தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. @GGPonnambalam அவர்கள் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்- திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணிச் செயலாளருமான திரு. @Udhaystalin அவர்களைச் சந்தித்தார். போருக்குப் பிந்தைய சூழலில் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் நெருக்கடிகள��� எதிர்க்கட்சித் தலைவருக்கு அவர் விரிவாக விளக்கினார்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்ததையும், உடனடியாக ஒன்றிய அரசுக்கு கழகத் தலைவர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதையும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொப்ப���ள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் உரிமைகளுக்காக பேரறிஞர் அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து குரல்கொடுத்துத் துணை நின்று வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். அந்த வகையில், ஈழத்தமிழர் நலன் சார்ந்து அவர் கூறியவற்றை, கழகத் தலைவர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று அவருக்கு @Udhaystalin ���வர்கள் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, நம் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை வழங்கி, 'இலங்கை தி.மு.க.' குறித்து எழுத்தாளர் @shobasakthi அவர்கள் எழுதிய கட்டுரையும் அந்த நூலில் இடம் பெற்றிருப்பதை @Udhaystalin அவர்கள் சுட்டிக்காட்டினார்.
#DMK #Jaffna #Srilanka
03/07/2026
வணக்கம்.
தமிழ்நாடு முதலைச்சருடனான சந்திப்பு தொடபானது
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் ���ன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம். எழுத்துமூலமாக கோரிக்கை கடிதமம் கையளித்துள்ளோம். அக்கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்���ு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் ��ேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது.
அக்குழுவில் இடம்பெற்றவர்கள்:
1.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தலைவர், தமிழ்த் தேசியப் பேரவை; நாடாளுமன்ற உறுப்பினர்.
2.செல்வராசா கஜேந்திரன் – பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
3.பொன்னுத்துரை ஐங்கரநேசன் – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
4.கே. வி. தவரா��ா – தலைவர், ஜனநாயகத் தமிழர் கட்சி; ஜனாதிபதி சட்டத்தரணி
5.தருமலிங்கம் சுரேஷ் – தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
6.கனகரட்ணம் சுகாஷ் – உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும்,
7.நடராஜர் காண்டீபன் – கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும்,
நன்றி.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்- தமிழ்த் தேசியப் பேரவை
தையிட்டியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து போராடி வருவதால், அர்ச்சுனா போன்றவர்களுக்கு என்ன சிக்கல்?
பௌத்த துறவிகளுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இந்தப் போராட்டம் பிடிக்காததன் காரணம் புரிகிறது. ஆனால் உனக்கு என்னடா பிரச்சனை, அர்ச்சுனா?
தையிட்டி போராட்டத்தில் அரசியல் இருக்கிறதா? ஓம், இருக்கிறது.! அது ஒரு அர��ியல் போராட்டம் தான். மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படும் போது, அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது, மக்கள் பிரதிநிதிகள் மக்களோடு நின்று போராட வேண்டியது அவர்களது கடமை.
மக்கள் போராட முடியாத இடங்களில், மக்களுக்காக குரல் கொடுக்கவும், அவர்களுக்குப் பதிலாக நிற்கவும் தான் அரசியல் இயக்கங்களும் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள்.
அந்தக் கடமையைத்தான் முன்னணி செய்து வருகிறது. அதில் உனக்கு என்ன பிரச்சனை?
மக்களோடு நிற்காமல், உன்னைப் போல ராஜபக்சவுடன் பல்லிளித்து நின்றிருக்க வேண்டுமா?
இன்று வரை தையிட்டி சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஒரு பேசுபொருளாகவும், ப���துக் கவனத்துக்குரிய பிரச்சனையாகவும் இருப்பதற்கு காரணம் முன்னணியின் இந்தத் தொடர்ச்சியான போராட்டம் தான். அது உங்களுக்கு உறுத்துகிறது என்றால், அந்த உறுத்தலுக்கு காரணம் குற்ற உணர்ச்சியாகவே இருக்க முடியும்.
இனியும் தொடர்ந்து தையிட்டி போராட்டத்த கொச்சைப்படுத்தி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால், அதை வேடிக்கை பார்த்து கடந்து செல்லும் அளவுக்கு தமிழர்கள் ஒன்றும் அர்ச்சுனா ம���திரி ராஜபக்சவை கொப்பன் பெயராக கொண்டவர்கள் அல்ல என்பதை அர்ச்சுனா மாதிரி சில்லறைகள் புரிந்து கொள்ள வேண்டும். #அறிவோம்ஈழம்
1990களில் சிங்கள ராணுவம், ஈழம் கிழக்கில், முஸ்லிம் மக்களின் வழிபாட்டு தளங்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றிய ஒரு செய்தி குறிப்பு. எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் இந்த செய்திகளை அதிகம் பகிர்வதில்லை. காரணம் ராஜ விஸ்வாசமோ, மறதியோ.. தெரியவில்லை.. #அறிவோம்ஈழம்
கடலில் காணாமற்போன தமிழ் மீனவர்களை காப்பாற்ற மறுத்த அரச கட்டமைப்புகள்...!
ஓடி ஒளிந்த அமைச்சர்...!!
Gajendrakumar Ponnambalam குற்றச்சாட்டு...!!!
#srilanka#pta#MinisterofFisheries#ptaagainsttamils
09.06.2026