வளர்ச்சியென்று வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு தேவையற்ற இடங்களில் விமான நிலையங்களை ஒருபுறம் கட்டிமுடித்து, வீணாக மூடிக்கொண்டிருக்கிற நிலையில், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாட்டை அணுகாமல் உடனடியாக கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்தினேன்..!!
எனது வேலூர் மக்களவை தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக வேலூர் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவது திகழ்கிறது. மாண்புமிகு பிரதமர் அவர்களே பரப்புரையின்போது தரையிறங்கும் அளவிற்கு நிறைவுக்கட்டத்தை எட்டிய பின்னர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேலூர் விமான நிலையத்தில் வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுவருகிறது. எனவே ஒன்றிய அரசு துரிதமாக செயல்பட்டு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வேலூர் மாவட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் வேலூர் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண��டுவரவேண்டும் என்று இன்று நடைபெற்ற மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் வலியுறுத்தினேன்.
#VelloreAirport #ParliamentWinterSession #DMK4TN
@arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @DMKVellore_ | @dmknorthvellore | @PEN_Offl
கழகத் தலைவர், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் MGNREGS 2025-2026 திட்டத்தின் கீழ் 18.55 லட்சம் பொருட்செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டோம்.
#MKStalin #UdhayanidhiStalin #DMK4TN #DMK #bargur #krishnagiri
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞர்களின் எழுச்சி நாயகர், கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் திரு. @Udhaystalin அவர்களது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடி வழங்கினோம்.
@mkstalin
#HBDUdhay #MKStalin #UdhayanidhiStalin #DMK
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைப்படி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் தெற்கு ஒன்றியம், ஐகுந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருகோபனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, தொகரப்பள்ளி அரசு ஆண்கள��� மேல்நிலைப்பள்ளி , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 236 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினோம்.
#MKStalin #UdhayanidhiStalin #DMK4TN #Bargur #Krishnagiri
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் தெற்கு ஒன்றியம், சிகரலப்பள்ளி ஊராட்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.69 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை மற்றும் ��ையனூர் கிராமத்தில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்கூட கட்டிடம் மற்றும் MGNRGES திட்டத்தின் கீழ் பார்டர் காட்டூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி தொடக்கி வைத்த போது.!
#DMK #DMK4TN #Krishnagiri #Bargur
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, பர்கூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங���கும் திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து தொடக்கி வைத்து ரூ.17 இலட்சத்து 67 ஆயிரத்து 920 மதிப்பிட்டில் 217 மாணவியர்களுக்கும், 150 மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய போது.
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
மக்கள் நலன் காக்கும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, போச்சம்பள்ளி ஒன்றியம், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை #நலம்_காக்கும்_ஸ்டாலின��� திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்ட போது.
#நலம்_காக்கும்_ஸ்டாலின் #DMK #DMK4TN #Krishnagiri
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை பேரூர், பாரதிபுரம் 1-வது மற்றும் 2-வது வார்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்(2025-2026) ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்தரமான அங்கன்வாடி குழந்தைகள் மையக் கட்டிடம் திறப்பு விழாவில் கழக நிர்வாகிகளுடன் க��ந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவ செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, சிறப்புரையாற்றி மகிழ்ந்தோம்.
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
கழகத்தின் கொடிகாத்த குமரனாக என்றும் நினைவில் வாழும் என்.வி.என்.சோமு!
திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த மிகப்பெரிய வரலாற்றுக் கொள்கைப் போர்க்களங்களில் கருப்பு சிவப்பு கழகக் கொடியை நெஞ்சுரத்தோடு தாங்கிப்பிடித்து களமாடிய போராளி என்றால் அது மிகையாகாது. இலட்சோபலட்சம் போராளிகளின் வழித்துணையாக முன்னின்ற தலைவர்களில் உடன்பிறப்புகளின் உடன்பிறப்பாய் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது வழியில் ப���டு நடை போட்டவர் எங்கள் நினைவில் வாழும் ஆளுமை திரு. என்.வி.என். சோமு அவர்கள்!
