A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்தி��ும் உள்ளத்திலும் ஒரு நிரந்த��� இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ���னால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக ��ங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத��தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அ��ு எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
#NationalDoctorsDay
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல���லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் த��்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் ���ூப்பிய நன்றி Anna @actorvijay
@TVKVijayHQ @TVKHQITWingOffl
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
Thank you, Thiru Vijay, for your warm wishes.
We remain united in our commitment to the Constitution and to strengthening our democracy - and together, we will keep working for the welfare, dignity, and aspirations of the people of Tamil Nadu.
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவ���் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay