ஊரின் ஒதுக்குப்புறங்களில் இருந்த மதுக்கடைகளை ஊரின் மையப் பகுதிகளுக்குள் கொண்டு வந்து, அதை “Social Drinking” என்ற பெயரில் இயல்பான ஒன்றாக மாற்றிய தருணத்திலேயே, நமது கலாச்சார மற்றும் சமூக மதிப்பு��ளில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு தொடங்கியது. இந்த போதை கலாச்சாரத்தை ஒழித்தே தீர வேண்டும்
டாஸ்மாக் சீர்திருத்தங்கள்
===========================
.
முதல்வர் விஜய் அவர்கள் இனறு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறார். அதில் டாஸ்மாக் சீர்திருத்தங்கள் சம்பந்தமான சில முக்கிய பேச்சு வார்த்தைகள் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது.
டாஸ்மாக் குறித்த எனது பரிந்துரை���ள்:
- மது கொள்முதல் முதல் சில்லரை விற்பனை வரை அனைத்துமே தனியார் வசம் போக வேண்டும்.
- விற்றல் வாங்கல் என்று எதுவுமே அரசின் வசம் இருக்கக் கூடாது. அதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஊழல்களுக்கும் முக்கிய காரணம்.
- டாஸ்மாக் பார்கள் மூடப்பட வேண்டும்.
- தற்போது தனியார் பார்கள் வைப்பதிலும், உணவகங்களில் மது விநியோகிப்பதிலும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை நீக்கப்பட வேண்டும்.
இவற்றில் இருந்தெல்லாம் அரசு விலகினால் டாஸ்மாக் துறைக்கு நிறைய நேரமும் அவகாசமும் கிடைக்கும். அதை வைத்துப் பின்வரும் விஷயங்களில் அரசு நேரடிக் கவனம் செலுத்த வேண்டும்:
- மலிவு விலை மது: குறைந்த விலையில் மதுவை விற்பதில் அரசு கவனம் செலுத்தலாம். துறை தனியார்மயமாகும் போது சந்தைப் பொருளாதார அணுகுமுறையில் தற்காலிகமாக விலை ஏற்றம் ஏற்படும். (பின்னர் போட்டி காரணமாக விலை குறையும்.) அதுவரை அரசு மலிவு விலையில் அரசு பிராண்டில் தரமான மதுவை தங்கள் சில்லரை விற்பனைக் கடைகளில் விற்கலாம்.
- போதை விடுதலை: போதை அடிமைத்தனம் குறித்த விழிப்புணர்வு, அதில் இருந்து விடுதலை அடையும் வழிமுறைகள் போன்றவை குறித்த விளம்பரங்கள், வீடியோக்கள் போன்றவை உருவாக்குதலில் கவனம் செலுத்த வேண்டும். போதை விடுத���ை மையங்கள் அமைத்து இலவசமாக சேவைகள் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களில் போதை அடிமைத்தனம்-சார் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். (Addiction Counsellors).
- மேல்வரி: போதை விடுதலைக்காக அரசு செய்யும் செலவுகளுக்காக போதை விடுதலை மேல்வரி என்று தனியாக விதிக்கலாம். Deaddiction Cess. ஒவ்வொரு பாட்டில் விற்பனையில் இருந்தும் இந்த மேல்வரி வசூலிக்கப்பட வேண்டும்.
இந்தப் பரிந்துரைகளை பல காலமாக எழுதி வருகிறேன். இவைதான் அரசு செய்ய வேண்டியவை. இவற்றில் கவனம் செலுத்தினாலே சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மது அடிமைத்தனம் பற்பல மடங்கு குறையும். மது அடிம���த்தனம் குறித்த பார்வையும் மக்களிடையே மாற்றம் காணும். அரசு கொள்முதல் மூலம் கட்சி-சார் மது ஆலைகளின் அட்டகாசம் முடிவுக்கு வரும். மதுவை உணர்வுபூர்வமாக அணுகும் முறை முடிவுக்கு வந்து அறிவியல் பூர்வமாக அணுகும் முறை பரவலாகும்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு என்பதால் ஊழல்களை தவிர்ப்பதில் முதல்வர் ஆர்வம் காட்டுகிறார் என்று கேள்விப்படுகிறேன். டாஸ்மாக் எனும் தமிழக அவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் முதல்வர் அதே ஆர்வத்தை காட்டுவார் என்று நம்புகிறேன்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
பலரும் கலைஞரைப்பற்றிப் பல விஷயங்கள் எழுதி விட்டார்கள். அவர் கொண்டு வந்த கட்டுமானங்கள், சமூக நீதி-சார்ந்து அவர் கொண்டு வந்த திட்டங்கள், மாநில சுயாட்சி-சார்ந்த கொள்கைகள், முன்னெடுப்புகள், ஊடகங்களுடன் அவருக்கு இருந்��� பிரத்தியேக உறவு என்று பல சாதனைகள் பட்டியலிடப்படுகி��்றன.
