வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டறிந்தார்.
தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (23.11.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், காஞ்சிபுரம், ஒரகடத்தில் உள்ள PSP மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026–27 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்காக நடைபெற்ற White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.!
மருத்துவப் பணியில் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.J.முனிரத்தினம் அவர்கள், மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் தலைவர் திரு.P.சுப்பிரமணி அவர்கள், துணைத் தலைவர் திரு.S.பிரியதர்ஷன் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் S.ஸ்ரீனிவாசன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (23.11.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், காஞ்சிபுரம், ஒரகடத்தில் உள்ள PSP மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026–27 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்காக நடைபெற்ற White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.!
மருத்துவப் பணியில் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.J.முனிரத்தினம் அவர்கள், மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் தலைவர் திரு.P.சுப்பிரமணி அவர்கள், துணைத் தலைவர் திரு.S.பிரியதர்ஷன் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் S.ஸ்ரீனிவாசன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (22.11.2026) ஞாயிற்றுக்கிழமை,
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு வருகைபுரிந்த 500 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.!
இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு உணவு வழங்கிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், பக்தர்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (19.11.2026) வியாழக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், சென்னை அசோக் நகர், 11-வது அவென்யூவில், மாயா நர்சிங் ஹோம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்டுள்ள MAYA GERIATRICS & CRITICAL CARE HOSPITAL மருத்துவமனையின் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராகபங்கேற்று மருத்துவமனையைத் திறந்து வைத்து சிறப்பித்தார்.!
இந்நிகழ்வில் மாண்புமிகு திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.S.பாலமுருகன் அவர்கள், மாண்புமிகு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தியாகராஜன் அவர்கள், மாண்புமிகு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.D.சண்முகன் அவர்கள், மாண்புமிகு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.PLA ஜெகநாத் மிஸ்ரா அவர்கள், தியாகராய நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கருணாநிதி அவர்கள், மருத்துவமனையின் நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (18.11.2026) புதன்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand அவர்கள், கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டம், காவிரி நடுவர் மன்றத்தின் 05.02.2007 தேதியிட்ட இறுதி தீர்ப்புக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்புக்கும் முரணானது. மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 27.05.2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், மேகதாது திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
19.06.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2025 டிசம்பரில் வெளியிட்ட காவிரி நீர்ப்பாசன திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் 03.08.2026 அன்று ரிட் மனுவையும் தாக்கல் செய்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை அல்லது நீரை திசைதிருப்பும் திட்டங்களை செயல்படுத்த, காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிய சட்டப்பூர்வ ஒப்புதலும் அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அரசு மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக முன்னெடுத்து செல்ல முயற்சித்து வருவது கவலைக்குரியதாகும்.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுடன் இணைந்து மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
அக்கடிதத்தில்,
1. கூட்டாட்சி தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் (CWC) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.
2. காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும், காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
3. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளை பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
என வலியுறுத்தியுள்ள மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்கள், இக்கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விரிவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் நேற்று (16.11.2026) திங்கட்கிழமை நடைபெற்ற சோனியா காந்தி அவர்களின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி அவர்கள், கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அந்த பெண்ணுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்தார்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் அன்புடன் நலம் விசாரித்தார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand அவர்களும், மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்களும் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (14.11.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand அவர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநில மாநாட்டில் கலந்து கொண்டார்.!
இம்மாநாட்டில் ஊராட்சி செயலாளர்களின் பணிச்சூழல், நலன் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர்களைத் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் (TAPS) திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தின் மூலம் வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்குத் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், உங்களது அனைத்து கோரிக்கைகளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் MP அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் A.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர் V.வேல்முருகன் அவர்கள், AITUC தேசிய செயலாளர் வகிதா நிஜாம் அவர்கள், TNGEU மாநிலத் தலைவர் இரா. சத்தியமூர்த்தி அவர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாநிலப் பொதுச்செயலாளர் த.லெனின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (14.11.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!
இந்நிகழ்வில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்கள், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் R.குமார் அவர்கள், மாண்புமிகு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.M.ஹரிஷ் அவர்கள், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.அருள் பிரகாசம் அவர்கள், மாண்புமிகு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.டாக்டர் T.அருண்குமார் அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் MLA அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கேக் வழங்கி, குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. @BussyAnand , MLA அவர்கள், தியாகராய நகர் CIT நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மழைநீர் சேகரிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, தியாகராய நகர் தொகுதியில் முதற்கட்டமாக 25 விளையாட்டு மைதானங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 15 அடி ஆழம் வரை அமைக்கப்படும் இத்தொட்டிகள் மூலம் மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாப்பதுடன், எதிர்கால குடிநீர்த் தேவைக்கும் இத்திட்டம் பெரிதும் உதவும்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அப்பகுதி மக்களைச் சந்தித்த அமைச்சர் அவர்களிடம், CIT நகர் விளையாட்டு மைதானத்தில் போதிய மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரவும், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவற்றை விரைவில் சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. A. விஜய் அன்பன் கல்லாணை அவர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி அரசு அலுவலர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் MLA அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தியாகராய நகர் தொகுதிக்கு உட்பட்ட 132-வது வட்டம், ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கேக் வழங்கி, குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.!
