நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தடிக்காரன் கோணம் ஊராட்சியை சார்ந்த முக்கிய பொறுப்பாளரான ராபின்சன் அவர்களின் இணையரும் நாம் தமிழர் கட்சி உறவுமான திருமதி ப. சசீலா அவர்கள், தாவரவியல் துறையில் தனது உயரிய முனைவர் (Ph.D.) பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது நம் அனைவருக்கும் பெருமிதமும் மகிழ்வும் தருகிறது💐
நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரியின் தாவரவியல் துறை மூலமாக, நமது மாவட்டத்தின் கீரிப்பாறை - வீரபுலி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள வெள்ளாம்பி மலையில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது.
இந்த ஆய்வில் நம் சகோதரி வெள்ளாம்பி மலையில் உள்ள 504 மலர்தாவரங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
இதில் 340 தாவரங்கள் பழங்குடியின மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பதைக் கண்டறிந்துள்ளார். அவை நாட்டு மருத்துவம், சித்தா , மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ முறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை நிரூபித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அவரது இறுதி வாய்மொழித் தேர்வில் பல முன்னணி ஆய்வாளர்க���் முன்னிலையில் தனது ஆய்வைச் சிறப்பாகச் சமர்ப்பித்த நிகழ்வில் நாமும் கலந்துகொண்டு வாழ்த்தி பாராட்டினோம்.
மக்களுக்கு எப்போதும் களத்தில் நிற்பதோடு கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சாதனை படைத்திருக்கும் நமது சகோதரிக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் இணையருக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களது இந்த ஆய்வுப் பணி நமது பாரம்பரிய மருத்துவத்திற்கும், இயற்கை பாதுகாப்புக்க��ம் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.
இனிவரும் உங்களது அறிவு��ார் பயணங்களும், எதிர்காலப் பணிகளும் சிறக்க வாழ்த்துகிறேன்! 🙏
ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் விளம்பரம் தேடி, அரசுப்பள்ளி மாணவியை குற்ற உணர்விற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளியிருக்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
https://t.co/1h0b3CN9hw
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன் உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போத��� அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும்.
கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே முடியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வல��. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சி��்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது?
கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், இன்றைக்கு முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்த��ொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது, தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத���தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனித���ேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல.
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம��� செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, ��ரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
குமரி மண்ணில் திணிக்கப்படும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் போதெல்லாம் பரப்பப்படும் ஒரு Propaganda Statement
'குமரி மாவட்டத்திற்கு வரவிருந்த இனயம் சரக்கு பெட்டக மாற்று முனையத்தை மாநிலம் விழிஞ்சத்திற்கு தாரைவார்த்துவிட்டோம்' என்பது.
பல ஆண்டுகளாக பரப்பப்படும் ஒரு அடிப்படை புரிதலற்ற இந்த புரளிக்கு ஆதாரங்களுடன் பதில்.
முழு காணொளி
https://t.co/YDtWOJ4E1F
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி ஆரோக்கியபுரம் பகுதி நாம் தமிழர் நிர்வாகிகள் அந்தோனி குரூஸ் - குணசீலி இணையரின் அன்பு பிள்ளைகள் நிக்கில் ப்ரெனோ & நெப்ரிஸ் ப்ரெனான்சி இருவரின் முதல் திருவிருந்து நிகழ்வில் கலந்துகொண்டு பிள்ளைகளை வாழ்த்தி ���கிழ்ந்தோம்.
நாம் தமிழர் கட்சி களச்செயல்பாடுகளில் அந்தோனி குரூஸ் - குணசீலி இணையரின் பங்கு அளப்பரியது. குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சக பெண் அரசியல்வாதியாக சகோதரி குணசீலி அவர்களின் செயல்பாடுகளும் உடனிருப்பும் பேருதவியாக அமைந்திருந்தது.
குடும்பத்தினர் அனைவரும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@NaamTamilarOrg
இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
இசையில் உருவெடுத்த உலகின் முதல் தத்துவம்!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!
மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்! தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் துயரில் தவிக்கும் மனிதனை, உடைந்து கிடக்கும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உ��ையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் காற்றில் மிதந்தபடி, கைபிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
உலகிற்கே இன்னிசை புகட்டும் தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, அவருக்குள் ஊற்றெடுக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என இப்பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.
ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@ilaiyaraaja
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத���துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து உண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது.
அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு ���னியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நட���டிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல��வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத���துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களு���்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசி���் முயற்சிக்கு த��ிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர���ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமை��ளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், 'புதிய விடியல்' நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்��ங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அ��ுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அட��்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின��� பெரும்புகழ் போற்றுவோம்!
அண்ணன் யார் கார்த்தி என்று சொல்ல பின்னால் நான் இருந்து கேட்ட அந்த நொடியில் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கி எடுத்த படமிது..
என் தம்பிக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லி அவனை உச்சி முகர்ந்து பெருமையடைகிறேன்.. பிறந்த நாள் வாழ்த்துகள் @idumbaikarthi
திருவள்ளுவர் அறக்கட்டளை கன்னியாகுமரி முன்னெடுத்து நடத்திய இருபதாம் ஆண்டு குமரிமுனைத் திருக்குறள் திருவிழாவில் கலந்துகொண்டோம்.
இங்கு நடைபெற்ற திருக்குறள் முற்றோதுதல் நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் பங்கேற்று திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்தனர். திருக்குறளில் சாதனை ��ுரிந்த மாணவர்கள் திருக்குறள்களை ஓதினார்.
நிகழ்வின் முக்கிய விருந்தினராக அம்மா அற்புதம்மாள் கலந்துகொண்டார்.
இச்சிறப்பான நிகழ்வில் கலந்துகொண்டதில் பெருமிதமும் பெருமகிழ்வும் கொள்கிறேன். நிகழ்வை ஒருங்கிணைத்த திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அனைவருக்கு��், குறிப்பாக திரு தமிழ்.முகிலன், திரு.நற்றேவன் ஆகியோருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர்
#MariaJennifer #Manidhi #NaamTamilar