அவை எல்லாமே முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஆச்சரியப்பட்டு நான் பார்த்தது ஒன்று: கலைஞர் ஒரு நாத்திகர். அப்படித் தெளிவாக தன்னை அறிவித்துக் கொண்டு இயங்கிய ஒரே இந்திய அரசியல்வாதி அவர்தான் என்று நினைக்கிறேன்.
அதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கலாம்: The God Delusion எனும் புத்தகத்தில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒன்று சொல்வார். அமெரிக்காவில் செக்��ூலரிசம் வலுவாக இருக்கிறது, கருத்து சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்பதெல்லாம் சரி. ஆனால் அங்கே ஒரு அரசியல்வாதி தன்னை நாத்திகர் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு ஒரு கவுன்சில் தேர்தல் கூட ஜெயிக்க முடியாது. இறை நம்பிக்கை இல்லாத அரசியல்வாதிகள் கூட பெயரளவுக்கேனும் சர்ச் பக்கம் ஒரு எட்டு எட்டிப்பார்த்து விட்டு வந்தால்தான் வெற்றி சாத்தியம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங���கும் இதுதான் நிலவரம். ஸ்கேண்டிநேவிய நாடுகள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு.
இப்படி இருப்பதற்குக் காரணம் ஆத்திகர்கள் ரொ��்ப நல்லவர்கள், நாத்திகர்கள் கெட்டவர்கள் என்று மக்களிடையே நிலவும் பொதுப் பிம்பம். ஆயிரக்கணக்கான வருடங்களாக அம்புலிமாமா கும்பல்கள் நடத்தி வந்த வெற்றிகரமான பிரச்சாரத்தின் விளைவு.
சராசரி அமெரிக்கரை விட பற்பல மடங்கு மதம் சார்ந்து இயங்குபவர் சராசரி இந்தியர். ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி தன் இறை மறுப்பை வெளிப்படையாக அறிவித்து விட்டு தொடர்ந்து வாக்கு அரசியலில் இயங்க முடிந்திரு���்கிறது. தொடர்ந்து ஜெயித்து பல முறை முதல்வராகவும் இருக்க இயன்றிருக்கிறது.
இது எப்படி அவருக்கு சாத்தியமானது என்பது விளக்கவியலாத ஒரு ஆச்சரியம். இறை நம்பிக்கையற்ற நேரு கூட அது சார்ந்த தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசாமல்தான் இயங்கினார். இந்த விஷயத்திலும் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே ஒரு முன்னோடியாக கலைஞர் இருந்திருக்கிறார். அந்த ஆச்சரிய சாதனை தமிழ்நாட்டில் ஒர�� தமிழரால் நிகழ்த்தப்பட்டது என்பது கூடுதல் விசேஷம்.
மதங்களைத் தள்ளி வைத்து மனிதர்களை முன்நிறுத்திய அந்தக் கொள்கைதான் அவரது பிற அனைத்து சாதனைகளுக்கும் காரணம் என்று ஒரு சக நாத்திகனாக பெருமை கொள்கிறேன்.
கலைஞருக்கு வாழ்த்துகள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
People are generating $10K–$25k/month with Claude.
Not by being smarter. By using better prompts.
📘 The Ultimate Claude Prompt Handbook
1,500+ proven prompts for freelancing, content, copywriting, digital products, and online income. Plug and profit.
I usually Charge $250 but its FREE for 48 hrs.
Like + RT + Comment 'Claude' to get Free Copy.
Follow @ahuja_priyank so that I can DM you.
நான் ஒரு வெகுஜனம் என்ற முறையிலே, என் மனதில் பட்ட ஒரு சில விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெருமதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் தோற்கும் அளவிற்கு இந்த தேர்தலில் என்ன நடந்தது என்று எனக்கும் புரியவில்லை. #ஸ்டாலின்#skpkaruna
வெகுஜன மனநிலை
...
திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திருமிகு. ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத்துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன் அல்லது அந்தச் சுற்றுச்சூழலில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில், எனக்கும் சில தனிப்பட்ட கருத்துகள் உண்டு.