அவர் என் தந்தை மட்டுமல்ல, குடும்பத்தலைவராக தனது கடமைகளை நிறைவேற்றிவந்த உறவு மட்டுமல்ல, சமூகநீதி எனும் இலட்சிய விருட்சத்தின் விதையை விதைத்து, தி.மு.கழகத்தின் வழியில் எந்நாளும் களமாடிடும் கொள்கைத் திசைமானியாக விளங்கியவர். அறவாழ்வின் அடித்தளமாக விளங்கி வருபவர். எனது தாத்தா திரு. என்.வி. நடராசன் அவர்களது தீரத்தோடு பிறந்தவர் – என்றும் மாறா பற்றுறுதியோடு வாழ்ந்தவர். செங்குன்றம் அருகிலுள்ள ஞாய���று என்ற சிறிய ஊரில் 1937-இல் பிறந்தவர். உதயசூரியனின் வழியில் செல்வோம் என்பதை அவர் பிறந்த ஊரே கட்டியம் கூறியதுதான் வரலாறு.
எனது தாத்தா திரு. என்.வி.நடராசன் அவர்களது கொள்கை மகனாக தனது வாழ்வை கழகத்துக்கும், கொள்கைப் பயணத்திற்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய திசையில் திட்டங்களை வகுத்தளிப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட உயிராய், உறவாய் உதிரத்தில் கலந்த உடன்பிறப்பு க���லம் சென்ற எனது தந்தையார் திரு. என்.வி.என்.சோமு. அவர்கள். இதன் வெளிப்பாடு தான் “அவர் எனக்கு விசுவாசமாக இருப்பது மாத்திரமல்ல, இந்தக் கட்சிக்கு விசுவாசமானவர், கொள்கைக்கு விசுவாசமானவர்” என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அளித்த நற்சான்று. அந்த நற்சான்றை நானும் மருத்துவ அணி செயலாளராக என்னை அவர் நியமித்தபோது பெற்றேன் என்பது எனக்கு கிடைத்த மாபெரும் பேறு.
எனது தந்தை சட்டப்படிப்பு பயின்ற பிறகு இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு கிடைத்ததும், பேரறிஞர் அண்ணாவிடம் தனத�� வாழ்வின் வழித்தடத்தை மாற்றப்போகும் முடிவெடுக்க யோசனை கேட்கிறார். பேரறிஞர் அண்ணா அவர்கள் “கட்சியில் சட்டப் பணிகள் ஏராளம் இருக்கின்றன. உன்னைப் போன்றோர்தான் கழகத்தின் வழக்குகள், சட்டப்பணிகளைக் கவனிக்க வேண்டும்’’ என எனது தந்தைக்கு ஊக்கமளித்து கழகத்தின் முதல் சட்டக்குழுவில் இணைத்துக்கொண்டார். அரசியல் சூழலில் வளர்ந்திருந்தாலும் கழக மாணவர் அணியிலும் இணைந்து களமடியிருந்தால���ம் தனக்கான இடத்தை, தனது உழைப்பால், அதன் வழி வந்த வாய்ப்பால் உருவாக்கி திடப்படுத்தியவர் எனது தந்தையார் என்பதில் எங்களுக்கு பெருமையே! இன்ற��வும் தொடர்ந்து மக்களின் உரிமைக்காக நீதிமன்றத்தில் களமாடி வென்றெடுத்துவரும் எதிரிகளின் சிம்மசொப்பனம் திமுகழக சட்டத்துறை முதன்முதலாக உருவாக்கப்பட்டபோது, அதன் இணைச் செயலாளராக எனது தந்தையார் இருந்ததும் பாரம்பரியமாக கிடைத்த உழைப்புக்கான வாய்ப்பே!
