வருங்காலங்களில் இந்த சிக்கல் வரும் போது நமது முன்னோர்கள் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்ற வருங்கால தலைமுறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம்!
செந்தமிழன் சீமான்
ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்தோம்..
பாஜக ஆள் என்றான்..
ஆளுங்கட்சியாக இருக்கும் தவெகவை எதிர்க்கிறோம்..
திமுக ஆள் என்கிறான்..
யாரை எதிர்ப்பது என்பதில் எங்களிடம் மாற்றமில்லை.. எங்களை ஆதரிப்பதில் மாற்றம் வந்தவர்களுக்கு தான் எதிர்ப்பில் மாற்றம் வந்திருக்கிறது..
இந்த நேர்மையான மதிப்பு மிக்க வேட்பாளர் வெற்றி பெற்றார்
எதிர்த்து நின்ற பல ஆயிரம் கோடிகளை திருடி சம்பாதித்த சீமான் தோற்றார் 😔😔
சரியான தலைவர்கள் வருகின்றனர்,
மக்கள் தான் தவறா இருக்கோம்
எவ்ளோ மலிவான மட்டமான விளம்பர கவர்ச்சியால் அடிமை பட்டிருக்கிறோம் 😔😔
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல.
அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் மாண்புமிகு நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?
என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும்.
மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.
சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@arulmozhi_25 தவெக கட்சியை அகற்றுவது நிச்சயம் நடக்கும், ஆனால் திருட்டு திமுக கட்சி இனி கடைசிவரை கூப்பில் தான் கிடக்கும் , இவரை எல்லாம் தலைவர் என்று சொல்லுவதே அரசியலில் அசிங்கம் 🤦♂️🤦♂️
ஓர் எதிர்க்கட்சித் தலைவராக நல்ல முறையில் செயல்பட வேண்டிய ஒருவர் இப்படிப்பட்ட முறையில் பேசுவது அவருக்கே எதிராகத்தான் போய் முடியும். கூடுதலாக அவரது நோக்கங்கள் தானாக அடிபட்டு போகும்.
இரட்டை அர்த்த பேச்சுகளை பேச உதயநிதி அவர்கள் என்ன மேடைப் பேச்சாளரா? எதிர்க்கட்சித் தலைவர் !
தன் பதவிக்குரிய கண்ணியத்தை பின்பற்றாத போது யாராக இருந்தாலும் பின்வாங்குவது நல்லது.
முதல்வராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி!
அருவருப்பான பேச்சுகள் வார்த்தைகள் மோசமான முன்னுதாரணம் ! கண்டனங்கள் !
யோவ் H வினோத் மாமே நிஜமாவே நீ ஒரு தீர்க்கதரிசி தான் யா 😳
1. கரூர் சம்பவம் 😱
2. விஜய்க்கு Weight ஏத்த என்ன வழி 😳
3. விஜய் தாக்கப்பட்டார் 😹
முரட்டு ஆள் தாம்லே நீ 😂🔥
கொல்லிமலையையும் அதைச் சுற்றி அமைந்த வளப்பூர், வாழவந்தி, திண்ணனூர், சேலூர், அரியூர், குண்டூர், தேவானூர், குண்டுனி, ஆலந்தூர், திருப்புலி, எடப்புலி, சித்தூர், பைல், பெரக்கரை உள்ளிட்ட 14 மலைநாடுகளை அரசாண்ட மாவீரன்...!
புறநானூறு, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட
சங்கத்தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழும் பெருவீரன்..!
இல்லை என்று வந்த புலவர்களுக்கும், பாணர்களுக்கும், இசைவாணர்களுக்கும்
அள்ளிக்கொடுத்து தமிழ் மண்ணில் நிலைத்த வள்ளல்..!
விற்போரில் சிறந்து விளங்கிய
வீரத்தமிழ்மகன் வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம்!
மானமும், வீரமும் உயிரென வாழ்ந்து, தாய் மண் காக்க தன்னுயிர் ஈந்த தன்மானத்தமிழன்..!
சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என வீரக்கலைகள் யாவிலும் வெற்றி வாகை சூடிய தீரன்..!
மதம் கடந்து, சாதி கடந்து தாயக விடுதலைக்கு தமிழர் ஓர்மை படை கட்டிய தமிழ்த்தேசியப் பேரொளி..!
பவானி, சென்னிமலை, அரச்சலூர் என்று ஆங்கிலேயே பெரும்படையை
மூன்று முறை தோற்கடித்து வெருண்டோட செய்த மாவீரன்..!
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் எரிமலையாய் வெடித்தெழுந்த விடுதலைப்போராளி..!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன்
தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!