வெகுஜன மனநிலை என்று ஒன்று எப்பொழுதுமே இருக்கிறது. அந்த மனநிலையை யாரும் பிரச்சாரத்தாலோ அவதூறுக் கருத்துகளாலோ உருவாக்க முடியாது. ஆனால், ஒரு சிறிய செயல் அதனை உண்டாக்கக் கூடியது.
இன்று திரு. விஜய் அவர்கள் அரசியல் பொறுப்பேற்றிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய தன்மைக���கும், அன்றைய நாளில் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற காலத்தில் இருந்த நேர்மறையான அதிர்வலைகளுக்கும் (Positive vibes) நிறைய வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கிறேன்.
இப்பொழுது எல்லோருமே புதியவர்கள். என்ன செய்யப் போகிறார்கள்? ஏது செய்யப் போகிறார்கள்? யார் யார் அமைச்சர்கள்? அவர்கள் திட்டங்கள் என்ன? சாதிப்பார்களா, சாதிக்க மாட்டார்களா? போன்ற கேள்விகள் இருக்கின்றன. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள், ஊடகத்துறை என எல்லாமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அவருக்கு எதிரே இயங்குகின்றன. ஆனால், அன்றைய ஸ்டா���ின் அவர்களின் ஆட்சியில், அவர் பொறுப்பேற்ற அந்த முதல் மூன்று மாதங்களில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகவே,
உள்ளத்தைத் தொடும் விதமாக, உண்மையாக இருந்தன.
அவர் பதவியேற்றதும் தன் சிறுவயதில் இருந்து யாரெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் அவர் சந்தித்தது, மிகவும் சாதாரணமாக ஒரு முதலமைச்சருக்கு உண்டான தோரணை இல்லாமல் தன்னைக் காண வருபவர்களைத் தன் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பார்த்தது போன்ற நற்குணங்கள் அவரிடம் இருந்தன.
அது தொடர்ந்தது. தொடர்ந்து அவர் சிந்தித்துப் பல நற்பணித் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். நான் கூட நண்பர்களிடம், "திராவிட முன்னேற்றக் கழகம் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வரின் நலத்திட்டப் பணிகள்தான்" என்று சொல்வேன். அவர் 'நலத்திட்ட நாயகர்' என்று சிறப்பான அழியாத பெயர் பெற்றுவிட்டார்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா,
வெகுஜன மனநிலை என்பது செயல்களால் உண்டாகும் என்று!
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வெகுஜன மனநிலையிலிருந்துதான் நான் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எப்பொழுதுமே இருந்ததில்லை.
அந்தச் செயல்கள் என்னென்ன என்று அருமைத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் பட்சத்தில், அதற்கான விடை எளிதாக அவருக்குக் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
பெருந்தன்மையாக அவர் முன்வந்து, இந்தத் தோல்விக்குத் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் அவர்கள் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்!
"வெகுஜன மனநிலைக்கு எதிரான செயல்கள் அப்படி என்னதான் நடந்தது, நீயே சொல்லேன்" என்று நீங்கள் கேட்கலாம். அவற்றைச் சொல்வதால், ஒரு கலைஞனாக நா��் தேவையற்ற பகைக்கு ஆளாகக்கூடும்.
"பின் ஏன் இதை எழுதுகிறாய்?" என்று நீங்கள் கேட்பீர்கள்.
ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் கார் வைத்திருப்பதே ஆடம்பரம் என்று நினைக்கும் ஒரு நாட்டில், நீங்கள் ஒரு கார் ரேஸ் விழாவை நடத்துகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரின் மனநிலையிலிருந்து அதைப் பார்த்தால்தான் உங்கள���க்கான விடயம் புரியும்.
"அது சரி, அதற்காக ரேக்ளா ரேஸ்தான் நடத்த முடியுமா?" என்று யாராவது கீழே பதில் கேட்டால், அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
எதிலுமே இந்த வெகுஜன மனநிலை என்பது மிக முக்கியமான காரணி.
எதைச் செய்தாலும் இந்த வெகுஜன மனநிலையைக் கண்ணோட்டத்தில் கொண்டுதான் செய்ய வேண்டும். இப்படி, நான் அறிந்து, இந்த வெகுஜன மனநிலைக்கு எதிரான சில விஷயங்கள் நிகழ்ந்தன.ஆனால் அது முதல்வர��� அவர்களால் அல்ல.
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் நேரத்தில், அப்படி என்னென்ன, எந்தெந்தத் துறைகளில் எப்படி நிகழ்ந்தன? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னின்று வியாபாரமே செய்கிறது என்ற தோற்றத்தை எ��ையெல்லாம் உருவாக்கின? எப்படியெல்லாம் உருவாக்கின? வெகுஜன மனநிலையில் அந்த கோணத்தில் அணுகினாலே விடைகள் எளிதாக கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.
