வளைகுடா போர் காட்சிகள் -
உடனடி போர் நிறுத்தம் - நிச்சயமாக சாத்தியமில்லை
அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தையின் அடிப்படையில�� போர் நிறுத்தம் -
சாத்தியமில்லை
கட்டாயப் போர் நிறுத்தம் (உலக நாடுகளின் அழுத்தம்) - சாத்தியமாகலாம்
ஈரானில் ஆட்சி மாற்றம் அமையும் வரை போர் -
அதிகபட்ச சாத்தியம்
ஒரு நாட்டிற்கு இறக்குமதி அபாயம் தான். நான் இந்தியாவை சொல்லவில்லை. துபாயைப் பார்ப்போம் -
☑️பணியாட்கள் இறக்குமதி
☑️ முதலீடுகள் இறக்குமதி
☑️சுற்றுலா வளர்ச்சி இறக்குமதி
☑️ரியல் எஸ்டேட் வளர்ச்சி இறக்குமதி
துபாயின் பொருளாதார வளர்ச்சி முழுதும் இறக்குமதியால். எல்லா நாடுகளுக்கும் பாடம்.
ஹார்முஸ் வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிக்க ஈரானின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு மி���ப் பெரிய பொருளாதார/வெளியுறவு வெற்றி. இரு எதிரிகளின்(ஈரான்/இஸ்ரேல்) நெருங்கிய நட்பாக இருக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய இந்தியா. அதிவேகப் பொருளாதாரமாக வளரும் இந்தியாவின் நட்பும் ஈரானுக்குத் தேவை
ஈரானின் வெளிப்படையான 200$ கச்சா எண்ணெய் மிரட்டல் அந்நாட்டின் பொருளாதாரப் போர் யுக்தியை காட்டுகிற���ு. தீவிர பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி, உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்து அதன் மூலம் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க நினைப்பது உலகப் பொருளாதாரத்தை தலை கீழாகப் புரட்டிப் போட்டுவிடும்
ஹார்மூஸ் பாதையில் இந்திய எண்ணெய் சரக்குக் கப்பல்களை ஈரான் இடையூறு செய்யாதது இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு கிடைத்த வெற்றி. நெருக்கடியான காலத்தில் நமது எரிசக்தித் தேவைகளுக்கு இந்த முயற்சி கைகொ���ுக்கும். நிரந்தரமான தீர்வு ஏற்படுமேயானால் இந்த நெருக்கடியிலிருந்து மீளலாம்.
விநியோக சங்கிலி மற்றும் உற்பத்தித் தடையால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறினால், இந்தியப் பொருளாதாரத்தில் -
பெட்ரோல் டீசல் விலை⬆️
விலைவாசி ⬆️
வட்டி விகிதம்⬆️
நிதிப் பற்றாக்குறை⬆️
நடப்புக் கணக்கு பற்றாக்குறை⬆️
ரூபாய்⬇️
வளர்ச்சி விகிதம் ⬇️
பங்குச் சந்தை ⬇️
��ந்நிய செலாவணி ⬇️
இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரக் குறியீடுகள் தற்போது -
வளர்ச்சி ⬆️
பணவீக்கம்⬆️
வட்டிவிகிதம்⬆️
ரூபாய்⬇️
அந்நிய செலாவணி↔️
வெளிநாட்டு முதலீடு⬆️
நிதிப் பற்றாக்குறை⬆️
நடப்புக் கணக்கு⬆️
பங்குச்சந்தை⬇️
மனோநிலை⬇️
உள்நாட்டு சூழல்⬆️
உலக சூழல்⬇️
⬆️சாதகம் ⬇️பாதகம் ↔️நடுநிலை
ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது டிரம்பின் குறிக்கோள். பொருளாதார அடிப்படையிலும் அதுவே சரி.தடைபட்ட உலக விநியோக சங்கிலியும் வளைகுடாவும் சீராக இயங்க ஈரானில் நிலையான ஆட்சி தேவை. அப்படி ஏற்பட்டால் ஈரானின் பொருளாதாரத் தடைகள் விலகி அந்நாட்டின் எண்ணெய் வெளிச்சந்தைக்கு வரும். விலை குறையும்.
ஈரானின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள வளைகுடா நாடுகள், குறிப்பாக அமீரகம். பல ஆண்டுகளாக உலகின் உயர்தர பொருளாதார மையமாக கட்டமைக்கப்பட்ட துபாய் பெரும் சரிவை சந்தித்து��்ளது. பாதுகாப்பில் வலுவான இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த பொருளாதார மையம் கட்டமைக்க இது ஒரு நல்வாய்ப்பு.
