தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வெற்றி வேட்பாளர்களை அறிவித்திருக்கி���ோம்.
நாடாளுமன்றத்தில் உங்களது குரலாகத் தி.மு.க.வினரும் #INDIA கூட்டணியினரும் எதிரொலிக்க - ஒன்றியத்தில் நமது #INDIA கூட்டணி ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்!
#Vote4INDIA
மார்ச் 6!
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மத��்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.
மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்!