மாண்புமிகு முத���மைச்சர் @CMOTamilnaduஅய்யா அவர்களுக்கு சேலம் மேட்டூர்-ஆலமரத்துப்பட்டி குருமன்ஸ் பழங்குடி மக்களின் கண்ணீர் மனு! 1880 முதற்கொண்டு கோவை, சேலம் ஆவணங்கள், 1961-81 சென்சஸ் வரை எங்களை 'பழங்குடியினர்'(ST)என்றே உறுதி செய்கின்றன. ஆனால் இன்று எங்கள் அடையாளம் மறுக்கப்படுகிறது!
எங்கள் கிராமத்தில் 2006, 2011-ல் ஊராட்சித் தலைவர் பதவி ST பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. எங்களின் "ஓசாட்ட சென்னையன்" வன வழிபாடும், 1896-ஆம் ஆண்டின் 74-வது கலாச்சாரப் பத்திரமும் நாங்கள் பூர்வீகப் பழங்குடிகள் என்பதற்கான அசைக்க முடியாத சாட்ச���கள் அய்யா!
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு,
பெரியார் – அம்பேத்கர் கொள்கைகளை முன்னிறுத்தும் தாங்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஒரு பழங்குடியினரான என்னை வேட்பாளராக அறிவித்து, பழங்குடி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களின் கவனத்திற்கு.பெரியார், அம்பேத���கர் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும், சாதி ஒழிப்பை வலியுறுத்துவதாகவும் கூறும் அரசியல் இயக்கங்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஒரு பழங்குடியினரை வேட்பாளராக நிறுத்தத் தயாரா?
நான் ஒரு பழங்குடியினர்.
எங்கள் சமூக மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் இந்த அநீதிக்கு தாங்கள் உரிய தீர்வு வழங்கி, எங்கள் பழங்குடி அடையாள உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
@CMOTamilnadu ஆலமரத்துப்பட்டி – குறும்பனூர் கிராம குறுமன்ஸ் பழங்குடி மக்களின் வரலாற்று, சட்ட மற்றும் அரசாணைச் சா��்றுகளை நேரில் எடுத்துரைக்க, தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி வழங்குமாறு கோரி விண்ணப்பம்
மேற்கண்ட அனைத்து வரலாற்று, சமூக, சட்ட மற்றும் அரசாணைச் சான்றுகளையும் தங்களிடம் நேரில் சமர்ப்பித்து விளக்கிக் கூறுவதற்காக, எங்கள் கிராம மக்கள் சார்பில் தங்களை நேரில் சந்திக்க ஒரு நாள் மற்றும் நேரம் ஒதுக்���ி வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.