1938 - 39 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது ஒன்றரை வயது பாலகனாக தனது தாயோடு சிறை சென்றவர். 1968 ஆம் ஆண���டு, சென்னை பெத்தநாயக்கன்பேட்டை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1973ஆம் ஆண்டு வரை மக்கள் சேவையில் இருந்தார். 1971-72ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சியின் துணை மேயராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1980 ஆம் ஆண்டு, பூங்கா நகர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் ந���த்தப்பட்டது. அந்தத் தேர்தலில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எனது தந்தையார் திரு. என்.வி.என்.சோமு அவர்கள் தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்ப��ளராக எனது தந்தையார் திரு. என்.வி.என் .சோமு அவர்கள் போட்டியிட்டபோது, அதே மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் தளபதியார் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டார். கருப்பு சிவப்பு கொள்கைப்படையை வழிநடத்திக்கொண்டிருந்த நமது தளபதியார் அவர்களுடன் இணைந்து அயராது பணியாற்றிவந்தார். (1/3)
காட்பாடி தொகுதியில் 1 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தரவேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டார் நம் அருமை அண்ணன் திரு.@Jagathofficial எம்.பி. அவர்கள்! நமது கழகத் தலைவர் @mkstalin அவர்களது வழிகாட்டுதலோடு, நமது கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களது உறுதுணையோடு, நமது கழக பொதுச் செயலாளர் @katpadidmk அவர்களது நல்லாசியோடு, உடன்பிறப்புகளின் பாசப்பிணைப்போடு, காட்பாடியில் மட்டுமல்ல வேலூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு தொகுதிகளிலும் இமாலய வெற்றியை கழகத்திற்கு அர்ப்பணிப்போம்!
@arivalayam | @DMKITwing
| @DMKVellore_
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைப்படியும், கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான இளந்தலைவர் @Udhaystalin அவர்களது வழிகாட்டுதலோடும் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு #SIR கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி' கட்சிகளின் ச���ர்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை எதிரே நமது தலைமையில் நேற்று எழுச்சியுடன் நடைபெற்ற பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது கண்டன உரை!
#தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும் #Krishnagiri #Bargur
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைப்படியும், கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான இளந்தலைவர் @Udhaystalin அவர்களது வழிகாட்டுதலோடும் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு #SIR கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி' கட்சிகளின் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை எதிரே நமது தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. @yprakash_mla அவர்கள் முன்னிலையிலும், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KGopinath09 அவர்கள், தளி சட்டமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் திரு.T.ராமச்சந்திரன் அவர்கள் ஓசூர் மாநகர மேயர் திரு.S.A.சத்யா.,EX MLA அவர்கள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின��� நிர்வாகிகளின் கண்டன உரையுடன், எழுச்சியுடன் நடைபெற்ற பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம்.!
#தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும் #Krishnagiri #Bargur
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் கரடி அள்ளி ஊராட்சி அதிமுக கட்சியைச் சேர்ந்த கிளை செயலாளர் திரு.சாமிநாதன் மற்றும் தவெக நிர்வாகிகள் 15 நபர்கள், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் @Udhaystalin அவர்களின் ��லைமையை ஏற்றுக் கொண்டு, நல்லாட்சி நாயகர் அவர்களின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கழக பணியாற்றுவதற்காக நேற்று நமது ��ுன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட போது.
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
நான் பிறந்த மண் கே.வி. குப்பத்திற்கு நமது கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் வழங்கிய மாவட்டப் பொறுப்பாளர் எனும் மாபெரும் கடமையை நெஞ்சில் தாங்கிச் சென்று உடன்பிறப்புகளை சந்தித்தபோது வெற்றியை உறுதி செய்திட அயராது பாடுபடும் தளபதியாரின் நம்பிக்கையை உறுதி செய்திடும் ��கையில் கே.வி. குப்பத்தை வென்றெடுப்போம்! என்று சிறப்புரை ஆற்றினேன்.
@arivalayam | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @DMKVellore_
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் வடக்கு ஒன்றியம், களர்பதி ஊராட்சி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.47.50 இலட்சம் மதி��்பீட்டில் புதிய கட்டிடங்கள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் நேற்று கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு, இனிப்புகளை வழங்கி துவக்கி வைத்த போது.!
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் தி��ு. @Udhaystalin அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பர்கூர் பேரூராட்சியில் உள்ள தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த 21 நபர்களை KSG.ரா.கார்த்திகேயன் அவர்களின் ��ற்பாட்டில், பர்கூர் ஒன்றிய சங்கத் தலைவர் திரு.k.ஏசுதாஸ் அவர்கள் தலைமையில், இன்று நமது முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அனைவருக்கும் சால்வை அணிவித்து கழக நிர்வாகிகளுடன் அன்போடு வரவேற்ற போது.!
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur