பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநா���னுக்கு கண்டனம் கழக துணைப் பொதுச்செயலாளர் - முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உ���ர்கல்வித் துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு.விஸ்வநாதன் “ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.
’ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@keprakashdmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
அமைச்சரவை பதவியேற்பு விழா – வந்ததேமாதரம் பாடலுக்கு முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர்ந்து அவமரியாதை! கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு ��ள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான திரு. கே.ராஜன் அவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற��ன்.
திரைத்துறையின் முன்னேற்றத்திற்காகவும் சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் எப்போதும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்தவர் ராஜன் அவர்கள். திரைப்பணியோடு ��ல்விப் பணியும் ஆற்றியவர். தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழிலேயே தலைப்பு வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். தனிப்பட்ட முறையில் என்மீது மிகவும் அன்பு செலுத்திய ராஜன் அவர்கள், தனது பேச்சில் எப்போதும் திரைத்துறையின் அடித்தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தியே பேசுவார். அன்னாரை இழந்து வாடும் கலைத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கு���் இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமை கிடைக்கட்டும். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மா��்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநில�� பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள��
#DMK
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (07-05-2026) தீர்மானங்கள்
தீர்மானம் : 1
தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்��ோக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் - இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம் முதல் மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதனை மக்களும் உணர்ந்து நன்றி உணர்வோடு வாக்களித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு, திராவிட நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழிநடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழகம், என்றும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும் என்று ஒருமனதாக உறுதியேற்கிறோம்.
தீர்மானம் : 2
கழகத் தலைவருக்கு நன்றி
14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை தொடங்கியது முதல் ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியது வரை, இந்த அரை நூற��றாண்டு காலமாக தனது உண்மையான உழைப்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தாய்த் தமிழ்நாட்டையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார் கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கடந்த ஐந்தாண்டு காலம் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டிய ஆளுமைத் திறன் கொண்டவர் நம் தலைவர் அவர்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த���தினார்கள். சமூக வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணிக்கு வந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து பார்த்தது.
ஐந்தாண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள்; அத்தனை திட்டங்களும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியது அவரது உண்மையான உள்ளத்துக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
கோட்டையில் இருந்து மட்டுமல்ல, மக்களோடு மக்களாக இருந்து ஆட்சியை நடத்தினார்கள். தங்களில் ஒருவராகவே தமிழ்நாட்டு மக்கள் அவரைப் போற்றினார்கள். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். அவர் முகத்தைக் கண்டதும், மக்கள் முகங்கள் மலர்ந்தன. இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையும் உருவாக்கித் தந்தார் தலைவர் அவர்கள். இன்னும் நூறாண்டு காலத்துக்கு யாராலும் அசைக்க முடியாத பேரியக்கம் என்பதற்கான அடித்தளத்தை உறுதி செய்தார் தலைவர் அவர்கள்.
சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பு மலையளவு ஆகும். தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார் தலைவர் அவர்கள். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந��தும் மக்களோடு கலந்துரையாடினார்கள். இலட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் தலைவர் அவர்களின் சாதனை ஆகும்.
இத்தகைய பெருமைமிகு தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. "இப்படி ஒருவரைத் தலைவராகப் பெற என்ன தவம் செய்தோம்?" என்று பெருமைப்படும் வகையிலான நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு நம்மை வழிநடத்த வேண்டும் என்று கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் : 3
தலைவருக்கு அதிகாரம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும்.
இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய ���ேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்��� வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 4
காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்த���ய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பா��ு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டண���ப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட��டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு ��ன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
***
மக்கள் தீ��்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்
#DMK
நீதிக்கட்சியின் தந்தை, வெள்ளுடை வேந்தர் சர் பிட்���ி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 27). சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் தொடங்கி வைத்த முன்னோடி. இடஒதுக்கீடு மற்றும் திராவிட இயக்க வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதரை போற்றுவோம்!
#DMKITWINGArivagam
ஏப்ரல் 27: நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியா��ராயர் அவர்களின் பிறந்தநாள்.
மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர்.
பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்க���ம் #DravidianModel. அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளர்த்தெடுத்த தி.மு.கழக அரசு!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - ��ாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
பல்லடம், காங்கேயம், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்ப��ர்!
#VoteForDMK
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட���சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
தி.மு.கழக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய 10 இலட்சம் மடிக்கணனிகளை வழங்கி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது!
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்! 🌄
#VoteForDMK
இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள ��ிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!
#TiruchiWithDMK #VoteForDMK