தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், மக்கள் நல அரசுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆளுமை, தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த தென்னாட்டின் பெர்னாட்ஷா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று.
நாடக ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பத்திரிகையாளராக தன் ஈடு இணையற்ற எழுத்தாலும், உணர்ச்சி பொங்கும் பேச்சாலும் மக்கள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி, மனித சமுதாயத்தின் ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகத் திகழ்ந்த தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெ���ுந்தகை அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான சோழப் பேரரசர்களுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் – வரலாற்றுச் சிறப்பு��ிக்க அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்ததோடு, மாமன்னர்கள் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எதிர்கொண்ட போர்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடிய மாமன்னர் ராஜராஜசோழன், இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான பேரரசர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் பெருமையையும், புகழையும் போற்றிக் கொண்டாடும் வகையில் சிலை அமைக்க வேண்டும் என்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நீண்ட கால கோரிக்கையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பின் மூலம் நிறைவேறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
#வெற்றிசின்னம்குக்கர்#TTV4Theni#வெல்வார்TTV
தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள்செல்வர் #TTVDhinakaran அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
எங்களுக்கென தனி ஆசை, கனவு, லட்சியமெல்லாம் இல்லை ...
இந்த மனுஷன் ஜெயிக்கனும், செம்மையா ஜெயிக்கனும், அவ்வளவு தான் ...
யாருடன் கூட்டணி, எந்த பாதை என்றெல்லாம் கவலையில்லை .
டாட் ...
இன்று கழக பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் திரு #டிடிவிதினகரன் அவர்கள் கோவையில் கழக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார்கள்...
இதில் கழக வளர்ச்சி பணி குறித்தும் வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
#TTVDhinakaran#AMMK