இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அ��ருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். இதன் அடிப்படையில், நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவில் கொண்டு, சாதி, மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம்.
அன்பு, ஈகை, மத நல்லிணக்கம், மனித நேயம், ஆகிய பண்புகள் நிலைத்து நிற்க வேண்டும்; எல்லோர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவ���த்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான தளபதி திரு மு.க. ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்து, எனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் மே���்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோன்று, எனது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணித் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சருமான இளைய தளபதி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்; தேர்தல் பணியாற்றிய தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. தங்கத் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும்; மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; நகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; சார்பு அணி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், 'கருமமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப, ஓயாமல் அல்லும் பகலும் அயராது உழைத்த திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகளுக்கும்; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும்; நிர்வாகிகளுக்கும்; தொண்டர்களுக்கும்; என்னை வெற்றி பெறச் செய்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது கோடானு கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் நாளாகவும், தொழிலாளர்களின் வெற்றிகளை நினைவுகூரும் நாளாகவும் ‘மே தின’ திருநாள் விளங்குகிறது.
நம் நாடு சிறந்த கட்டமைப்பினை இன்றைக்கு பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணமாக விளங்குபவர்கள் தொழிலாளர்கள். உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் ‘மே தின’ நன்னாளில் அனைத்து தொழிலாளர் பெருமக்களுக்கும் எனது ‘மே தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெற எனது நல்வாழ்த்துகள்.
நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போ��்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து மகத்தான வாய்ப்பு அளித்து, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நான் வெற்றி பெற உறுதுணையாக இருந்து, தேர்தல் பரப்புரை ஆற்றி, உற்சாகம் ஊட்டிய கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி சிவா @tiruchisiva அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் @ThangaTamilselv அவர்களுக்கும், களத்தில் அயராது உழைத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்ப���க்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், நமது கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதளப் போராளிகள், தன்னார்வலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் எனக்கு வாக்களித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்��� நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்!
தமிழ்நாடு வெல்லும்!
நாம் வெல்வோம் ஒன்றாக!
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #வெல்வோம்இருநூறு_படைப்போம்வரலாறு #CMMKStalin #DMKfor2026
இன்று (17.04.2026) போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுள���், ஆண்டிப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக்காக வருகை தரும் தமிழ்நாடு முதல்வர், மதிப்பிற்குரிய திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
#ஸ்டாலின்_தொடரும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
#வெல்வோம்_நிச்சயம்
#DMKfor2026 #dmk4tn
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று (16.04.2026) போடிநாயக்கனூர் பகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முன்னணி கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவு கோரி, கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் @udhay_stalin அவர்கள் வருகை தந்து தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
டெலிமிடேஷன் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்களிடம் நிலவும் குழப்பங்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியதுடன், மாநில உரிமைகளை பாதுகாக்கும் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். @arivalayam
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #வெல்வோம்இருநூறு_படைப்போம்வரலாறு #CMMKStalin #DMKfor2026 #DMK4TN
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் மேற்கு ஒன்றியத்தின் முந்தல், முந்தல் காலணி, கரட்டுப்பட்டி, தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, மணியம்பட்டி, சூலப்புரம், இராசிங்காபுரம், மல்லிங்காபுரம், பி.நாகலாபுரம், கெஞ்சம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். இந்நிகழ்வில், போடிநாயக்கனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. இலட்சுமணன் அவர்கள், போடிநாயக்கனூர் ஒன்றியம் ���ிரு. பி.பி. குருமணி அவர்கள், திரு. எம்.சி. சுந்தர்ராஜ் அவர்கள், திரு. செல்வகணபதி அவர்கள், மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் திருமதி. பிரீத்தா நடேசன் அவர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். @arivalayam #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வர���ாறு #DMKfor2026 #cmmkstalin4tn