ஈரான் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிக்கு ஆட்சி மாற்றம் தான் தீர்வு. அங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அமெரிக்கா. ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நீங்கி, ஈரானின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வரும். அப்போது விலை குறைய வாய்ப்புகள் அதிகம். இந்தியாவிற்கும் சாதக��்.
அமெ��ிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ஈரான் மீதான தாக்குதலால்
✅தங்க விலைக்கு சாதகம்
❎பாதகம் - பங்குச் சந்தைகள் வீழ்ச்சி
❎கச்சா எண்ணெய் விலை உயர்வு
❎ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
❎குறுகிய காலத்தில் பொருளாதார பின்னடைவு
ஆட்சி மாற்றத்தில் பாதகங்கள் குறையும் வாய்ப்புகள் அதிகம்.
உலக சவால்களுக்கு மத்தியில் GDP குறியீட்டின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் அபாரமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. வ���ர்ச்சி மிக வலுவாக இருப்பதை இது உணர்த்துகிறது. வரும் காலத்தில் எந்த அளவுக்கு AI தொழில்நுட்பத்தை உள்வாங்கிப் பொருளாதார வளர்ச்சி பயணிக்கப் போகிறது என்பது தான் முக்கியம்.
வீழ்ச்சிக்கு லாபப் பதிவு மற்றும் கெவின் வார்ஷ்.
வலுவான தங்க விலை - கெவின் வார்ஷ், வலுவிழந்த $, கூடுதல் தேவை, நிலையற்ற உலக அரசியல்.
வலுவிழக்க - பலமான $, லாபப் பதிவு, சுதந்திர பெடெரல் ரிசர்வ், உலக அரசியலில் மாற்றம்
ஆனால் அடிப்படை விஷயங்கள் வலுவான தங்கத்திற்கு ஆதரவாக உள்ளன.
ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா செய்து கொண்ட சாமர்த்தியமான ஒப்பந்தம் வர்த்தக ஆயுதமாக மாறி, அமெரிக்காவின் இந்திய வரி/வர்த்தக நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியது. அமெரிக்காவின் நடவடிக்கையால், உலகின் மிக முக்கிய போட்டி நிறைந்த சந்தைகளான அமெரிக்கா/ஐரோப்பாவில் இந்தியாவின் ஆதிக்கம் பெருகும்.
துவக்கப் பொது வழங்கல் (IPO) திட்டங்களில் முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.ஒரு பங்கின் வ��ர்ச்சியை மதிப்பு(value) தான் தீர்மானிக்கும், மதிப்பீடு(valuation)அல்ல. மாறாக அபரிமிதமான மதிப்பீடு பங்கின் மதிப்பை குலைத்துவிடும். நீண்ட கால ரிட்டன்ஸ் வேண்டுவோர் கவனம் கொள்ளவேண்டும்.
ஜி எஸ் டி குறைப்பால் பத்தாண்டுகளில் இல்லாத வர்த்தகம் இந்த நவராத்திரியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்வது உள்நாட்டு நுகர்வு என்பது சிறப்பம்சம். டாரிஃப் போன்ற பல நெருக்கடிகளை தகர்க்க உள்நாட்டு நுகர்வு தான் தீர்வு.
ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் பொருளாதாரத்தில் பல கட்ட நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இன்ஷுரன்ஸ் திட்டங்களுக்கு 0% எனும் முடிவு காப்பீட்டு திட்டங்களை எளியோரிடமும் சென்று சேர்க்கும். மாற்றத்தால் உள்நாட்டு நுகர்வு அதிகரித்து பொருளாதாரத்தில் வளர்ச்சி விகிதம் கூட வாய்ப்புகள் அதிகம்.
Jumping into stock markets without experience or knowledge is like jumping into the sea to learn swimming. In stock investing, our behaviour & reaction decides our investment outcomes. Money is secondary & controlling/navigating the mind is primary. Successful investors do that.
நாம் முதலீடு செய்யுமுன் 5 விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.
முதலீட்டு -
☑️இலக்கு
☑️நோக்கம்
☑️காலம்
☑️ரிஸ்க் எடுக்கும் திறன்
☑️ரிட்டர்ன் எதிர்பார்ப்பு
இவைகளை அடிப்படையாகக் கொண்டு தான் முதலீட்டுத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அது தான் சரியான முதலீட்டு அணுகுமுறையாக இருக்கும்.