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளிடையே உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.A. விஜய் அன்பன் கல்லாணை அவர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி, மகளிர் அணியினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தியாகராய நகர் தொகுதிக்கு உட்பட்ட 132-வது வட்டம், ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.!
இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடி, அவர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்றதுடன், குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.A.விஜய் அன்பன் கல்லாணை அவர்கள், மாண்புமிகு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.D.சண்முகன் அவர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி, மகளிர் அணி மற்றும் கழகத் தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (12.11.2026) வியாழக்கிழமை,
திருச்சியில் இன்று மற்றும் நாளை (12.11.2026 மற்றும் 13.11.2026) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் மிஷன் மண்டல மாநாட்டில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.!
இம்மாநாட்டில் மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் பேசியபோது, "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாக்கப்பட்ட, தரமான குடிநீரை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 1.25 கோடி ஊரக வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் நோக்கில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் 21,258 தனி கிராமக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 1.86 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டங்களுக்காக ரூ.18,123 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒன்றிய அரசின் பங்காக ரூ.9,025 கோடியும், தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.9,097 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1.25 கோடி ஊரக வீடுகளில் இதுவரை 1.15 கோடி வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 9,398 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஊராட்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம், நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் குளோரின் கலந்த சுத்தமான குடிநீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மாதத்திற்கு இருமுறை சுத்தம் செய்யப்படுவதுடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக குடிநீர் ஆதாரங்களின் தரமும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து கண்காணித்து பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில், ‘ஊராட்சி மணி’ கட்டணமில்லா தொலைபேசி சேவை (155340), ‘புனல்’ இணையதளம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் விநியோகக் கண்காணிப்புச் செயலி ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2028 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் 02.06.2026 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான அளவில் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்" என்று மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (12.11.2026) வியாழக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.!
கடந்த 2022-ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, முக்கொம்பு மேலணையில் அமைந்துள்ள காவிரி கதவணை பலத்த சேதமடைந்தது. இதனைச் சீரமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026–2027-ஆம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது, முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று முக்கொம்பு மேலணைக்கு நேரில் சென்ற மாண்புமிகு அமைச்சர் அவர்கள், வெள்ளப்பெருக்கின்போது சேதமடைந்த காவிரி கதவணையை பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலை மற்றும் புனரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், காவிரி கதவணையைப் புனரமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கும் வகையில், இன்னும் 15 தினங்களுக்குள் உரிய அரசாணை பெற்றுப் பணிகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
காவிரி ஆற்றின் நீர்மேலாண்மை, அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காவிரி கதவணை புனரமைப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.ரா.கதிரவன் அவர்கள், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (11.11.2026) புதன்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், சென்னை ECR-ல் நடைபெற்ற பிரவீன் ராஜ் - ஐஷ்வர்யா அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.V.சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.M.விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. K.தென்னரசு அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.J.முகமது பர்வேஸ் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற அரசு தலைமை கொறடா திரு.R.சபரிநாதன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 05.11.2026 வியாழக்கிழமை, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிக் கட்டடத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள் திறந்து வைத்தார்.!
அப்போது, பள்ளியில் உள்ள கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதை அறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. A.ராஜ்மோகன் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றார். பின்பு மாணவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து, கழிவறைகளை விரைவில் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கையின் காரணமாக, தற்போது பள்ளியின் கழிவறைகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. கழிவறைகளுக்குப் புதிய கதவுகள் பொருத்தப்பட்டு, புதிய குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுநீர் கழிப்பிட வசதிகளும் முறையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கோரிக்கையை நேரில் கேட்டறிந்து, அதற்கு உடனடியாகத் தீர்வு கண்ட அமைச்சர் அவர்களின் இந்த நடவடிக்கை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @BussyAnand MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழக சென்னை தெற்கு (வடக்கு) மாவட்ட வட்டச் செயலாளர் திரு. P. காளிதாஸ் அவர்களின் அறுவை சிகிச்சை மருத்துவச் செலவிற்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து ரூ.40,000 நிதியுதவியாக வழங்கினார்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள திரு. P. காளிதாஸ் அவர்களுக்கு மருத்துவச் செலவுகளுக்காக நிதியுதவி தேவைப்பட்ட நிலையில், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்களின் உதவியுடன் மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மருத்துவ உதவி கோரினார். அவரது நிலையை அறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், உடனடியாக உதவ முன்வந்து தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து ரூ.40,000 தொகையை வழங்கி மருத்துவச் சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்தார்.