வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால��, இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#Pallikaranai | #Marshland | #Wetlands | #PasumaiThayagam | #PMK | #Chennai | #SAVE_PALLIKARANAI
சத்திய ஞானசபையின் பெருவெளியை சிதைத்து வள்ளலார் மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதற்கு வரவேற்பு: பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி
வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் ப���்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பார்வதிபுரம் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், வள்ளலாரின் நோக்கங்களுக்கு எதிராகவும் முந்தைய திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக அவருக்கு பன்னாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண சத்தியஞான சபை வளாகத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று ம��ந்தைய திமுக அரசு அறிவித்த போது தான் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. பல போராட்டங்களை நடத்தியது. பெருவெளியைக் காக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மக்கள் உரிமை பயணத்தின் போதும் அங்கு சென்று வழிபட்டு வந்தேன்.
ஆனால், முந்தைய திமுக அரசு சில சுயநல நோக்கங்களுக்காக அங்கு தான் வள்ளலார் மையம் அமைக்கப்படும் என்பதில் உறுதியாக இருந்��து. அதற்கு எதிராக போராடிய மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முயன்ற போது அதற்கு அனுமதி கூட கொடுக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது.
ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு பாமக மற்றும் பார்வதிபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது சிறந்த முடிவு. பெருவெளியியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கக் கூடாது என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் பெருவெளியை பாதிக்காத வகையில் பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை.
எனவே, வள்ளலாருடன் தொடர்புடைய வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்�� தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu
காவிரி ஆணையம் ஆணையிட்டும் தண்ணீர் திறக்காமல் போர்க்கோலம் பூணும் கர்நாடகம்: தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் சென்று உரிமைகளை அடகு வைக்கக் கூடாது!
தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே தீருவேன் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிட��ப்பது தமிழகத்திற்கு நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று கூறிவிட்ட கர்நாடக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீர்மானித்திருக்கிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிர�� பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கின்றன. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கர்நாடக அரசும், கன்னட இயக்கங்களும் இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது அங்கு சென்று பேச்சு நடத்தி முதலமைச்சர் விஜய் அவர்கள் எதை சாதிக்கப் போகிறார்? அவரது பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் தான் தாரைவார்க்���ப்படும். இந்த தவறை முதலமைச்சர் விஜய் செய்யக் கூடாது.
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தான் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 நாள்களில் வெறும் 4.5 டிஎம்சி நீர் மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். இது ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரில் பத்தில் ஒரு பங்கு தான். ஆனால், அந்த அளவுக்கு குறைந்த நீரைத் திறப்பதற்குக் கூட கர்நாடகம் தயாராக இல்லை.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 67.078 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 25,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஆறில் ஒரு பங்கு நீரை மட்டுமே திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறையாது. மாறாக தினமும் 1.9 டி.எம்.சி வீதம் அணைகளின் நீர் இருப்பு 15 நாள்களில் 28 டி.எம்.சி அதிகரிக்கும். ஆனாலும் தமிழகத்திற்கு குறைந்த அளவு நீரைக் கூட தருவதற்கு கர்நாடக அரசுக்கு மனமில்லை.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணை தடுக்கப்பட வேண்டும்; இவை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த பேச்சுகளையும் தமிழ்நாடு நடத்தக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் நிலைப்பாடு ஆகும். இதற்கு எதிராக எந்த முடிவையும் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளக் கூடாது. எனவே, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் கைவிட வேண்டும்.
@CMOTamilnadu
Karnataka Refuses to Release Water Despite Cauvery Authority's Order; Must Not Mortgage Tamil Nadu's Rights by Ignoring Its Sentiments!
Even after the Cauvery Water Management Authority directed Karnataka to release 3,500 cubic feet per second (cusecs) of water to protect the withering Kuruvai crop in Tamil Nadu, the Congress government in Karnataka has refused to comply. Instead, it is allegedly inciting people there to protest against releasing water to Tamil Nadu. Under these circumstances, Chief Minister Vijay's insistence that he will travel to Karnataka and hold talks with Karnataka Chief Minister D.K. Shivakumar is, in no way, beneficial to Tamil Nadu's interests.
The Karnataka government has already declared that it cannot accept the Cauvery Management Authority's directive to release water to Tamil Nadu and has decided to challenge the order through an appeal. Kannada organizations opposing the release of water have warned of a complete shutdown in the Cauvery basin districts to protest the decision. Karnataka Chief Minister D.K. Shivakumar has also convened an all-party meeting on August 2 to discuss the issue.
