர் பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
எந்தவித தடையுமின்றி சுலபமாகவும், சுதந்திரமாகவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகி��் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பார்க்கும் போது, தமிழக அரசு அறிவித்தது போதைப் பொருள் தடுப்பு படையா? அல்லது போதைப் பொருளைத் தடுக்க முடியாத படையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதோடு பள்ளி சென்று கல்வி பயில வேண்டிய மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழக்கும் அபாயகரமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே, தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், அறிவித்த நாள் முதல் காகித அளவிலேயே இருக்கும் போதைப் பொருள் தடுப்பு படையை முழு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறு��்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
நம் நாட்டின் கலாச்சார, பண்பாட்டு, ஆன்மீகப் பெருமைகளை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவரும், துணிச்சலின் உருவமாகவும், ஆன்மீகத்தின் உயிர் வடிவமாகவும் திகழ்ந்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் தன்னம்பிகையை ஊட்டியவருமான வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இன்று…
”நீ எதுவாக நினைக்கிறாயோ? அதுவாக நீ ஆவாய் “ என்ற ஆழமான தத்துவத்தின் மூலம் இன்றைய கால இ��ைஞர்களுக்கு உந்து சக்தியாக விளங்கி வரும் சுவாமி விவேகானந்தர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சாகித்யா அகாடமி விருதை இருமுறை பெற்ற தலைசிறந்த நூலாசிரியருமான முதுபெரும் கவி��ர் திரு.புவியரசு அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ் படைப்பாளிகள் பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த முதுபெரும் கவிஞர் திரு.புவியரசு அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கால அவகாசத்தை நீட்டி தவெக அரசு அரசாணை பிறப்பிப்பதா – மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதப்படும் இத்திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் .
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை அரசாணை பிறப்பித்திருப்பதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிள்ளியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமைவதாக இருந்த இத்திட்டம் அமையப்பெற்றால், சுற்றுசூழல் பாதிப்படைந்து அதனால் கொடிய நோய்கள் ஏற்படுவதோடு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசம் முடிவடையும் நாளில் மக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்க்காமல், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 2024ஆ��் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதே திட்டத்தைச் சுட்டிக்காட்டி நாசகார, நச்சுத் திட்டங்களை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய தவெக, ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் அத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கன்னியாகுமரி மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமன்றி, தவெக அரசு மக்களுக்கான அரசு அல்ல என்பதையும் புரியவைத்துள்ளது.
எனவே, க��்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் நிலம் ஒதுக்கிய ஆணையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @drtkprabhu_TVK @TVKPartyHQ
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத பணியை தங்களின் கடமையாக மட்டுமல்லாது, மனிதநேய சேவையாகவும் கருதி பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிற��ன்.
கருணை, மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டு பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவரின் தன்னலமற்ற சேவையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்
பொது விநியோக பயன்பாட்டிற்கான ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவதா? - மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்�� சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.தங்கப்பாண்டி அவர்களின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா ? அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா ? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKPartyHQ
தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவத�� நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெர���யாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம���?
தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்���ைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
தமிழ் பத்திரிகைத் துறையின் மூத்த பத்திரிகையாளர் திரு பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்க�� எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சுதேசமித்திரன் பத்திரிகை தொடங்கி பல்வேறு பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் திறம்பட பணியாற்றிய திரு.பெரியசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
��ுதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்டு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையைய���ம் தருகிறது.
துயர சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பூரண உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் அப்பகுதி மக்கள் மேலும் பாதிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
ஒட்டுமொத்த குடும்பத்தை தாங்கி சுமக்கும் அடிப்படை தூணாகவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல், தன்னம்பிக்க�� மற்றும் சமூக பொறுப்புணர்வை கற்றுத்தரும் முதல் ஆசானாகவும் விளங்கும் தந்தையர்கள் அனைவருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது சொந்த விருப்பங்களை விட குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்து, குழந்தைகளின் கனவுகளை நனைவாக்குவதற்காக எண்ணற்ற தியாகங்களை சத்தமின்றி செய்துவரும் தந்தையர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அளப்பரிய உழைப்பையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்ப��ையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்?
தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் ப���குந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது.
சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும்.
எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றன.
மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர���வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல, எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் உணர்ந்து மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதேசமயம், தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட ��ாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மாணவர்கள் மீது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@NTA_Exams @EduMinOfIndia @PMOIndia
மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் நீ��்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்களின் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@rashtrapatibhvn
கழக பொதுச்செயலாளர�� திரு டிடிவி தினகரன் அவர்களை தமிழக பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், மாண்புமிகு மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.L.முருகன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக துணைத்தலைவர் திரு சக்கரவர்த்தி ஆகியோர் சென்னை அடையாரில் அமைந்துள்ள கழக பொதுச்செயலாளர் அவர்கள���ன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். @DrLMurugan @NainarBJP @Chakravarthy257 @BJP4TamilNadu