இவர் பெயர் கார்த்தி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐடிஐ பட��த்தவர் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து தன் எதிர்கால வாழ்க்கை கனவுகளுடன் வாழ்ந்தவர்
ஒரு நாள் இவர் தலையில் இடி விழுந்தது
ஒரு 17 வயது சிறுமி கர்ப்பமானதற்கு இவர் தான் காரணம் என்று அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்
நான் அந்த தவறு செய்யவில்லை என்று எவ்வளவோ மன்றாடியும் கார்த்தி போச்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
இவர் த��க்கு வக்கீல் வைத்துக் கொள்ளவில்லை
ஜாமீனுக்கும் முயற்சி செய்யவில்லை ��வ்வொரு முறை கோர்ட்டுக்கு வரும் போதும் நீதிபதியை பார்த்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என்பதை மட்டும் உறுதியாக சொன்னார்
அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது
நீதிபதி அந்த சிறுமி, அவள் குழந்தை, கார்த்தி மூன்று பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்
டி என் ஏ பரிசோதனை முடிவில் கார்த்தி அந்த குழந்தையின் தகப்பன் இல்லை என்பது உறுதியானது
இரண்டு ஆண்டுகள் சிறை வாசத்திற��கு பின் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்
உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கும்படி நீதிபதி போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு இந்த இளைஞருக்கு நஷ்டஈடு வழங்கி அவர் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு பணி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாக சைதன்யா சமந்தா நடித்த மஜிலி என்கிற தெலுங்கு திரைப்படம். அதில் ���ாக சைதன்யா ஒரு கிரிக்கெட் வீரர். வாழ்க்கையில் பல சம்பவங்களுக்குப் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு அவருடைய கோச்சை மீட் செய்வார்.
அப்போது அந்த கோச் சொல்வார், முதல் மேட்ச் எங்க டீமுக்கு நீ ஆடுனப்ப எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் அடிச்சியே. அதை இன்னும் என்னால மறக்க முடியல என்பார்.
யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒவ்வொரு peak சம்பவம் இருக்கும். அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவரை அறிந்தவர்களுக்கு அந்த சம்பவத்தின் மூலம்தான் அவர் மீண்டும் மீண்டும் அறியப்படுவார்.
பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மார்க் வாங்கியவனை, அந்த செட்டில் எல்லோருமே ஞாபகம் வைத்திருப்பார்கள். அவர் பின்னாள���ல் ஐஏஎஸ் ஆனாலும் சரி, சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் சரி அந்த செட்டில் உள்ள எல்லோருக்குமே அவன் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அவ்வளவுதான். எத்தனை ஆண்டு காலமானாலும் சரி. அந்த செட்டில் உள்ளவர்கள் பேரன்பேத்தி எடுத்துவிட்டாலும் சரி, அவன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்கிற அடையாளத்துடனே நினைக்கப்படுவான்.
அதுபோல சசிகுமாரின் peak சம்பவம் சுப்ரமணியபுரம். 1980 என்கிற கார்டு வந்தவுடன், கஞ்சா கருப்பு எண்��தின் மதுரை வீதிகளில் நடக்கத் துவங்குவார். அவர் நடக்கவில்லை நம்மை கைப்பிடித்து அந்த களத்திற்குள் இழுத்துச் சென்று விடுவார். அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒரு மாயாஜாலம். எத்தனை உயிர்ப்பான கேரக்டர்கள். சசிகுமாரின் நண்பர்கள் சித்தன் சவுண்ட் சர்வீஸ் மொக்கச்சாமி சமுத்திரக்கனியின் அண்ணன்கள், தோட்டம் கொண்ட ராசாவே, சிறு பொன்மணி அசையும் பாடல்களை பிளேஸ் செய்த விதம்.
இந்த மண்ணு மணக்குற கண்கள் இரண்டால் பாடல்கள் என.
படத்தின் முதல் பாதி முடிந்து வெளியே வந்ததும் தியேட்டர் கேண்டினில் கண��கள் கோன் ஐஸ் மெஷினையும், டீ கேன் முறுக்கு கடலை மிட்டாய் உள்ள ஸ்டாலையும் தேடின. ஆனால் அது 2008. நாம் 1980ல் இல்லை 1980 காலகட்ட படத்தை பார்த்திருக்கிறோம் என்று உணர ஒரு கணம் ஆனது.
இரண்டாம் பகுதியில் அப்படி ஒரு டென்ஷன்.
சுப்பிரமணியபுரத்தை துரோகத்தின் காவியம் என்று சொல்லலாம்.
படம் முழுவதும் எத்தனை எத்தனை துரோகங்கள்.
முழுக்க முழுக்க நம்பியவர்களும் காதலித்தவர்களுமே துரோகம் செய்கிறார்கள்.
படத்தின் திருப்புமுனையாக ஒரு ச���ன் வரும். அதுதான் படத்தின் அத்தனை துரோகங்களையும் தாங்கி நிற்பது. தன்னுடைய பதவி போய்விட்டது என்றவுடன் அவர் சத்தம் போடும் பொழுது அவர் மனைவி வெளி கோபத்தை ஏன் வீட்டில் காட்டுகிறீர்கள். அதுதான் பதவி போயிருச்சு ஏன் கத்துகிறீர்கள் என்பார்.
அந்த ஒரு சொல் அடுத்து நடக்கும் அத்தனை சம்பவங்களுக்கும் துரோகங்களுக்கும் கொலைகளுக்கும் காரணமாக இருக்கும்.
ஒரே ஒரு சொல் ஒருவரின் கோபம் எத்தன��� சாம்ராஜ்யங்களையோ வீத்தி இருக்கிறது. அதுபோல ஒரு தெருவில் இருக்கும் பலரின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவது அந்த ஒரு கோபம்.
காதலி கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பது போல
இல்லத்தரசியின் ஒரு கோபம், ஒருவனுடைய சுயமரியாதையை சீண்டி விட்டு அவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. ஆனால் அதை இலகுவாக கடந்திருந்தால்....
சசிகுமாரின் மாஸ்டர் பீஸ். ���மிழ் சினிமாவின் பாதையை மாற்றிய ஒரு திரைப்படம்.
எத்தனை சினிமாக்களை சசிகுமார் கொடுத்தாலும், அவர் சுப்பிரமணியபுரம் சசிகுமார் தான்.