தமிழ் இலக்கிய உலகின் தனித்துவமான படைப்பாளியு��், கரிசல் மண்ணின் வாழ்வியலையும் மனித உணர்வுகளையும் தனது எழுத்தின் வழியே காலத்திற்கும் அழியாத ஆவணங்களாகப் பதித்த சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. பூமணி அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
எளிய மனிதர்களின் வாழ்வை அசாதாரண இலக்கிய உயரத்திற்கு உயர்த்திய அவரது எழுத்து, தமிழ் மொழியின் பெருமையையும் செழுமையையும் உலகறியச் செய்தது. காலம் கடந்தும் வாசகர்களின் சிந்தனையில் நிலைத்திருக்கும் அரிய படைப்புகளை விட்டுச் சென்றுள்ள அவர், தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்திருப்பார்.
அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கும், படைப்புலகிற்கும் ஈடு செய்ய முடியாத ப��ரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது இலக்கியப் படைப்புகளும் சிந்தனைகளும் தலைமுறைகள் பலவற்றிற்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் நிலைத்திருக்கும்.
ஓம் ச��ந்தி!
மதுரை கொட்டாம்பட்டி அருகே, சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்து கொண்டிருந்த அரசு��் பேருந்தின் மீது மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 40 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்திப்பதாகவும் வ���ளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.
இவ்விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
மேலும், பொதுச் சொத்துக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தரமான பேருந்து���ளையும், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களையும் நியமித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டுமென தமிழக அரசையும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
மதுக்கடையை அகற்றக்கோரிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடத்துவதா? - தவெக அரசுக்கு கண்டனம்!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோ��ாலியில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது முதல்வர் திரு. @TVKVijayHQ அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பள்ளி மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியாயமான கோரிக்கைக்காகப் போராடிய பெண் குழந்தைகளை தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம் எனத் தேர்தல் களத்தில் முழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், தற்போதைய அராஜகச் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது வெறும் காகித விளம்பரமே என்பதை கோடாலி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூரத் தடியடிச் சம்பவம் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள��ளது.
மதுவின் பிடியில் இருந்து தங்களைக் காக்கப் போராடிய பிஞ்சுக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தவெக அரசு உடனடியாகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய உயர்தரச் சிகிச்சை வழங்குவதோடு, இதுபோல பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. @realsarathkumar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது கட்சி பணிகளிலும், திரைத்துறையிலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Wishing Hon’ble Deputy Chief Minister of Andhra Pradesh Shri @PawanKalyan garu a speedy and complete recovery. May he regain good health and strength soon, and return to public service with the same unwavering commitment and inspiring spirit. Prayers for his well-being.
இன்றைய தினம் திருநெல்வேலி பெருமாள்புரத்தில் நடைபெற்ற திருநிறைச்செல்வன் கந்தவேல் என்ற ஆகாஷ் மற்றும் திருநிறைச்செல்வ�� சக்தி ஹரிணி ஆகியோரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, மணமக்களை மனமார வாழ்த்தி மகிழ்ந்தேன்.
மணமக்கள் இருவரும் அன்போடும், ஒற்றுமையோடும், நீண்ட நெடுங்காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.
சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளரும், கரிசல் மண���ணின் வாசனையை தனது எழுத்தின் வழியாக உலகறியச் செய்தவருமான எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது படைப்புகள் தலைமுறைகள் தாண்டி வாசகர்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.
ஓம் சாந்தி.
कुछ रिश्ते पदों से नहीं, वर्षों के साथ, विश्वास और संगठन के संस्कारों से बनते हैं।
प्रिय @gupta_rekha जी से आज मिलकर वही आत्मीयता फिर महसूस हुई। आपकी ऊर्जा, प्रति��द्धता और जनसेवा का भाव सदैव प्रेरणादायी रहा है। ईश्वर आपको निरंतर शक्ति और सफलता प्रदान करें।
மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளில், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பணித்த அவரது வீரத்தையும், அசைக்க முடியாத மனஉறுதியையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். காலம் கடந்தாலும் அவரது தியாகமும், விடுதலை உணர்வும் தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமாக நிற்கும்.
