தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந��த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk @Inba_AN_Ragu @ilaiyadmk @keprakashdmk @AbdulmalikDmk @Prabhugajendran
@pssrinivasandmk @GprMadurai @C_ANAND_KUMAR
பொம்மலாட்டக் கலை மூலம் இளையத் தலைமுறையினரிடையே முற்போக்கு கருத்துக்களைப் பரப்பிய பொம்மலாட்டக் கலைஞர் திரு.மு.கலைவாணன் அவர்களுடைய மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
திரு.கலைவாணன் அவர்களது கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் நமது திராவிட மாடல் அரசு அவருக்கு கலைமாமணி விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.
அவரது மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பெரியாரிய இயக்கத்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ���ாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை ���ிமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தி.மு.க இளைஞர் அணி மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.
சிறப்புரை: கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவால��ம்.
நேரம்: மாலை 5:00 மணி.
#DMKYW #DMK4TN
முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடுபுகுந்து தாக்கியதை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திட புதிய அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் அறிக்கை
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள��ர். பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்க வேண்டும் என்பதுடன், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட விடாமல், அச்சுறுத்தி அவர்களின் எழுத்துரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுவதை தி.மு.க. என்றைக்கும் ஏற்றதில்லை.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது புதிய அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணிகாத்திடுவது அரசின் கடமை என்பது உணர்ந்து, முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைத��ன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
***
#DMK
மாணவர்கள் சாப்பிட்ட அதே உணவை சாப்பிட்ட அண்ணன் உதயநிதி.
அவனுங்க சாப்பிடுவதை நானும் சாப்பிடனுமா?? நான் எலைட்.. என வீட்டிலிருந்து பிரெட் எடுத்து சென்று சாப்பிட்ட ஆதவ் அர்ஜூனா..
@Udhaystalin
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்���ும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீ��ாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள��, பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் த���வையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மதுரை தெற்கு மாவட்���க்கழக செயலாளரும் - திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் சேடப்பட்டி மணிமாறன் அவர்களை சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம்.
அவர் பூரண நலம்பெற்று கழகப்பணி - மக்கள் பணிக்கு திரும்பிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தோம்.
@ManimaranDS
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்க���ள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
��க்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டக் கழகத்தின் தூணாக விளங்கி - நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் பூண்டி கே.கலைச்செல்வம் - மல்லிகா ஆகியோரின் அன்பு மகள் மருத்துவர் க.கலையழகி - மருத்துவர் ந.ராம்பாலாஜி இணையேற்பு விழா தஞ்சாவூரில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றபோது அதில் ப��்கேற்று வாழ்த்துரை வழங்கினோம்.
பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் அழகுத்தமிழும் போல, கலைஞரும் போர்க்குணமும் போல மணமக்கள் என்றென்றும் வாழ்க, வளர்க! @kalaivanandmk
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் திரு கே.ராஜன் அவர்கள் மறைவெய்திய நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று சென்று அவருடைய திருவுடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த திரு.கே.ராஜன் அவர்களுடைய மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்!
அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத���தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக��களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!