அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங���களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால்.
மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார். (1/2)
My beloved friend and the Honourable CM of Delhi, @ArvindKejriwal will replace Government vehicles with E-Cars within 6 months.
He has initiated the ‘Switch Delhi’ scheme as a step towards pollution control. (1/2)
மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்��ுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. (1/2)
கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?
வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. (1/2)
கொங்கு மண்டலத்தில் ஆர்டர்கள் இருந்தும் போதிய தொழிலாளர்கள் இல்லாமல் தொழில்துறையினர் தவித்து வருகின்றனர். லாக்டவுணில் வெளியேறிய வட மாநில தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில்கள் தேவை எனும் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்ட��ம்.
தொழில் நகரம் கோயம்புத்தூரில் தொழில்துறை மேம்பாட்டிற்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தேன். எமது திட்டங்கள் இன்றைய தமிழகத்தின் பேசுபொருள். நாளைய தமிழகத்தின் நடைமுறை.
#தலை_நிமிரட்டும்_தமிழகம்#சீரமைப்போம்_தமிழகத்தை
அதிமுக கோட்டை தகர்கிறதா? - கமல்
*கொங்குமண்டலம் அ���ிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்கிறதா? - மக்கள் நீதி மய்யத்தின் பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில் கமல்ஹாசன் ட்வீட்
#KamalHaasan | #AIADMK
இழப்பீட்டுத் தொகை வழக்குகளில், இல்லத்தரசி���ளின் உழைப்பு, சேவை, தியாகம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டுமெனும் உச்சநீதி மன்றத்தின் கருத்து எங்களது 'இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' எனும் கனவின் மீது ஒளிபாய்ச்சுகிறது. மகிழ்கிறேன்.
புதுக்கோட்டையில் திரண்ட எம் சொந்தக்காரர்கள் எனக்கு தமிழகத்தையும், தமிழகத்திற்கு என்னையும் எவ்வளவு தெரியுமென காட்டிவிட்டார்கள். இன்னும் தெளிவு வேண்டுமானால், உங்கள் உளவுத்துறையிடம் கேட்டுப்பாருங்கள். நல்லிரவு.
மிக இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் "மாதர் படை" மாற்றத்திற்குத் தயாராகி விட்டது.
பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தி அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாகத் தமிழகத்தை மாற்றிய பெரியாரின் நினைவுகளை அசை போ���ுகிறேன். பெரியார் அன்றும் இன்றும் என்றும் தேவையாக இருக்கிறார்.
கூடிக் கலையும் கும்பல் அல்ல. கூட்டி வரப்பட்ட கூட்டமும் அல்ல. இது சரித்திரம் படைக்கத் துணிந்தவர்களின் சங்கமம். நாமே தீர்வு எனும் முழக்கம் எம் சங்கநாதம்.
புதியதோர் புதுவை செய்வோம்!