தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல!
இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் சிவா திலீபன் அவர்களையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. @Thiruja2009 அவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும்,
“பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!
தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!
எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்கள் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
'தமிழ்த்தேசியப்பெருவிழா 2026'
மாரியம்மனோ, முருகனோ, அய்யனாரோ, ஆசிவகமோ, சேயோன்-மாயோன் என எந்த நம்பிக்கையாக இருந்தாலும், பெளத்தமோ, சமணமோ, வைதீகமோ, சைவமோ, வைணவமோ, இசுலாமோ, கிருத்துவமோ என எம்மதமாக அல்லது மார்க்கமாக இருந்தாலும் அவை தமிழர் மீது உருவாக்கிய தாக்கங்கள் இன்றளவும் நம்முடைய சமகால அரசியல்-சமூக வாழ்வை பாதிக்கின்றன.
இவற்றில் எது வாழ்ந்தது? எது வீழ்ந்தது? என நாம் அறிய வேண்டும்.
எது உதவியது? எது சுரண்டியது? என நாம் அறிந்தாக வேண்டும்.
இன்று எது வருகிறது? எது விரட்டப்படுகிறது? என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.
எது நம்பிக்கை? எது மூடநம்பிக்கை? என தெளிந்தாக வேண்டும்.
இவற்றை குறித்த வரலாறை தெளிவுபடுத்த தொல்லியல், மானுடவியல், பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் உரையாற்ற மாநாட்டை கூட்டியிருக்கிறோம்.
மூன்றாம் மாநாடாக அறிவர் மாநாடு மார்ச் 07, 08ம் தேதிகளில் கூடுகிறது.
தமிழர் நிலத்தில் நிலவிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் குறித்து அறிஞர் அவையம் கூடுகிறது. 2026ம் ஆண்டின் தமிழ்த்தேசியப் பெருவிழா வரும் வாரத்தில் இரு நாட்களாக நடக்க இருக்கிறது. இதற்கு முன் நடந்த இரண்டு மாநாடுகளின் தொடர்ச்சியாக இம்மாநாடு செழுமையாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் நாகரீகம் குறித்து 2024ல் புகழ்பெற்ற அறிஞர்களைக் கொண்டு மாநாடு நடத்தியது மே பதினேழு இயக்கம். இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டில் புகழ்பெற்ற தொல்லியல், வரலாறு, பண்பாட்டு, மானுடவியல், மொழியியல், கலை, படைப்புத்துறை அறிஞர்கள், பேராசிரியர்கள் என ஆளுமைகள் பங்கெடுத்தனர். தமிழரின் மருத்துவம், இசை, வேளாண்மை, அழகியல், பொருளாதாரம், நாடகம், இலக்கியம், மெய்யியல், மொழியியல், சூழலியல் என பல துறைகள் சார்ந்து உரை நிகழ்த்தினர். காலை முதல் இரவு வரையாக 2024ல் நடந்த முதல் அறிவர் மாநாடு, அறிஞர் அவையமாக எழுச்சியுடன் நடந்தது. அறிவுத்திருவிழாவாக இருநாள் நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர். விருது விழா, உரைவீச்சு என தமிழ்த்தேசியப்பெருவிழாவாக அது நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் சமகாலத்தில் இல்லாத அறிவுத் திருவிழாவாக மாறியது.
2025ம் ஆண்டும் இரண்டாம் அறிவர் மாநாட்டை நடத்தினோம். இம்மாநாட்டில் 'தமிழரின் அரசியல் வரலாறு' கருப்பொருளாக முன்னிலைப்படுத்தப்பட்டது. சங்க காலம் முதல், மூவேந்தர் ஆட்சிகள், பிற்கால ஆட்சிகள், காலனிய காலம் என வரலாறை பேசியது இம்மாநாடு. அரசர்களின் வரலாறாக மட்டுமல்லாமல் வெகுமக்கள் வரலாறு பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது. சமூக-அரசியலோடு பின்னிப்பிணைந்த சமயங்கள் வரலாறும் பேசப்பட்டது. ஆரிய வைதீகத்தின் மீதான தமிழர்களின் எதிர்வினைகளை கோடிட்டுக் காட்டியது. வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலும், சங்ககாலம் முதல் பெரியார் வரையிலான வைதீக எதிர்ப்பு போராட்ட வரலாறு விளக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் மிக விரிவான உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்த்தேசிய அரசியலின் தவிர்க்க இயலா தேவையை இம்மாநாடுகள் மூலமாக மே17 இயக்கம் எடுத்துரைக்கிறது.
தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அறிவை கருவியாய் கைப்பிடிக்க இம்மாநாடு பேருதவியாய் விளங்கும்.
தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டோர், தமிழினத்தின் மீது பற்றுகொண்டோரை அன்புடன் அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கத்தினரின் ஆறுமாத கால உழைப்பின் விளைச்சல், 17 ஆண்டுகால போராட்டத்தின் விதை இம்மாநாடு.
அறிவாயுதம் எந்த வாரீர்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
01-03-2026
(குறிப்பு)
மாநாட்டு தலைப்புகள் விவரம் இரண்டு பதிவுகளாக உள்ளன.
#Watch | "இது மாணவர் போற்றும் மாடல்.. சமூக நீதி மாடல்.. உலகம் திரும்பி பார்க்கும் மாடல்.. இதுதான் திராவிட மாடல்!"
திமுகவின் பவள விழா பாடல் வெளியானது!
#SunNews | #DMK75 | #CMMKStalin
Expressing with much gratitude from our rap band (Dudez in Madras), we are delighted to appear on the screen space with the legend இசை புயல் @arrahman Sir Much Love and Respect.