புத்தெழுச்சி–9
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, வில்லிவாக்கம் மேற்கு பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் , திரு. சபாபதி மோகன், வழக்கறிஞர் அலீம் அல்புஹாரி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
புத்தெழுச்சி-10
துறைமுகம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள், செல்வி. மு.ரோஜா ஆகியோர் பங்கேற்று 700 வட இந்தியர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி, மளிகைப் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் நிதியுதவியை வழங்கி சிறப்புரையாற்றினர்
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை ம���டக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்க��ும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
புத்தெழுச்சி-7
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கத்தில் கவிப்பேரரசு திரு.வைரமுத்து, திரு. சுப.வீரபாண்டியன், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
புத்தெழுச்சி - 8
துறைமுகம் சட்டமன்ற தொகுதி, நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் முதல்வர் குடியிருப்பில் உள்ள 776 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் நிதியுதவியை திரு. டி.கே.எஸ்.இளங்கோவன், திருமதி. கே.இராஜராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்று வழங்கி சிறப்புரையாற்றினர்.
புத்தெழுச்சி-6
முத்தமிழ் உணர்வு ரத்தத்தில்!
முன்னேற்ற கழகம் நெஞ்சத்தில்!!
கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக எழும்பூர் இளைஞரணி சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை திரு. என்.ஆர். இளங்கோ அவர்கள் துவக்கி வைத்து, குருதிக் கொடையாளர்களை பாராட்டி���ார்.
பேனா முனையால் சரித்திரம் படைத்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி…
தமிழ், தமிழினம், தமிழ்நாடு என தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில், அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தெழுச்சி நாள் விழா!!
தமிழக வரலாற்றில் இன, மொழி, கலை, இலக்கியம், அரசியல் யாவிலும் யாரும் அடைய முடியாத வெற்றியை கண்ட மாமேதை முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்��நாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.(1/3)
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!
“ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற��ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அ��்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
சனாதனம் னா என்னனு கேட்டவனுங்களுக்கு...
இன்னைக்கு ஒன்றிய அமைச்சர் L முருகன் கையில் 2inch இடைவெளியில் விழுந்த ஞானப்பழம் தான் சனாதனத்திற்கு நீங்கள் கேட்ட விளக்கம்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு ந��ங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel