சரி ஆரம்பிக்கலாமா 👇
சொல்லுங்க உங்க குடும்பத்துல மொத்தம் எத்தனை ஓட்டு அதுல எத்தனை ஓட்டு TVK க்கு வந்திருக்கின்றத கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
எங்க வீட்ல 5 ஓட்டு
5 ஓட்டுமே TVK தான் ✅
#TVK#TVKForTN
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், இன்று (15.04.2026, புதன்கிழமை) சென்னை மாவட்டத்தி��் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
சென்னை, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணி முதல் வாகனத்தின் வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு ச���ய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும், குறிபிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கே��்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்