தமிழர் வீர வரலாற்றில் அழியாத முத��திரை பதித்த மாவீரர் அழகு முத்துக்கோனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும். அவரது உயரிய இலட்சியங்களும் தன்னலமற்ற தியாகமும் நம் சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்கட்டும்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முதன்முதலில் வித்திட்டு, வீரத்துடன் போராடி உயிர்த்தியாகம் செய்த மா���ீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அவரின் ஒப்பற்ற வீரத்தையும், தாய்நாட்டின் விடுதலைக்காக கொண்டிருந்த தணியாத சுதந்திர வேட்கையையும் போற்றி வணங்குகிறேன்!
கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசல��ல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார்.
கருணை அடிப்படையில் இப்பணி வவழங்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்கள் கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
��யிரிழந்தவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள். வழக்கம் போல கடைத் தெருவுக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்து தடுக்காத உளவுத் துறை மற்றும் காவல்துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வா��ாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர்.
அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணைப் பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும். எனவே, கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
@CMOTamilnadu
மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
Heartiest congratulations to Ms. N. Muthamilselvi and her team for creating history by unfurling the largest Indian National Flag at Mount Kilimanjaro.
Her inspiring leadership through "One Flag. One Mission. Drug-Free India." is a proud symbol of patriotism, courage, and national unity.
கோவில் நிலங்கள் எந்த விதத்திலும்
தனி நபர்களுக்கு சென்று விடாமல் இருப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும்
தி.மு.க.,வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது.
கரூர் மாவட்டத்தின் 15 கிராமங்களில் உள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,084 ஏக்கர் 95 செண்ட் திருக்கோவில் இனாம் நிலங்களை, 3,390 நபர்களின் பெயரில் பதிவு மற்றும் விற்பனை செய்யும் வகையில், பதிவு தடை���ை நீக்குமாறு, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் இந்து கோவில் சொத்துகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களால் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டு, கோவில் பெயரில் உள்ள சொத்துக்களை எந்தக் காரணத்திற்காகவும் வேறு யாருக்கும் பட்டா மாறுதல் செய்யக் கூடாது.
ஆக்��ிரமிப்பு உள்ளிட்ட எந்த வகையிலும் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பூர்வ கடமையாகும்.
எனவே, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை, தனி நபர்கள் பெயரில் பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்க எந்த ��டிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் கோவில் நிலங்கள், தனி நபர்களுக்கு சென்று.விடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச ரமேஷ் அவர்களும் உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க.,வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது.
@TVKVijayHQ l @CMOTamilnadu l @tnhrcedept
A proud moment for India! 🇮
The world's largest Indian National Flag (80 ft × 120 ft) was unfurled at Uhuru Peak, Mount Kilimanjaro, under the inspiring mission "One Flag. One Mission. Drug-Free India."
A remarkable tribute to patriotism, unity, courage, and the vision of a #DrugFreeIndia. #WorldRecord
https://t.co/zbwGEvPkzh
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,545 என்ற விலையில் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களும், மொத்த ஆதரவு விலை ரூ. 1,049 கோடி என்ற மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. @ChouhanShivraj அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்தையில் ஏற்பட்ட மாம்பழ விலை வீழ்ச்சியால், டன் கணக்கான மாம்பழங்களை குப்பையில் கொட்டி வந்த தமிழக விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றி, அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்துள்ள நமது மத்திய அரசின் இந்த முன்னெடுப்பால், தமிழக கிராமப்புறங்களின் பொருளாதாரம் வலுப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், தமிழக விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடமைப்பட்டுள்ளது!
Warm birthday wishes to the Hon’ble Union Defence Minister, Shri @rajnathsingh Ji.
I pray to the Almighty for your good health and long life, and wish that your dedicated service to the nation in building a strong Bharat and your tireless efforts in strengthening the defence sector continue to reach greater heights.
@DefenceMinIndia
அமைச்சர் திரு. நிர்மல் குமாரின் பொய் பிரச்சாரமும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு செய்யும் துரோகமும்!
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்க��்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் திரு. ஜோசப் விஜய் அரசு இறங்கியிருக்கிறது! மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பின் முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு, 'ஓடுதளம் அமைக்க முடியாது' என்று தவெக அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar அவர்கள் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்; மேலும், இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ச���ய்யும் துரோகமாகும்.
அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களே, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டுதான் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கின என்பது உங்களுக்குத் தெரியாதா?
ஏற்கனவே தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரைத்தி���ுக்கும்போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்?
இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்சினையா? அல்லத��, உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயலா?
இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த இயலாத நிலையில், இத்திட்டத்தைத் தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பறித்துவிடும். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.