இருப்பினும் சோர்வில்லாமல்
நான் பார்த்த மழைக்கால சென்னை மேயர் போல இன்றும் இயங்கும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
அன்பன்.
சீனு ராமசாமி
@mkstalin
சிந்தித்துப் பார்க்கிறேன்...
ஒருவரை நாத்திகராக உருவாக்க வேண்டும் என்றால் அல்லது அப்��டி ஒருவர் உருவாக வேண்டும் என்றால், அது விஞ்ஞானபூர்வமான தனி உரையாடல்கள், கூட்டு உரையாடல்கள் மற்றும் தத்துவப் பகிர்வுகள் மூலமாகத்தான் சாத்தியமாகும்.
நான் மிகச் சுருக்கமாகச் சொல்வேன்:
"உலகம் படைக்கப்பட்டது" என்று நம்புபவர் ஆத்திகர்;
"உலகம் உருவானது" என்று நம்புபவர் நாத்திகர்.
பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். ஒற்றை செல் உயிரினமான அமீபாவிலிருந்து இந்த உலகம் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று தத்துவங்களின் அடிப்படையில் பேசத் தொடங்கி, 'டயலெக்டிக்கல் மெட்டீரியலிசம்' (Dialectical Materialism) என்கிற இயங்கியல் வாதத்திற்கு வருவார்கள்.
உதாரணமாக, கார்ல் மார்க்ஸ் "மதம் ஒரு அபின், ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சு" என்று சொன்னால், அதற்கான காரணத்தை தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும். அதேபோல, சார்லஸ் டார்வின் தன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்தபோது, அவர் எந்த மத நம்பிக்கையையும் நேரடியாகக் கேலி செய்யவில்லை. மாறாக, இயற்கையின் தரவுகளையும் ஆதாரங்களையும் மட்டுமே தர்க்கப்பூர்வமா�� முன்வைத்தார். அதுவே ஒரு மாபெரும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டது.
இதை விடுத்து, வெறுமனே மத வழிபாடுகளையோ, சடங்குகளையோ அல்லது மக்களின் நம்பிக்கைகளையோ கேலி செய்வதன் மூலம் ஒருவரைப் பகுத்தறிவுவாதியாக மாற்றிவிட முடியாது. ஒருவருக்கு நோய் வரும்போது, அவர் செய்யும் பிரார்த்தனையைக் கிண்டல் செய்வதை விட, மருத்துவ அறிவியலின் அவசியத்தை அவரிடம் பொறுமையாக எடுத்துரைப்பதே உண்மையான விழி���்புணர்வாக மாறும்.
மாறாக, நம்பிக்கைகளைக் கேலி செய்வது கடுமையான எதிர்விளைவுகளையே உண்டாக்கும். கடவுள் மீது நம்பிக்கை உள்ள ஒருவரிடம் கடவுளை நிந்தித்துப் பேசும்போது, அவர் ஒரு மதவெறியராக மாற���விடுகிற அபாயமே இங்கு அதிகம்.
சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதை ஆதரிக்கிறவர்கள், பகுத்தறிவு என்ற பெயரில் எந்தவொரு தனி வழிபாடுகளையோ, சம்பிரதாயங்களையோ, மத உணர்வுகளையோ சிறுமையாகப் பேசவோ, சட்டென்று நேரடியாகத் தாக்கிப் பேசவோ கூடாது. அப்படிப் புண்படுத்தினால், சமூக நல்லிணக்கம் உண்டாகாமல் மதப் பூசல்கள்தான் பெருகும்.
புரிதல்களையும் மாற்றங்களையும் தர்க்கபூர்வமான உரையாடல்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும். இதைத்தான் விஞ்ஞானக் கழகத்தாரும், கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் கம்யூனிச நாடுகளில் கூட வழிபாட்டுத் தலங்கள் தனி மரியாதையுடன் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.
சீனு ராமசாமி.
#Politics #நாத்தீகம் #நம்பிக்கை
#பகுத்தறிவு #கொள்கை #அரசியல்
@svembu We need to fully understand what is Dharma, what is Aram, and what Sanathana actually stands for to decide what should genuinely be followed in life.
@svembu Sir, how do we really understand Sanathana in its true and complete sense? Today, without people understanding it fully, both sides are interpreting it in ways that suit their own narrative, which is only leading to more confusion and chaos. (1/2)