. Omg #SK liked 🥺❤.. I Went Temple Came Home So Shocked.. Thank You So Much @Siva_Kartikeyan Anna🥺😭😭
I Love You Lot Na.. Got 1st Like From You🥰
The " #DoctorMovie " & Today 17/10/2021💖 My Memorable Day Forever💕
17..SK Na & gugan doss Bd.😍
10 my Bd.month🥺
#Doctor💛
சிறந்த தயாரிப்பு - கொட்டுக்காளி (சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்)
நாம் பார்த்துப் பழகிய பாணியிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டதொரு புதுமையான கதை சொல்லல். கருவிகள் கொண்டமைக்கும் பின்னணி இசையைத் தவிர்த்து, சுவர்க்கோழிகளின் ரீங்காரம், சேவலின் கொக்கரிப்பு என இயற்கையின் வசம் இசையை ஒப்படைத்த திரைமொழி, படத்தின் முடிவை பார்ப்பவர்களிடமே விட்டுவிடும் துணி��்சலான ஆக்கம்... இப்படி தமிழ்சினிமா வரைந்து வைத்திருக்கும் எல்லா எல்லைகளையும் உடைத்து புதுப்பாய்ச்சல் நிகழ்த்தியது ‘கொட்டுக்காளி.' ‘பெரும்பொருட்செலவும், உயர்தர தொழில்நுட்பப் பயன்பாடும் இல்லாத உலக சினிமா. மண்ணின், மக்களின் கதையை அவர்களின் மொழியில் பேசுவதே உலக சினிமா' என ஆணித்தரமாய் நிறுவிய படைப்பு. உலக அரங்கில் ‘கொட்டுக்காளி' கரகோ��ங்களைக் குவிக்க உதவிய ஒரு கை இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜினுடையது என்றால், மற்றொரு கை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுடையது. பரீட்சார்த்த முயற்சிகளைப் புறந்தள்ளி வர்த்தகக் கணக்குகளுக்குள் முடங்கிவிடும் வழக்கமான தயாரிப்பாளராக இல்லாமல், கதையை, அதுபேச நினைக்கும் அரசியலை தமிழகத்தின் மூலைமுடுக்கு மட்டுமல்லாமல் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் வரை கொண்டு சென்ற சிவகார்த்திகேயனின் ம���னக்கெடல் பாராட்டுக்குரியது. தன் பிம்பம் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் எதிர்மறைக் கதாபாத்திரத்தை ஏற்ற சூரி, தமிழில் தன் முதல் படம் இதுபோன்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் எனக் காத்திருந்து நடித்த அன்னா பென், இப்படி ‘கொட்டுக்காளி’ இன்று அடைந்திருக்கும் உயரத்தை எட்ட இந்தப் படைப்பில் நம்பிக்கை கொண்டு பங்கேற்ற ஒவ்வொருவருமே காரணம். கொட்டுக்காளி - தமிழ் சினிமாவின் புதிய விடியல்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards