இன்று
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் படாளம் ஊராட்சி புலிப்புரக் கோயில் மக்களிடம்
வெற்றி வாக்குகளை சேகரிக்க.
இன்று
சோழ���ங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் துரைப்பாக்கம் அருகில் புதிய சங்கீதா உணவகம் திறப்பு விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. P.வெங்கட்ரமணன்MLA அவர்களும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
*திரு.ECR P.சரவணன்MLA* அவர்களும்
இன்று
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் படாளம் ஊராட்சி செய்யூர் மெயின் ரோடு,பெரிய தெரு, மக்களிடம்
வெற்றி வாக்குகளை சேகரிக்க.
தாய் மாமன் த��்க மோதிரம் வழங்கும் திட்டம்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கக வருகை தரும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்
. இன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்��ளை ஆதரித்து, மதுராந்தகம் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட படாளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வெற்றி வாக்குகளை சேகரிக்கும் பணியில்,
இன்று
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்ப���ளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் மத்திய ஒன்றியம் படாளம் ஊராட்சி மக்களிடம்
வெற்றி வாக்குகளை சேகரிக்க
இன்று
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து தீட்டாளபுரம் ஊராட்சி மக்களிடம்
வெற்றி வாக்குகளை சேகரிக்க
வரலாற்று சாதனை படைத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி C. ஜோசப் விஜய�� அண்ணா அவர்களின் நல்லாசியுடன்
மாண்புமிகு திரு N.ஆனந்த் MLA
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
கழகப் பொதுச் செயலாளர்
அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், சோழிங்கநல்லூர் மக்களின் பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துரைக்க வாய்ப்பளித்த பேரவைத் தலைவர் அவர்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. ECR P. சரவணன் நன்றி தெரிவித்தார்.
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (02.07.2026) வியாழக்கிழமை,
*மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA* அவர்கள், சென்னை OMR சாலையில் அமைந்துள்ள, *சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை* குத்து விளக்��ு
*தமிழக வெற்றிக் கழகத்தின்*
தலைவர் *தளபதி* அவர்களின் நல்லசியுடன்
*ஜூலை18ல்* *பிறந்தநாள்*
விழா காணும் கழகத்தின்
பொதுச் செயலாளர்
*N.ஆனந்த��� அண்ணன்*
அவர்களுக்கு கொட்டிவாக்கம் 181வது மேற்கு வட்ட கழகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொ��்ளும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்!
திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்பட���ச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமு��ல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை. ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்த��்கது.
மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?
படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தா��் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா?
மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது.
தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்.
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிரு��்பது ஏற்கத்தக்கது இல்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலு���ைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?
ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்��ாக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.
சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்��ுக் கொள்கிறேன்.
யூட்யூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். ���தை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் ���திர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.