All these actions by the Karnataka government and Kannada organizations are aimed solely at preventing the release of water to Tamil Nadu. When Karnataka is firmly determined not to provide even a single drop of water, what does Chief Minister Vijay hope to achieve by traveling there for talks? His visit will not secure even a single drop of water for Tamil Nadu. On the contrary, it may compromise Tamil Nadu's rights in the Mekedatu dam issue. Chief Minister Vijay must not commit such a mistake.
The Cauvery Management Authority has ordered Karnataka to release 3,500 cusecs of water for 15 days to Tamil Nadu. This amounts to only about 4.5 TMC (thousand million cubic feet) of water over the next 15 days. This is merely one-tenth of the water Karnataka was required to release to Tamil Nadu during the months of June and July. Yet Karnataka is unwilling to release even this minimal quantity.
As of this morning, the four dams built across the Cauvery and its tributaries in Karnataka together hold 67.078 TMC of water. In addition, the total inflow into these four reservoirs is 25,644 cusecs. The Cauvery Management Authority has directed Karnataka to release only about one-sixth of this inflow. Complying with this order would not reduce the storage levels in Karnataka's reservoirs. Instead, with an estimated increase of 1.9 TMC per day, the combined storage would rise by approximately 28 TMC over the next 15 days. Despite this, the Karnataka government is unwilling to release even the limited quantity of water ordered for Tamil Nadu.
Tamil Nadu's interests must be protected in the Cauvery dispute, and the proposed Mekedatu dam must be prevented. It is the position of the people of Tamil Nadu that the state government should not hold any negotiations with the Karnataka government on these issues. Chief Minister Vijay should not take any decision that goes against this sentiment. Therefore, he must abandon his proposed visit to Karnataka on August 3.
@CMOTamilnadu
இயற்கை வென்றது - கபிணி அணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் திறப்பு: கிருஷ்ணராஜ சாகர்
அணையிலிருந்தும�� தண்ணீர் திறக்க வேண்டும்!
கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வ��வு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.
கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்���ரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.
காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது. இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.
எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
Nature Has Prevailed – 10,000 Cusecs released from Kabini Dam: Water Must Also Be
Released from the Krishna Raja Sagara Dam!
Following the overflowing of the Kabini Dam, built across the Kabini River, one of the tributaries of the Cauvery in Karnataka, water has been released at the rate of 10,000 cubic feet per second (cusecs). How long this release will continue? and whether it will be sufficient to meet Tamil Nadu's requirements? will depend on the amount of rainfall received in the catchment areas over the next few weeks. Nevertheless, the release of water to Tamil Nadu due to nature's bounty brings a sense of relief.
As of this morning, the water level in the Kabini Dam stood at 2,281 feet, with 17.50 TMC of water in storage. At that point, only 3 more feet of water level and 2 TMC of storage were needed for the reservoir to reach full capacity. With an inflow of 11,747 cusecs, and inflows increasing further during the afternoon, the dam is expected to reach full capacity by tomorrow. Therefore, water has been released as a precautionary measure. This release is a result of nature's generosity rather than the willingness of the Karnataka government.
For the Cauvery delta irrigation districts in Tamil Nadu, at least 40 to 45 TMC of additional water is required to ensure the Samba cultivation season. If rainfall decreases in the catchment areas, the release from the Kabini Dam may also stop, in which case Tamil Nadu would receive little benefit.
Meanwhile, another reservoir, the Harangi Dam, has also reached full capacity and is overflowing. As a result, water is being released from Harangi to the Krishna Raja Sagara (KRS) Dam at the rate of 10,000 cusecs. It is expected that inflows into the KRS reservoir will increase further over the next few days.
Therefore, to enable the storage and effective management of the additional floodwaters, water should also be released from the Krishna Raja Sagara Dam into the Cauvery for Tamil Nadu. Continuing this release for at least another week would help ensure that Samba paddy cultivation can proceed successfully in the Cauvery irrigation districts of Tamil Nadu.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்குவது தொடர்பாக அம்மாநில நிர்வாகிகளுடன் சென்னை பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடிய போது.!
முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு இரங்கல்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மகன் டாக்டர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
டாக்டர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், முஸ்லீம் லீக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்!
கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரி���ீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.
கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 64% ஆகும். கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் அணையில் 42% நீர் உள்ளது. ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க ��ேண்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.
ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைக்கு 10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட அதிகமாக14470 கன அடி நீரை திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் சேமித்து வைக்கிறது. ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின் அதன் உபரி நீரையும் கிருஷ்ணராஜசாகர் அணையில் தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.
கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விட���்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும். மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும். அதனால் தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
"If the Mekedatu Dam had already been built, even the water now being released from Kabini would not have reached TN. Proposed dam must be stopped at all costs!"
As the Kabini Dam in Karnataka has reached full capacity, Karnataka released 25,000 cubic feet per second (cusecs) of water into the Cauvery for Tamil Nadu yesterday. However, this morning the discharge was reduced to 10,000 cusecs. Later, as the inflow increased to 28,009 cusecs, the release was raised to 14,958 cusecs. This demonstrates that the Karnataka government is unwilling to provide Tamil Nadu with the quantity of water it is legally entitled to receive and is instead using the Cauvery in Tamil Nadu merely as a flood control channel for surplus water.
As of this morning, Karnataka's reservoirs together hold 74.05 TMC of water, which is 64% of the combined storage capacity of 114.57 TMC across its four major dams. The Kabini Dam is at 94% capacity, Harangi Dam at 92%, Hemavathi Dam at 73%, and Krishna Raja Sagara (KRS) Dam at 42%. By the end of July, Karnataka was required to release 40 TMC of water to Tamil Nadu. Had the Karnataka government genuinely intended to provide Tamil Nadu with the water due to it under law and fairness, it could have released water from all three reservoirs other than Krishna Raja Sagara.
Instead, Karnataka has released water only because the Kabini Dam is full and there is no alternative place to store its surplus water. Since the Harangi Dam is also full, although it is receiving an inflow of 10,430 cusecs, it is releasing 14,470 cusecs, with the excess being stored in the Krishna Raja Sagara reservoir. The Hemavathi Dam is also expected to reach full capacity within a week, after which its surplus water too will be stored in the Krishna Raja Sagara reservoir. This reflects Karnataka's continuing policy of avoiding the release of water to Tamil Nadu.
The proposed Mekedatu Dam is planned downstream of all these four reservoirs, close to the Tamil Nadu border. Had this dam already been constructed, even the water now being released from the Kabini Dam would not have reached Tamil Nadu. Likewise, the water released from the Harangi and Hemavathi dams and conveyed through the Krishna Raja Sagara reservoir into the Cauvery would also have been impounded at the Mekedatu Dam. The chances of the Mekedatu reservoir itself filling up and then allowing water to flow to Tamil Nadu would be extremely remote—almost like expecting the impossible. This is why the Pattali Makkal Katchi (PMK) has consistently insisted for more than 15 years that permission should not be granted for the construction of the Mekedatu Dam.
Therefore, the Tamil Nadu government should not adopt an wrong approach on the Mekedatu Dam issue or fall victim to what he describes as the Karnataka government's strategies and maneuvers. It must remain firm in its opposition to granting permission for the dam's construction. The government should consult all political parties and farmers' organizations and formulate a clear and comprehensive action plan. @CMOTamilnadu
உழவர் ��ேரியக்கம் அமுல்ராஜ் மறைவுக்கு இரங்கல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்தைச் சேர்ந்த தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அமுல்ராஜ் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இளம் வயதிலேயே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்ட அமுல்ராஜ், கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்து ப���ராட்டங்களிலும் பங்கேற்றவர். பல முறை சிறை சென்றவர். அரசியலில் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர வேண்டிய அவர், இளம் வயதிலேயே உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அமல்ராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உழவர் பேரியக்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தில்லியில் போராட ரயிலில் சென்ற தமிழக உழவர்களை நாக்பூரில் மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டது அநீதி: மராட்டிய அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்!
காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து தில்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்த�� முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.
மேகதாது விவகாரத்தில் தமிழக���்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
தில்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செ��்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். @CMOTamilnadu
யாருக்கும் அஞ்சாத தீரன் சின்னமலையின் 222-ஆம் நினைவு நாள்: நாட்டைக் காப்பதில் இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்!
உலகமே ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நிலையில், இந்���ிய விடுதலைப் போராட்டத்தில் அவர்களை அலற வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 222-ஆம் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756 ஆம் ஆண்டில் பிறந்த தீரன் சின்னமலை, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்த��ன் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வ��ழ்த்தப்பட்ட நாள் இன்று.
நாட்டைக் காப்பதில் தீரன் சின்னமலையின் வீரத்தையும், தேசப்பற்றையும் இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலை��ுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.